கோனரிராஜபுரம்நடராஜர்
உயரத்தில்சிவகாமி. இருவரும்செப்புச்சிலைவடிவில்இருந்தாலும்அவர்கள்நிலைத்தேநிற்கிறார்கள், உற்சவகாலத்தில்வெளியேஎடுப்பதுதெருவீதிகளில்உலாவரப்பண்ணுவதுஎன்பதெல்லாம்சாத்தியமேஇல்லை. இதற்காகவேஒருசிறுநடராஜரையும்செய்துவைத்திருக்கிறார்கள். இரண்டுநடராஜரையும்ஒப்பிட்டுநோக்கினால்தான், கலைஅழகுஎன்றால்என்னஎன்பதுதெரியும். காத்திரமானபெரியநடராஜர்; கலைஉலகிலேயேபெரியவர். இன்னும்திரிபுராந்தகர், திரிபுரசுந்தரிஇருவரும்செப்புச்சிலைவடிவில்இருக்கிறார்கள். இவர்களைத்தவிரமணக்கோலநாதர்வேறேஇருக்கிறார். எல்லோருமேநல்லகலைஅழகுவாய்ந்தவர்கள்.
முன்புசெங்கல்லால்கட்டப்பட்டிருந்தகோயிலைக்கற்றளியாக்கியபெருமை, அந்தச்செம்பியன்மாதேவிஎன்றபெருமாட்டியைச்சேரும். அவள்தன்கணவர்கண்டராதித்தர்சிவலிங்கத்துக்குப்பூஜைசெய்வதுபோலஒருசித்திரம்அமைத்துவைத்திருக்கிறாள். சிறியனசிந்தியாதுபெருஉடையாருக்குப்பெரியகோயில்எடுப்பித்தராஜராஜனேஇக்கோயிலில்உள்ளபெரியநடராஜனையும்உருவாக்கிஇருக்கவேண்டும்என்றுதோன்றுகிறதுஎனக்கு. அவனைத்தவிரஇவ்வளவுபெரியஅளவில்உருவம்அமைக்கவேண்டும்என்றுவேறுயாருக்குத்தோன்றப்போகிறது? இங்குள்ளதிருக்கோலங்களைக்கண்டுவணங்கிமேலும்இரண்டுமைல்தெற்குநோக்கிநடந்தால்திருவீழிமிழலைவந்துசேர்வோம். வழிகொஞ்சம்நீளமானதுதான்என்றாலும்அதற்குத்தான்தக்கபலன்கிடைத்துவிட்டதே. கோனேரிராஜபுரம்நடராஜரைத்தரிசிக்கும்வாய்ப்புஎளிதில்கிடைக்கக்கூடியதாஎன்ன?
கோனேரிராஜபுரத்துஉமாமகேசுவரர்சந்நிதிமேற்குநோக்கிஇருந்தால், இந்தவீழிமிழலைநேத்திரஅர்ப்பணஈசுவரர்சந்நிதிகிழக்குநோக்கியிருக்கும். (நேத்திரத்தைஅர்ப்பணம்பண்ணியவர்திருமால், ஆனால்நேத்திரஅர்ப்பணஈசுவரர்என்றபெயர்இத்தலத்தில்உள்ளஇறைவனுக்குநிலைத்திருக்கிறது. அர்ப்பணம்பண்ணியவருக்குப்பெயர், புகழ்ஒன்றும்காணோம். அர்ப்பணம்ஏற்றுக்கொண்டவருக்கேபுகழ், பிரபலம்எல்லாம். உலகஇயல்பேஅப்படித்தானேஇருக்கிறது) இங்கும்கோயில்முன்ஒருகுளம்உண்டு. விஷ்ணுதீர்த்தம்என்றுபெயர். குளத்தில்இறங்கி, நடந்தஅலுப்புத்தீரக்கால், கைசுத்திசெய்துகொண்டுகோயிலுள்நுழையலாம். இத்தலத்தின்பிரதானவாயிலில்உள்ளராஜகோபுரத்தைவிட, கர்ப்பக்கிருஹத்தின்மேல்இருக்கும்விமானமேசிறப்பானது. அதற்குவிண்ணிழிவிமானம்என்றேபெயர். சக்கரம்பெற்றதிருமால்பெரியதொருவிமானத்தையேவைகுண்டத்திலிருந்துகொண்டுவந்துஇக்கோயிலைஅலங்கரித்திருக்கிறார்என்பர்.
