நனிபள்ளிநற்றுணைநாயகர்
சோழப்பேரரசர்களில்மிக்கபெருமையுடையவன்ராஜராஜன். அவனையும்விடப்புகழ்படைத்தவன்அவன்மகன்ராஜேந்திரன். இவன்கி.பி. 1014 முதல் 1044 வரைஅகண்டதமிழகத்தைஆட்சிபுரிந்திருக்கிறான். தந்தைஇட்டபெயர்மதுராந்தகன்என்றால், முடிசூடியபோதுராஜேந்திரன்என்றுஅபிஷேகப்பெயர்சூடிக்கொள்கிறான். இவனும்தந்தையைப்போலவேபிறநாடுகளின்பேரில்படைகொண்டுசென்றுஅந்தந்தஅரசர்களைவெற்றிகண்டுதமிழகத்தைமிகவும்விரிவுடையதாகஆக்கியிருக்கிறான்.
இவன்ஆட்சியின்கீழிருந்தசோழசாம்ராஜ்யம்இன்றையச்சென்னைராஜ்யத்தையும், மைசூரில்ஒருபகுதியையும், ஈழநாட்டையும்கொண்டபெரியராஜ்யமாகஇருந்திருக்கிறது. இவனுடையஆசைஎல்லாம்வங்காளம்முதலியவடநாடுகளையும்வென்றுகங்கையையும்காவிரியையும்இணைத்துவிடுவதுஎன்பதுதான். அதனால்வடக்குநோக்கிப்படையெடுத்துஅங்குள்ளஅரசர்களைவென்றுமகிபாலன்என்பவனதுதலையில்கங்கைநீர்நிரப்பியகுடம்ஒன்றைஏற்றித்தன்தலைநகருக்கேகொண்டுவந்திருக்கிறான். இப்படிக்கங்கையைக்கொண்டுவந்தபேரரசனைக்கங்கைகொண்டான்என்றேபாராட்டியிருக்கிறார்கள். இத்துடன்விட்டானாஇவன்? கப்பற்படைகளைக்கடல்நடுவில்செலுத்திஇன்றையமலேயாவில்ஒருபகுதியானகடாரத்தையும்கைப்பற்றியிருக்கிறான். அதனால்தானேகல்வெட்டுக்களில்எல்லாம் ‘பூர்வதேசமும், கங்கையும்கடாரமும்கொண்டகோப்பரகேசரிவர்மன்‘ என்றுஇவன்மெய்க்கீர்த்திபாடப்பட்டிருக்கிறது. இப்படிஇவன்கங்கையையும்கடாரத்தையும்கொண்டதை,
களிறுகங்கைநீர்உண்ண, மண்ணையில்
காய்சினத்தோடகலவுசெம்பியன்
குளிருதெண்திரைகுணகடாரமும்
கொண்டுமண்டலம்குடையுள்வைத்ததும்
என்றுஜயங்கொண்டார், கலிங்கத்துப்பரணியில்பாராட்டியிருக்கிறார். கங்கைகொண்டதன்ஞாபகார்த்தமாகக்கங்கைகொண்டசோழிச்சரம்எழுந்துநிற்பதைஅறிவோம். மேலும்தெற்கேதிருநெல்வேலிவரைஇவன்யாத்திரைசெய்திருக்கிறான்என்பதைவலியுறுத்தஅங்கேகங்கைகொண்டான்என்றேஒருசிறியகிராமத்துக்குப்பெயரிட்டுஇருக்கிறான்என்பதையும்அறிவோம். ஆனால்கடாரம்கொண்டவெற்றியைநிலைநிறுத்தஒருஞாபகச்சின்னம்நிறுவினான்என்றுசரித்திரம்திட்டமாகக்கூறவில்லைதான். கங்கைகொண்டதைவிட, கடல்கடந்துசென்றுகடாரம்கொண்டதுதானேபெரியவெற்றி. தன்னுடையசிறந்தகப்பற்படையைக்கடல்நடுவில்செலுத்திக்கடாரத்துஅரசனாகியசங்கிராமவிஜயோத்துங்கவர்மனைப்போரில்புறங்கண்டு, அவனதுபட்டத்துயானையையும்பெரும்பொருளையும்வித்யாதரதோரணத்தையும்கவர்ந்துகொண்டுஸ்ரீவிஜயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், பப்பாளம்முதலியஇடங்களைக் (ஆம்! இன்றையமலேயா, சுமத்ராமுதலியதீவுகளில்உள்ளநகரங்களின்அன்றையப்பெயர்களேஇவை) கைப்பற்றினான்என்றுஇவன்மெய்க்கீர்த்திசிறப்பாகச்சொல்கிறது, கடாரம்இன்றையமலேயாவின்மேல்கரையிலுள்ள ‘கெடா‘ என்றபெயருடையநகரமேஎன்றும்தெரிகிறோம். இப்படிக்கங்காநதியும், கடாரமும்கைக்கொண்டுசிங்காதனத்திருந்தசெம்பியர்கோனை, கங்கைகொண்டான்என்றுஎப்படிஅழைத்தார்களோ, அப்படியேகடாரம்கொண்டான்என்றும்அழைத்திருக்கவேண்டுமே. கங்கைகொண்டசோழீச்சரம்போல், கடாரம்கொண்டசோழீச்சரம்ஒன்றும்உருவாக்கியிருக்கவேண்டுமே. அப்படிஉருவாக்காமலாஇருந்திருப்பான்என்றுஎண்ணிக்கொண்டேசரித்திரஏடுகளைப்புரட்டினேன். சோழநாட்டில்உள்ளதலங்களின்பெயர்களைஅலசிஆராய்ந்தேன். கண்டுபிடித்தேன்ஓர்உண்மையை, தஞ்சைஜில்லாவிலேமாயூரத்துக்குவடகிழக்கேஎட்டுமைல்தூரத்தில்ஒருசிறியஊர் ‘புன்செய்‘ என்றபெயரில்இருக்கிறது. இந்தஊருக்கேதேவாரத்தில்நனிபள்ளிஎன்றபெயரும்வழங்கியிருக்கிறது. ஆனால்அந்தவட்டாரத்தில்விசாரித்தால்புன்செய்என்றபெயரும்தெரியாது, நனிபள்ளிஎன்றபெயரும்தெரியாது. மக்கள்இந்தஊரைஅழைப்பதுஎல்லாம் ‘கிடாரம்கொண்டான்‘ என்றபெயரில்தான். கடாரம்கொண்டான்என்றமிக்கபெருமையோடுவழங்கவேண்டியபெயர்எப்படிச்சிதைந்துகிடாரம்கொண்டான்ஆகிவிட்டதுஎன்றுதெரிகிறபோதுகொஞ்சம்வருத்தம்ஏற்படவேசெய்கிறது. இன்றுநாம்இந்தக்கிடாரம்கொண்டான்என்னும்நனிபள்ளிக்கேசெல்கிறோம்.
இந்தநனிபள்ளிக்குமாயூரத்திலிருந்துகாரிலோ, வண்டியிலோபோகலாம். இல்லை, மாயூரம்–தரங்கம்பாடிரயில்வழியில், செம்பொன்னார்கோயில்ஸ்டேஷனில்இறங்கிவண்டிவைத்துக்கொண்டும்செல்லலாம். நல்லமண்ரோடுதான். ஆதலால்விரைவில்போய்விரைவில்வந்துவிடமுடியாது. கொஞ்சம்சாவதானமாகவேபோய்த்திரும்பவேண்டும். செம்பொன்னார்கோயில், இல்லை, அந்தச்செம்பொன்செய்கோயில்சேர்ந்ததுமேஅங்குகோயில்கொண்டிருக்கும்சொர்ணபுரிஈசுவரரையும்மருவார்குழலியையும்கண்டுவணங்கலாம். ‘தேவர்சென்றுவணங்கும்செம்பொன்பள்ளியான்மூவரால்முதலாய்நின்றமூர்த்தி‘ என்பர்அப்பர், இக்கோயிலில்விசேஷமாகக்காணவேண்டியவைஒன்றும்இல்லைதான். என்றாலும்கர்ப்பக்கிருஹத்தில்இருக்கும்மருவார்குழலிமற்றையக்கோயில்களில்காண்பதுபோன்றுநான்குதிருக்கரங்களோடும்சமபங்கநிலையிலும்நின்றுகொண்டிருப்பவள்அல்ல. மதுரைமீனாக்ஷியைப்போல்இரண்டேதிருக்கரம். அதிலும்இடக்கரம்ஒயிலாகத்தொங்கவிடப்பட்டும், வலக்கரம்உயர்ந்துசெண்டேந்தியும்இருக்கும். செப்புச்சிலையில்வடிக்கும்அழகை, கற்சிலையிலேயேஅமைத்துப்பார்த்துமகிழ்ந்திருக்கிறான்சிற்பி. சந்தணக்காப்பிட்டுக்கண்குளிரக்கண்டால்அம்மையின்அழகுமுழுவதையும்அப்படியேஅள்ளிப்பருகலாம்.
