தமிழ்நாடு – 52 – குத்தாலம்

குத்தாலம்சண்டீசர்

இங்குள்ளகோயில்மேற்கேபார்த்தசந்நிதி. கோயில்ராஜகோபுரத்தைக்கடந்ததும்நம்முன்நிற்பதுஉத்தாலமரமும்அதைச்சுற்றிக்கட்டியபீடமும்தான். அந்தமரத்துஅடியிலேஇரண்டுதிருவடிகள் (ஆம்! பாதரக்ஷைதான் ) இருக்கின்றன . இறைவியைமணக்கவந்தஇறைவன்பாதரக்ஷைகளைக்கழற்றிவிட்டுத்திருமணம்செய்திருக்கிறார். திரும்பஅந்தர்த்தியானமாகும்போதுபாதரக்ஷையைக்காலில்மாட்டிக்கொள்ளமறந்திருக்கிறார். அவர்மணந்தஅந்தநறுஞ்சாந்துஇளமுளையாளும்அத்திருவடிநிலைக்குஎதிர்ப்புறமாகவேஇருக்கிறாள், பக்கத்திலேயேதெற்குநோக்கியவளாகஅத்தலத்துஇறைவியானஅரும்பன்னவளமுலையாள்சந்நிதி. இன்னும்அந்தமுற்றப்பெருவழியிலேயேதலத்துப்பிள்ளையார்துணைவந்தவிநாயகர்இருக்கிறார். இவர்தான்அத்தன்அம்மையைமணக்கவந்தபோதுஉடன்வந்திருக்கிறார். (நல்லபிள்ளை, தகப்பனார்தாயாரைத்திருமணம்செய்துகொள்ள, ஆம். இரண்டாம்தடவையாகத்தான்வரும்போதுதனயனானஇவரும்அல்லவாஉடன்வந்திருக்கிறார்.) இந்தத்தாயார், பிள்ளையையெல்லாம்வணங்கியபின்உட்கோயிலில்நுழையலாம். வாயிலில்இருக்கும்துவாரபாலகர்கள்கம்பீரமானவர்கள்; நல்லவண்ணவண்ணஉடைகளைஅணிந்தவர்கள். அவர்களிடம்அநுமதிபெற்றுக்கொண்டேஅர்த்தமண்டபம்சென்றுலிங்கத்திருவுருவில்உள்ளசொன்னவாறுஅறிவாரைத்தரிசிக்கலாம். இவர்நல்லவரப்பிரசாதிஎன்பதையும்அறியலாம். ‘தொட்டதுதுலங்காது; தீண்டியபொருள்கள்யாவுமேதீய்ந்துசாம்பலாகும்என்றபழிநீங்கஅக்கினிஇத்தலத்தில்வழிபட்டுப்பழிபோக்கிக்கொண்டிருக்கிறார்.

விக்கிரமசோழனுடையமனைவிகோவளைக்குக்குட்டம்நீங்கியிருக்கிறதுஇங்கே. வருணனதுசலோதரம்என்றபெருவியாதிநீங்கியதும்இங்கேதான். இன்னும்சூரியனுக்கும்பரதமுனிக்கும்மற்றும்பலருக்கும்இருமைஇன்பத்தைஅளித்தவர்இத்தலத்துஇறைவனேஎன்றுதலவரலாறுகூறும். இத்தலத்துக்கு, சம்பந்தர், அப்பர், சுந்தரர்மூவரும்வந்திருக்கிறார்கள்; பதிகங்கள்பாடிஇருக்கிறார்கள்.

உன்னிஎப்போதும்நெஞ்சுள்

ஒருவனைஏத்துமின்னோ,

கன்னியைஒருபால்வைத்து

கங்கையைச்சடையுள்வைத்து

பொன்னியின்நடுவதன்னுள்

பூம்புனல்பெழிந்துதேன்றும்

துன்னியதுருத்தியானைத்

தொண்டனேன்கண்டவாறே.

என்பதுஅப்பர்தேவாரம். சம்பந்தரும்அப்பரும்சும்மாதலயாத்திரையில்தான்இங்குவந்திருக்கிறார்கள். சுந்தரரோ, சங்கிலிக்குக்கொடுத்தசத்தியம்தவறிஅதனால்கண்ணிழந்து, உடல்நலிந்துவந்திருக்கிறார். இழந்தகண்களைக்கச்சியிலும், திருவாரூரிலும்பெற்றிருக்கிறார். ஆனால்இத்துருத்திவந்துஇங்குள்ளபதுமதீர்த்தத்தில்முழுகிஎழுந்தேஉடற்பிணிதீர்ந்திருக்கிறார்.

சொன்னவாறுஅறிவார்துருத்தியார், :வேள்விக்குடியுளார்அடிகளைச்

செடியனேன்நாயேன்

என்னைநான்மறக்குமாறு?

எம்பெருமானைஎன்னுடம்படும்

பிணியிடர்கெடுத்தானை!

என்றேபாடியிருக்கிறார். இந்தக்கோயிலில்உள்ளசிற்பங்கள்எல்லாம்இன்றையக்கொத்தர்களால்செய்தவையே. பழையசெப்புப்படிமங்கள்அதிகம்இல்லை. இருப்பவைகளில்மிக்கஅழகுவாய்ந்ததுகண்டீசரதுவடிவமே.