தன்தவம்பெரியசலந்தரன்
உடலம்தடிந்தசக்கரம்
எனக்குஅருள், என்று
அன்றுஅரிவழிாட்டு
இழிச்சியவிமானத்துஇறைவன்
பிறைஅணிவிமானம்
அதுஎன்பார்சம்பந்தர். இந்தவிமானத்திலேதான்சம்பந்தர், சீகாழியில்தன்னைஆட்கொண்டதோணியப்பரைத்தரிசித்திருக்கிறார். சீகாழிக்குவரவேண்டும்என்றுஅழைத்தஅடியவர்களுக்கும்காட்டிஇருக்கிறார். “பொன்னியல்மாடம்நெருங்குசெல்வுபுகலிநிலாவியபுண்ணியன், மிழலைவிண்ணிழிகோயில்‘ விரும்பிவந்திருக்கிறார். அடியவன்செல்லும்இடமெல்லாம்ஆண்டவனும்தொடர்ந்தேவருகிறான்என்பதுதான்எவ்வளவுஎளிதாகவிளங்குகிறதுநமக்கு. ஆலயத்தின்முதற்சுற்றிலேஇருக்கும்நூற்றுக்கால்மண்டபம்சிற்பவேலைக்குஒருசிறந்தஎடுத்துக்காட்டு. அங்குகல்லாலேயேஅமைத்துள்ளகொடுங்கைகளும், வளைவுகள்நிரம்பியகல்தூண்களும், வௌவால்ஒட்டுமண்டபமும்பார்த்துக்கொண்டுநின்றுவிடுதல்கூடாது. கோயிலுக்குள்சென்றுநேத்திரார்ப்பணேசுரரையும்அவர்தம்துணைவிசுந்தரகுசாம்பிகையையும்முதலில்வணங்கலாம். அப்படிவணங்கும்போதேமூலலிங்கத்துக்குப்பின்கர்ப்பக்கிருகச்சுவரில்பார்வதிபரமேசுவரருடையதிருஉருவங்கள்இருப்பதையுமேகாணலாம். இனிமகாமண்டபத்துக்குவந்துஅங்குதெற்குநோக்கியஒருபீடத்தில்எழுந்தருளியுள்ளகல்யாணசுந்தரமூர்த்தியைத்தரிசிக்கலாம். இவரேகார்த்தியாயனமுனிவரின்மகளாகஅவதரித்தகார்த்தியாயனியைமணந்துகொண்டு, என்றுமே ‘மாப்பிள்ளைச்சாமி‘யாகநிற்பவர், இவரதுதிருவடியிலேதான்மால்அருச்சித்ததாமரைக்கண்பொறிக்கப்பட்டிருக்கிறது. அதையுமேஅர்ச்சகர்களைக்காட்டச்சொல்லிக்கண்டுமகிழலாம். அவர்கையிலேசெண்டுஎன்னும்ஆயுதம்இருப்பதைக்காணலாம். மாப்பிள்ளைக்கோலத்தில்இருப்பவர்க்குஏன்இந்தச்செண்டுஎன்றுதெரியவில்லை!
இத்தலவரலாற்றிலேதிருமால்கண்ணிடத்துஅருச்சித்தசெயலுக்குஅடுத்தபடிசிறப்புடையதுசம்பந்தருக்கும், அப்பருக்கும்இறைவன்படிக்காசுஅருளியதுதான்.
வீழிமிழலைநேத்திரஅர்ப்பணஈஸ்வரர்
ஞானசம்பந்தரும், அப்பரும்சேர்ந்தேவருகிறார்கள்இத்தலத்துக்கு, இவர்கள்வரும்போதுநாடெல்லாம்பஞ்சம். மக்கள்எல்லாம்உண்ணஉணவில்லாதுமயங்குகிறார்கள். இந்தநிலையில்இவர்களுடன்வந்தஅடியவர்களுக்குஉணவுஅளிப்பதுஎன்பதும்பெரியபிரச்சினையாகவேஇருக்கிறது. இரண்டுசமயகுரவர்களும்கோயிலுள்சென்றுஇறைவனைவணங்குகிறார்கள்; திருப்பதிகங்கள்பாடுகிறார்கள். மறுநாள்காலையில்கிழக்குபலிபீடத்தில்ஒருபடிக்காசும்இருக்கிறது. ஒருவருக்கும்தெரியாமல்இரவோடுஇரவாகவே, இறைவன்கட்டளைப்படிபடிக்காசுகளைவைத்தருளியபடிக்காசுப்பிள்ளையாரும்மேற்குபலிபீடத்தருகிலேயேஉட்கார்ந்துகொள்கிறார். விடிந்தபின்பலிபீடங்களில்படிக்காசுஇருப்பதைஅறிந்து, சம்பந்தரும், அப்பரும்எடுத்துஅவற்றைக்கொண்டுஅடியவர்களுக்குஅமுதளிக்கிறார்கள்.
இப்படிப்படிக்காசுஅருளுவதில்கூடஒருசிறுவிளயைாட்டுச்செய்கிறார்இறைவன். அப்பர்வாசிஇல்லாகாசு (கமிஷன்இல்லாதுமாற்றக்கூடியகாசு) பெறுகிறார். சம்பந்தர்பெறும்காசோவாசியுடையது. சம்பந்தர்விடுவாரா?
வாசிதீரவேகாசுநல்குவீர்
மாசில்மிழலையீர், ஏசல்இல்லையே!