மருவார்குழலியைக்கண்டுதரிசித்ததெம்போடேயேநனிபள்ளிநோக்கிநடக்கலாம். போகிறவழியிலேயேஇந்தநனிபள்ளிதான், திருஞானசம்பந்தரதுதாயாகியபகவதிஅம்மையார்பிறந்ததலம்என்பார்கள். சின்னஞ்சிறுபிள்ளையாய்த்தாளம்ஏந்திப்பாடிக்கொண்டேசென்றஞானசம்பந்தர், தம்பாட்டன்பாட்டிவீட்டுக்குவராமலாஇருந்திருப்பார்? வந்திருக்கிறார், அங்குள்ளநற்றுணைஅப்பரைப்பாடியும்இருக்கிறார்.
தோடுஒருகாதனாகி
ஒருகாதுஇலங்கு
சுரிசங்குநின்றுபுரளக்,
காடுஇடமாகநின்று
கனலாடும்எந்தை
இடமாயகாதல்நகர்தான்,
வீடுஉடன்எய்துவார்கள்
விதிஎன்றுசென்று
வெறிநீர்தெளிப்பவிரலால்
நாடுஉடன்ஆடுசெம்மை
ஒலிவெள்ளம்ஆரும்
நனிபள்ளிபோலும்நமர்காள்
என்பதேசம்பந்தர்பாடியபாடல். நாமும்சம்பந்தர்பாடியபாடல்களைப்பாடிக்கொண்டேசெல்லலாம். (நான்இந்தக்கோயிலுக்குச்சென்றதுநான்குவருஷங்களுக்குமுன். அன்று
நனிபள்ளிவிமானம்
கோயில்கவனிப்பாரற்றுக்கிடந்தது. கோபுரவாயிலுக்குக்கதவுகூடஇல்லை . ஏதோதட்டிவைத்துஅடைத்திருந்தார்கள். நாடெல்லாம்கும்பாபிஷேகம்நடக்கும்இந்நாளில், இக்கோயிலும்செம்மைசெய்யப்பட்டிருக்கிறதோஎன்னவோ?’) இந்தக்கோயில்உள்ளேஇருக்கிறமூர்த்தியைவிடவெளியேகோஷ்டத்தில்
இருப்பவர்கள்பிரமாதம். கர்ப்பக்கிருஹத்தைச்சுற்றியபிராகாரம்ஒன்றேஒன்றுதான். அந்தப்பிராகாரமும், கோயிலின்கர்ப்பக்கிருஹமும்முழுக்கமுழுக்கக்கல்லாலேயேகட்டப்பட்டவை. ராஜேந்திரன்தன்கடாரவெற்றியைக்கொண்டாக்கட்டியிருக்கவேண்டும். இக்கோயிலின்மேற்குநோக்கியகோஷ்டத்தில்நல்லலிங்கோத்பவர்இருக்கிறார். தெற்குக்கோஷ்டங்களில்தக்ஷிணாமூர்த்தியும்விநாயகரும்இருக்கிறார்கள். விநாயகர்நல்லகாத்திரமானஉரு. பருத்ததொந்தியுடன்நன்றாகச்சப்பணம்கூட்டியேஉட்கார்ந்துவிடுகிறார்அவர். வடபக்கத்துக்கோஷ்டத்திலேபிரம்மாநின்றதிருக்கோலம். துர்க்கைமிகவும்கம்பீரமாகநிற்கிறாள், அங்குசக்கரம்ஏந்தியகையாளாய். ஒருகரத்தால்அபயம்அளித்துஒருகையைஇடுப்பில்வைத்து, ஒருகால்மடக்கிஒருகாலைநீட்டி, கனகச்சித
அறுமாமுகன்
அழகோடுஉருவாகியிருக்கிறாள்கல்லிலே. இரண்டுமுனிவர்கள்காலடியிலேவணங்கிநிற்கிறார்கள். கலைஉலகிலேஒருஅற்புதசிருஷ்டி. இந்தஐந்துவிக்கிரகங்களைஉங்களுக்குஅறிமுகப்படுத்தவே, இந்தக்கோயிலுக்குஉங்களைஅழைத்துவந்திருக்கிறேன்இத்தனைதூரம்.
