தமிழ்நாடு – 41 – ஆக்கூர் (மாயூரம்)

ஆக்கூர்ஆயிரத்துஒருவர்

நளவெண்பாப்பாடியபுலவர்புகழேந்திஎன்பவர். இவரைஆதரித்தசிற்றரசனோசந்திரன்சுவர்க்கி. தன்னைஆதரித்தவரைமறவாது, நானூறுபாடல்களேஉடையநளவெண்பாவில்நான்குஇடங்களில்பாராட்டுகிறார்புகழேந்தி, கவிச்சக்கரவர்த்திகம்பனைஆதரித்துப்போற்றியவர்வெண்ணெய்நல்லூர்சடையப்பர். பதினாயிரம்பாடல்கள்கொண்டஇராமகதையிலேகம்பன்இவரைப்பத்துஇடங்களிலேதான்பாராட்டுகிறான். இந்தத்தகவலைச்சொல்லிக்கம்பனிடம்ஒருதமிழ்அன்பர்கேட்கிறார்: ‘கவிஞரே! நானூறுபாட்டில்அவர்நான்குஇடங்களில்சந்திரன்சுவர்க்கியைப்புகழ, நீர்பத்தாயிரம்பாடல்களில்பத்துத்தரம்தானேபாராட்டுகிறீர்; இதுதானாஉமதுநன்றிஅறிதல்?’ என்று. இந்தக்கேள்விக்குப்பதில்சொல்லக்கம்பன்சளைக்கவில்லை. ‘உண்மைதான்! புகழேந்திசந்திரன்சுவர்க்கியைநூற்றுவரில்ஒருவராகமதிக்கிறார். நானோவள்ளல்சடையப்பரைஆயிரத்தில்ஒருவராகமதிக்கிறேன்என்பதுதான்அவனதுபதில். இப்படிஒருவரலாறுகர்ணபரம்பரையில். வள்ளல்சடையப்பருக்குஆயிரத்தில்ஒருவர்என்றபெயர்நிலைத்ததோஇல்லையோ? அறியோம். ஆக்கூரில்உள்ளதான்தோன்றிஅப்பருக்குஆயிரத்துஒருவர்என்றபெயர்நிலைத்திருக்கிறது. கதைஇதுதான். சோழஅரசன்ஒருவன்ஆயிரம்பெயருக்குஅன்னம்அளிப்பதுஎன்றுசங்கல்பம்செய்துகொள்கிறான். எண்ணிக்கையில்கொஞ்சமும்குறைத்துசங்கல்பம்தவறிவிடக்கூடாதேஎன்றுஎண்ணிஆயிரம்இலைகளைப்போட்டுவிட்டுவந்திருந்தஅந்தணர்களைஎண்ணுகிறான் (அப்போதெல்லாம்பட்டினிப்பட்டாளம்நாட்டில்கிடையாதே. சாப்பாட்டுக்கேஆள்பிடிக்கத்தானேவேண்டியிருக்கும்) வந்திருப்பவர்களைஎண்ணினால் 999 பேர்கள்தான்இருந்தார்கள். கொஞ்சம்காத்திருந்துபார்த்து, ஒருவருமேவராததுகண்டுமனவருத்தத்தோடேயேவந்தவர்களைஇலைகளில்உட்காரச்சொல்லிப்பரிமாறஏற்பாடுசெய்கிறான். பரிமாறியபின்இலைஒன்றுமேகாலியாகஇருக்கக்காணோம். இதுஎன்ன? என்றுபுரியவில்லைஅரசனுக்கே. உண்டுவிட்டுஅந்தணர்கள்வெளியேபோனபோதுதிரும்பவும்ஒவ்வொருவராகஎண்ணிப்பார்க்கிறான். 999 பேர்தான்இருக்கிறார்கள். இதுஎன்னஅதிசயம்என்றுவியந்துநின்றபோது, இறைவனேஅசரீரியாகஅரசனேநாமேஆயிரத்தில்ஒருவராககிழவேதியவடிவில்வந்துஉன்சமாராதனையில்கலந்துகொண்டோம்மெத்தமகிழ்ச்சியோடுஎன்கிறார். இறைவனதுஅருளைஎண்ணிஅரசன்மகிழ்கிறான். ஆயிரம்திருநாமம்படைத்தவன், ஆயிரத்தில்ஒருவனாகஅங்குவந்திருக்கிறான். இந்தஆயிரத்தொருவராம்இறைவனைக்காணவேஆக்கூருக்குச்செல்கிறோம்நாம்.