என்றுபாடுகிறார். அதன்பின்அவருக்குமேவாசிஇல்லாக்காசேகிடைக்கிறது. சம்பந்தருக்குவாசியுள்ளகாசையும்அப்பருக்குவாசியில்லாதகாசையும்ஏன்கொடுக்கிறார்இறைவன். இந்தக்கேள்விக்குப்பதில்சொல்கிறார்சேக்கிழார்.
திருமாமகனார்ஆதலினால்,
காசுவாசியுடன்பெற்றார்.
கைத்தொண்டர்ஆகும்படியினால்
வாசுஇல்லாக்காசுபடி
பெற்றுஉவந்தார்வாகீசர்
என்பார். உண்மைதானே. தொண்டுபுரியும்அன்பனுக்குவாசியுள்ளகாசுகொடுத்தால்அவன்கடைத்தேறுவதுஏது? நாட்டில்பஞ்சம்நீங்கும்வரையில்படிக்காசுகள்பெற்றிருக்கிறார்கள்இருவரும். (நமதுநாட்டின்நிதிநிலைமையையும்ஐந்தாண்டுத்திட்டச்செலவுகள்பெருகுவதையும்பார்த்தால்இப்படிஇரண்டுஅடியவரும், இப்படிப்படிக்காசுகொடுக்கும்பெருமானும்இன்றுஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுஎண்ணத்தோன்றுகிறது.) இப்படிஇறைவன்படிக்காசுகொடுக்கிறான்என்றஉடனேயே, இருசமயகுரவர்களும்அந்தத்தலத்திலேயேஇரண்டுமடங்கள்அமைத்துக்கொண்டுநீண்டகாலம்தங்கியிருக்கின்றனர். வடக்குவீதிகீழைக்கோடியில்சம்பந்தர்மடமும், மேலைக்கோடியில்அப்பர்மடமும்இருக்கின்றன. இன்னும், இவர்களுக்குக்காசுகொடுத்தவரலாற்றையெல்லாம்பின்னால்இத்தலத்துக்குவந்தசுந்தரர்கேட்டிருக்கிறார். தமிழோடுஇசைகேட்கும்ஆசையினால்தானேஇறைவன்இவர்களுக்குக்காசுகொடுத்திருக்கிறான்என்பதையும்தெரிந்திருக்கிறார். இவரோதாம்போகும்இடங்களில்எல்லாம்இறைவனிடம்கூசாமல்கைநீட்டுபவர். இங்கேசும்மாஇருப்பாரா? இவருமேநீட்டியிருக்கிறார்.
திருமிழலைஇருந்துநீர்தமிழோடு
இசைகேட்கும்இச்சையால்
காசுநித்தம்நல்கினீர்
அருந்தண்வீழிகொண்டீர்
அடியேற்கும்அருளிதிரே
என்றேபாடியிருக்கிறார். ஆசாமிதான்பொல்லாதவர்ஆயிற்றே. காசுபெறாமலாமேலேநடந்திருப்பார்?
இக்கோயிலில்மதுரைகொண்டகோப்பரகேசரிவர்மன்ராஜராஜன்முதல்மூன்றாம்ராஜேந்திரன்வரையுள்ளசோழமன்னர்கள், ஜடாவர்மன், சுந்தரபாண்டியன்இன்னும்விஜயநகரமன்னனானவீரப்பண்ணஉடையார்கள்காலங்களில்எல்லாம்ஏற்படுத்தியநிபந்தங்களைப்பற்றியகல்வெட்டுக்கள்நிறையஇருக்கின்றன. கல்வெட்டுக்களில்இறைவனைத்திருவீழிமிழலைஉடையான்என்றேகுறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்குள்ளதிருமேனிகளில்பிரசித்தமானவைநின்றருளியநாயனார்நெறிவார்குழல்நாச்சியார்என்றும்தெரிகிறது. இன்னும்திருவீழிமிழலைஉடையமகாதேவர்கோயிலைப்பொன்வேய்ந்தவன்விஜயராஜேந்திரதேவர்அணுக்கியார்பல்லவன்பாட்டாளிநங்கைஎன்றுஒருகல்வெட்டுக்கூறுகிறது. திருமுறைகள்ஓததிதிருக்கைகொட்டிமண்டபம்ஒன்றைக்கட்டிஅதற்குநிலநிபந்தம்ஏற்படுத்தியிருக்கிறான்ஜடாவர்மன்சுந்தரபாண்டியன். இன்னும்எத்தனைஎத்தனையோதகவல்கள். இதையெல்லாம்தெரிந்துவீழிமிழலைவிகர்தர்தம்அருளும்பெற்றுவிட்டால்அங்கிருந்துமீண்டுவருவதேஅரிதாகஇருக்கும். ‘அறிவதுஅறிகிறார், வெறிகொள்மிழலையீர்! பிரிவதுஅரியதே‘ என்பதுதானேசம்பந்தர்தேவாரம்.