இவர்களையெல்லாம்கண்டுகளித்தபின்னரேநற்றுணைஅப்பரையும், மலையான்மடந்தையையும்தொழுதுவணங்கக்கோயிலுள்நுழையலாம். நான்போனபோதுஅர்ச்சகர்அருமையாகஎன்னைஅர்த்தமண்டபத்துக்கேஅழைத்தார். நானோமிக்கபணிவுடனே, மகாமண்டபத்திலேயேநின்றுகொண்டுதரிசித்தேன். இந்தப்பணிவுக்குக்காரணம் ‘என்றும்பணியுமாம்பெருமை‘ என்பதனால்அல்ல. அர்த்தமண்டபத்தின்முன்வாயில்நிலையில்மேல்தளத்துக்கல்இரண்டாகப்பிளந்துஎப்போதுகீழேவிழுவோம்என்றுகாத்துக்கொண்டிருந்ததைநான்கண்டுவிட்டகாரணமே. அர்ச்சகருக்குஇருந்தமனத்துணிச்சல்எனக்குஇல்லை. ஆதலால்வெளியேநின்றேதரிசித்தேன். இந்தக்கோயிலில்சிலசெப்புப்படிவங்கள்கவனிப்பாரற்றுக்கிடக்கின்றன. அவைகளில்ஒன்றுமயிலேறிவிளையாடும்மாமுருகன்திருஉரு. இந்தமுருகனுக்குப்பச்சைமயில்வாகனமும்பன்னிரண்டுதிண்தோள்களும்இருக்கின்றன. ஆனால்அச்சம்அகற்றும்அயில்வேலைக்காணோம். அதோடுஏதோகண்ணைமூடித்தியானத்தில்இருப்பவன்போல்இருக்கிறான். ‘கருணைத்திருஉருவாய்காசினியில்தோன்றியகுருபரன்‘ இவன்என்றேகூறத்தோன்றுகிறதுஎனக்கு. நல்லஅழகுவாய்ந்தசெப்புப்படிமம்.
இனிகோயிலைவிட்டுவெளியேவரலாம். இங்குகோயில்கொண்டிருக்கும்நற்றுணைஅப்பரை, நனிபள்ளிஅடிகளைஅப்பர்பாடியிருக்கிறார்; சுந்தரர்பாடியிருக்கிறார். சமணராய்இருந்துமாறியஅப்பர்அடிகளை, சமணர்அரசனானபல்லவமகேந்திரவர்மன்நஞ்சுகொடுத்துக்கொல்லஏற்பாடுபண்ணியிருக்கிறான். ஆனால்அந்தநஞ்சும்இறைவன்அருளால்அப்பருக்குஅமுதமாகவேமாறியிருக்கிறது. இதைக்கூறுகிறார், அப்பர்இந்தத்தலத்துக்குரியபதிகத்தில்.
துஞ்சுஇருள்காலைமாலை
தொடர்ச்சியைமறந்துஇராதே,
அஞ்சுஎழுத்துஓதின்நாளும்
அரன்அடிக்குஅன்பதாகும்,
வஞ்சனைப்பால்சோறுஆக்கி
வழக்கிலாஅமணர்தந்த
நஞ்சுஅமுதாக்குவித்தார்
நனிபள்ளிஅடிகளாரே!
என்பதுதான்அப்பர்தேவாரம். நல்லஅகச்சான்றுதரும்பாடல்அல்லவா?
இத்தலம்நல்லசரித்திரப்பிரசித்திஉடையதுஎன்பதைமுன்னரேஅறிந்தோம். இக்கோயிலில்பதினெட்டுக்கல்வெட்டுக்கள்இருக்கின்றன. ராஜேந்திரன்வீரவெற்றியைக்குறிக்கும்கல்வெட்டுக்கள்உண்டு. அவன்காலத்தில்ரிஷபவாகனதேவர்க்குத்திருவிழாநடத்தஇறையிலிஒப்பந்தம்செய்யப்பட்டதெல்லாம்குறிக்கப்பட்டிருக்கிறது. இன்னும்விஜயநகரத்துகிருஷ்ணதேவராயன்மெய்க்கீர்த்திகளையெல்லாம்இக்கல்வெட்டுக்கள்கூறுவதால், கோயில்முன்பகுதிகோபுரம்எல்லாம்நாயக்கமன்னர்கள்காலத்தில்கட்டப்பட்டிருக்கவேண்டும். இந்தவட்டாரமேஆதியில்பாலையாய்இருந்து, பின்னர்ஞானசம்பந்தரால்நெய்தல்நிலமாக்கப்பட்டு, அதற்கும்பின்னர்காடாகவும்வயல்களாகவும்மாறியிருக்கின்றன. இந்தத்தகவல்நமக்குப்பதினோராம்திருமுறைஆளுடையபிள்ளையார்அந்தாதியிலிருந்துகிடைக்கிறது. ‘நாதன்நனிபள்ளிசூழ்நகர்கானமாகியஅஃதேபோதில்மலிவயல்ஆக்கியகோன்‘ என்றேஞானசம்பந்தர்பாராட்டப்படுகிறார், இதுஎன்னபிரமாதமானகாரியம்அவருக்கு. எலும்பையேபெண்ணுருஆக்கியவர்ஆயிற்றே. பாலையைவயலாகஆக்குவதுதானாபிரமாதமாககாரியம்? தாயார்பிறந்தஊரைநல்லவளமுடையதாக்குவதில்அவருக்குஆவல்இராதா?