ஆக்கூர், மாயூரம்தரங்கம்பாடிரயில்பாதையில்உள்ளஒருசிறியஊர். ஆக்கூர்ரயில்வேஸ்டேஷனில்இறங்கிஅரைமைல்நடந்தால்ஊர்போய்ச்சேரலாம். இல்லை. மாயூரம்ஜங்ஷனில்இறங்கிகாரிலோ, பஸ்ஸிலோ, வண்டியிலோபத்துமைல்கிழக்குநோக்கிச்சென்றாலும்சென்றுசேரலாம். கோயில்கிராமத்தின்கீழ்ப்பகுதியில்இருக்கிறது. சிறியகோயில்தான். ஆனால்அதுநல்லமாடக்கோயில். ‘எண்தோள்ஈசற்றுஎழில்மாடம்எழுபதுசெய்துஉலகாண்டவன்கோச்செங்கட்சோழன். ஏதோமுந்தியபிறவியில்யானையினால்இடர்உற்றவன்ஆனதால், யானைஏறாத, ஏறமுடியாதகோயில்கள்எழுபதுகட்டியிருக்கிறான்என்பதுவரலாறு. இந்தக்கோயிலுக்குத்தான்தோன்றிமாடம்என்றும்இங்குள்ளஇறைவனுக்குத்தான்தோன்றிஅப்பர்என்றும்திருநாமம். மிகப்பழையகோயில்இதுஎன்பதைச்சம்பந்தர்,

நீராரவார்சடையான்,

நீறுடையான், ஏறுடையான்

காரார்பூங்கொன்றையினுள்

காதலித்ததொல்கோயில்

என்றுதானேபாடிஅறிவிக்கிறார். இந்தக்கோயிலில்உள்ளமூர்த்தியும்சுயம்புமூர்த்திதான். அதுதான்தெரிகிறதே, தான்தோன்றிஈசுவரர்என்றுசொல்வதிலேயே. கோயிலுள்சென்றுதான்தோன்றிநாதரைவணங்கிவிட்டு, அவரதுதுணைவியாம்வாள்நெடுங்கண்ணியையும்கண்டுதொழலாம். ஆனால்அன்றுசிற்பிஅமைத்தவாள்நெடுங்கண்ணிஉருவில்ஏதோசிறிதுஊனம்உற்றுவிட்டதால்அவளைவெளியேமண்டபத்தில்கொண்டுவந்துநிறுத்தியிருக்கிறார்கள். பின்னால்இன்னொருஅம்மையைச்சிலையாகவடித்துநிறுத்திஇருக்கிறார்கள்கர்ப்பக்கிருஹத்துக்குள்ளே. இந்தஅம்பிகையின்திருவுருவில்அந்தப்பழையஅம்பிகைமுகத்திலுள்ளகளைஇல்லை. இவர்களோடுநடராஜருக்குஒருதனிச்சந்நிதி. அங்குநடராஜர்சிவகாமிஅம்மையுடன்எழுந்தருளியிருக்கிறார். இவர்களைத்தான்எல்லாக்கோயில்களிலுமேபார்க்கிறோமே. அந்தஆயிரத்தொருவரைஇங்கேவடித்துவைத்திருக்கிறார்களாஎன்றுஅறியத்துடிக்கும்உங்கள்ஆத்திரத்தைஅறிவேன். ஆம்! அவரையுமேசெப்புச்சிலையாகவடித்துமகாமண்டபத்தில்ஒருமேடைமீதுநிறுத்தியிருக்கிறார்கள். ஏதோகிழவேதியராகவந்தார்என்பதுதான்வரலாறு. என்றாலும்மூர்த்தியாகநிற்பவர்கிழவராகஇல்லை. நல்லவாலிபமுறுக்கோடேயேநிற்கிறார். கையில்ஒருகோல்பிடித்திருக்கிறார், கோல்ஏதோநன்குஊன்றிக்கொள்வதற்காகஏற்பட்டஒன்றுஅன்று; அவரதுகௌரவத்துக்குஏற்றஒன்றாகத்தான்இருக்கிறது. கோலின்கைப்பிடியில்அபூர்வவேலை. பிடியின்இரண்டுபுறங்களிலும்இரண்டுகிளிகள்இருக்கின்றன. நல்லசந்திரசேகரமூர்த்தம். இரண்டுகைகளில்மானும்மழுவும். வலதுகையில்ஒன்றுஅபயகரம்; இடதுகைஒன்றுதாழ்ந்துகோலூன்றிநிற்கிறது. நல்லசோழர்காலத்தியசெப்புப்படிமம். இக்கோயிலுக்குச்சம்பந்தர்வந்திருக்கிறார். அப்பர்வந்திருக்கிறார். சம்பந்தரையும்அவருடன்வந்தஅடியவர்களையும்அங்குள்ளவேளாளமக்கள்மிகவும்நன்றாகஉபசரித்திருப்பார்கள்போல்இருக்கிறது. ஆதலால்கோயிலைப்பாடவந்தசம்பந்தர்வேளாளரதுவள்ளன்மையையும்சேர்த்தேபாடுகிறார்.

வாளார்கண்செந்துவர்வாய்

மாமலையான்தன்மடந்தை

தோள்ஆகம்பாகமாப்

புல்கினான்தொல்கோயில்,

வேளாளர்என்றவர்கள்

வள்ளண்மையான்மிக்கிருக்கும்

தாளாளர்ஆக்கூரில்

தான்தோன்றுமாடமே,

என்பதுதான்அவர்பாடியதேவாரம். அப்பரும்தான்தோன்றியப்பரைநாவாரத்துதிக்கிறார்.

கண்ணார்ந்தநெற்றிஉடையார்

போலும், காமனையும்கண்அழலால்

காய்ந்தார்போலும்,

உண்ணாஅருநஞ்சம்உண்டார்

போலும், ஊழித்தீயன்ன

ஒளியார்போலும்,

எண்ணாயிரங்கோடிபேரார்

போலும், ஏறுஏறிச்செல்வர்

இறைவர்போலும்

அண்ணாவும்ஆரூரும்மேயார்

போலும், ஆக்கூரில்

தான்தோன்றிஅப்பனாரே.

என்பதுஅப்பர்பாடியபத்துப்பாட்டில்ஒருபாட்டு. இந்தஆக்கூரில்தான்அறுபத்துமூன்றுநாயன்மார்களில்ஒருவரானசிறப்புலிநாயனார்பிறந்துவளர்ந்துமுத்தியடைந்திருக்கிறார். அடியார்களைஎல்லாம்விருப்புடன்வரவேற்றுஉபசரித்துஅன்னம்அளித்துஅஞ்செழுத்துஓதிஈசன்திருவடிமறவாமல்வாழ்ந்துவந்தவர்அவர்என்பர்சேக்கிழார். சீர்கொண்டவள்ளல்சிறப்புலியல்லவாஅவர்.

இக்கோயிலிலும்கல்வெட்டுக்களுக்குக்குறைவில்லை. அதில்ஒருகல்வெட்டுசோழமன்னர்காலத்தில்கிராமநிர்வாகம்எப்படிநடந்தது, அரசியல்எப்படித்தாழ்ந்திருந்ததுஎன்பதைக்குறிக்கும். விஷயம்இதுதான்: இந்தக்கிராமத்தையடுத்தநடுவில்கோயில்என்றபகுதியில்ராஜராஜவிண்ணகரம்என்றுஒருவிஷ்ணுகோயில்இருக்கிறது. இங்குள்ளபெருமானைத்திருமஞ்சனம்ஆட்டவைகாசிமாதத்தில், சிவன்கோயிலைஅடுத்துள்ளஆனந்தபுஷ்கரணிக்கேஎடுத்துச்செல்லும்வழக்கம்இருந்திருக்கிறது. இந்தவழக்கத்தைமூன்றாம்ராஜராஜனதுஅதிகாரிகள்தடைசெய்திருக்கிறார்கள். கி.பி. 1230 ல்இப்படிஏற்படுத்தியதடைசரியானதன்றுஎன்றுகிராமநிர்வாகிகளானகூற்றப்பெருமக்கள்உணர்ந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம்ராஜராஜவிண்ணகர்எம்பெருமானைக்காவிரிக்குஎடுத்துச்செல்லஏற்பாடுபண்ணிஅதற்குப்பாதைஒதுக்கநிலங்களைத்தானம்கொடுத்திருக்கிறார்கள். இந்தநிலங்களைஇறையிலிநிலங்களாகக்கணக்குகளில்பதிந்திருக்கிறார்கள். இதைக்கல்வெட்டிலும்எழுதிவைத்திருக்கிறார்கள். இன்னுமொருரசமானவரலாறு, மூன்றாம்ராஜராஜன்காலத்தில்முக்கியபடைத்தலைவனானகோப்பெருஞ்சிங்கனைப்பற்றியது. இந்தக்கோப்பெருஞ்சிங்கன்மைசூரிலிருந்தஹொய்சலர்களையெல்லாம்அடக்கிவெற்றிகண்டுகோப்பெருஞ்சிங்கன்பரகேசரிஎன்றவிருதுப்பெயரோடுசோழநாட்டில்காவிரிக்கரையில்உள்ளகோயில்களுக்குவந்துமூர்த்திகளைத்தரிசித்திருக்கிறான். அவன்ஆக்கூருக்குமேவந்திருக்கிறான். ஆக்கூர்மக்கள்அன்றையவரிகளைக்கொடுக்கஇயலாதவர்களாகவெளியூர்சென்றிருக்கிறார்கள்என்பதைஅறிந்து, அவர்கள்கொடுக்கவேண்டியவரிகளையெல்லாம்தள்ளுபடிசெய்து, திரும்பவும்அவர்களைஆக்கூருக்கேஅழைத்துக்குடியேற்றியிருக்கிறான். சோழர்காலத்தில்மாத்திரம்என்ன? பின்னர்வந்தநாயக்கமன்னர்கள்காலத்திலும்ஆக்கூர்முக்கியத்துவம்வாய்ந்தகிராமமாகவேஇருந்திருக்கிறது. கி.பி. 1517-ல்விஜயநகரமன்னன்கிருஷ்ணதேவராயர்தம்முடையதிக்விஜயஞாபகார்த்தமாக, கோயில்நிலங்களுக்குவிதித்திருந்தவரிபதினாயிரம்வராகனைதள்ளுபடிசெய்திருக்கிறார். அப்படிவரித்தள்ளுபடிசெய்யப்பட்டகோயில்களிலேஇந்தஆக்கூர்தான்தோன்றிமாடமும்ஒன்றுஎன்றுவரலாறுகூறுகிறது.

இந்தவரலாற்றையெல்லாம்படித்துத்தெரிந்தநான், இந்தத்தலம்சென்றிருந்தபோது, அன்றுஅந்தநடுவிற்கோயிலில்இருந்தராஜராஜவிண்ணகரத்துஎம்பெருமானைத்தேடித்திரிந்தேன். ஊராரோஅல்லதுசிவன்கோயில்அர்ச்சகர்களோஅந்தக்கோயில்இருக்கும்இடம்சொல்லவில்லை. ஆனால்ஊர்ப்பிள்ளைகள்சிலர்ஊருக்குத்தென்பக்கத்தில்தோப்புக்குள்ளிருந்தஒருசிறுகோயிலுக்குஅழைத்துச்சென்றார்கள். அந்தக்சிறுகோயிலின்கதவோசாத்தியிருந்தது. அக்கோயில்அர்ச்சகரைத்தேடிப்பிடிப்பதோமிக்கசிரமமாகஇருந்தது. அவரைக்கண்டுபிடித்துக்கோயிலைத்திறக்கச்சொன்னால்அந்தக்கோயில்ராஜகோபாலன்கோயில்என்றுதெரிந்தது. கோயிலில்உள்ளகற்சிலைகளைவிடஅங்கிருந்தசெப்புச்சிலைகள்மிக்கஅழகாயிருக்கின்றன.

அன்றுகோகுலத்தில்பசுக்களைமேய்த்துத்திரிந்தகோபாலன்நல்லராஜவடிவத்திலேஉருவாகியிருக்கிறான். பின்னால்நிற்கும்பசுவின்பேரில்சாய்ந்துகொண்டுஆநிரைமேய்க்கும்அழகானமூர்த்தியாகநிற்கிறான். அவன்அணிந்திருக்கும்அணிகளும்பணிகளும்மிகவும்கவர்ச்சிகரமாகஇருக்கின்றன. அவன்மாத்திரந்தானாநிற்கிறான்அங்கே? இல்லை, ஸ்ரீதேவிபூதேவிசமேதனாகநிற்கிறான். சோழர்காலத்துச்செப்புப்படிமங்களுக்குச்சிறந்தஎடுத்துக்காட்டுஇந்தவடிவங்கள். ஏதோஇவையெல்லாம்கவனிப்பாரற்றஒருசின்னக்கோயிலுக்குள்ளேஒளிந்துகொண்டிருக்கின்றன. இப்படிஎத்தனைஎத்தனைவடிவங்களோஇந்தத்தமிழகத்துக்கோயில்களில்? ஆக்கூர்தான்தோன்றிநாதரையும், ஆயிரத்துஒருவரையும்பார்க்கப்போனஇடத்திலேஇந்தராஜகோபாலன்தம்பதிகளையும்பார்க்கக்கிடைத்ததுநமதுபாக்கியமே. இதனால்தான்சம்பந்தர்விண்ணொளிசேர்ஆக்கூர்என்றுபாடுகிறார். இப்படிசம்பந்தர்பாடியபெருமையைச்சேக்கிழார்நினைக்கிறார்.

பொன்னிநீர்நாட்டின்நீடும்

பொற்பதிபுவனத்துஉள்ளோர்

இன்மையால்இரந்துசென்றோர்க்கு,

இல்லைஎன்னாதேஈயும்

தன்மையார்என்றுநன்மை

சார்ந்தவேதியரைச்சண்பை

மன்னனார்அருளிச்செய்த

மறைத்திருஆக்கூர்அவ்வூர்

என்பதுதானேஆக்கூரைப்பற்றிஅவரதுஅறிமுகம். சைவவைணவபேதமில்லாமல்நாமும்எல்லாமூர்த்திகளையும்பார்த்துவணங்கிவிட்டேமேல்நடக்கலாம்.