இக்கோவிலில்மணக்கோலநாதர்வடிவைத்தேடினேன். கிடைக்கவில்லை. அவர்தான்உத்தாலமரத்தடியிலேயேபாதரக்ஷையைக்கழற்றிவிட்டுஅந்தர்த்தியானம்ஆகியிருக்கிறாரே, அத்துடன்இன்னொருசெய்தியுங்கூட. இத்தலத்தில்மணக்கோலநாதர்பகல்நேரத்தில்மாத்திரமேஇருப்பாராம். இரவுநேரத்தில்பக்கத்தில்உள்ளவேள்விக்குடிக்குச்சென்றுவிடுவாராம். இப்படிப்பகலில்ஓரிடத்தும், இரவில்ஓர்இடத்தும்தங்குவதற்குக்காரணமும்என்னவோ? இவர்தான்ஏகபத்தினிவிரதர்ஆயிற்றே, மைத்துனன்விஷ்ணுவைப்பின்பாற்றாதவராயிற்றே. அப்படிஇருந்தும்ஏன்இந்தக்கஷ்டம்? எனக்குத்தோன்றுகிறது. உத்தாலமரத்தடியில்தோன்றிநறுஞ்சாந்துஇளமுலையைமணந்தவர்மறைந்தாரேஒழிய, ஓடிவிடவில்லை. பக்கத்தில்உள்ளவேள்விக்குடியிலேயேபரிமளசுகந்தநாயகியுடன்கல்யாணக்கோலத்திலேயேநின்றுகொண்டிருக்கிறார். அதனால்தானே, இத்தலத்துக்குவந்தசம்பந்தர், இந்தத்துருத்தியாரையும்அந்தவேள்விக்குடியாரையும்சேர்த்தேபாடியிருக்கிறார்ஒருபதிகத்தில்,

கரும்பனவரிசிலைப்பெருந்தகை

காமனைக்கவின்அழித்த

சுரும்பொடுதேன்மல்குதூமலர்

கொன்றைஅம்சுடர்ச்சடையார்,

அரும்பனவனமுலைஅரிவையோடு

ஒருபகல்அமர்ந்தபிரான்

விரும்பிடம்துருத்தியார், இரவுஇடத்து

உறைவர்வேள்விக்குடியே.

வந்ததேவந்தோம், இந்தவேள்விக்குடி, அதைஅடுத்துஇருக்கும்திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடிஎல்லாம்சென்றுஅங்குள்ளமூர்த்திகளையும்வணங்கியபின்திரும்பலாமே, என்ன? கொஞ்சம்நடக்கலாம்தானே. இங்கெல்லாம்செல்வதற்குகார்உதவாது, ஜீப்இருந்தால்நல்லது. இல்லைவண்டிகளில்தான்செல்லவேண்டும். காலில்வலுவுள்ளவர்கள்நடந்தேசெல்லலாம். குத்தாலத்துக்கோயிலைவிட்டுப்புறப்பட்டு, அக்கோயிலுக்குவடபால்உள்ளகாவிரியையும்கடந்துவடகீழ்திசைநோக்கிமூன்றுமைல்சென்றால்வேள்விக்குடிவந்துசேரலாம். கோயில்சிறியகோயில்தான். கல்யாணக்கோலத்தில்இறைவன்இங்குஎழுந்தருளியதற்குக்காதல்கீதம்ஒன்றும்இடைபுகவில்லை . ஓர்அரசகுமாரன்; அவனுக்குஒருபெண்ணைநிச்சயிக்கின்றனர். திருமணம்நடக்குமுன்னமேஅரசிளங்குமரனின்தாய்தந்தையர்இறந்துவிடுகின்றனர். அதனால்பெண்ணின்சுற்றத்தார்பெண்கொடுக்கத்தயங்குகின்றனர். இறைவனோஅரசகுமாரனின்காதல்தாபத்தைஅறிவார். அவரேஅந்தநோய்வாய்ப்பட்டவர்என்பதைத்தான்முன்னமேபார்த்திருக்கிறோமே. அவர்சும்மாஇருப்பாரா? தமதுபூதகணங்களைவிட்டுஇரவுக்கிரவேபெண்ணைத்தூக்கிவரச்செய்துவேள்விநடத்தித்திருமணத்தையும்முடித்துவைக்கிறார். பின்னர்தாமும்துணைவியுமாகத்திருமணக்கோலத்திலேயேநின்றுவிடுகிறார். இந்தக்கோயிலில்நல்லஅருமையானசெப்புச்சிலைகள்பலஇருக்கின்றன.

திருமணஞ்சேரிமணக்கோலநாதர்

எல்லாவற்றிலும்மிக்கச்சிறப்புவாய்ந்ததுகல்யாணசுந்தரர், பரிமளசுகந்தநாயகியார்சிலைகள்தாம். புதுமணப்பெண்ணாம்அந்தஅம்மையின்ஒவ்வொருஅங்கமுமேநாணஉணர்ச்சியைவெளிப்படுத்தும். ஆம்! திருமணத்துக்குமுன்புகைதொட்டதற்கேகோபித்துக்கொண்டவள்ஆயிற்றேஅவள். மணம்முடித்துக்கைப்பிடித்துஅழைத்துச்செல்லும்போதுநாணம்வந்துபுகுந்துகொள்ளாதாஅவள்அங்கங்களில்? தமிழரின்சிற்பக்கலைஉலகிலேஓர்அற்புதப்படைப்புஇந்தவடிவம்.

இதைப்பார்த்துஅனுபவித்துக்கொண்டிருக்கும்போதேஅங்குள்ளஅர்ச்சகர்சொல்வார்இன்னும்கொஞ்சம்நடந்தால்திருமணஞ்சேரிக்கும்போய்வந்துவிடலாம்என்று. ‘என்ன? ஒரேதிருமணமயமாகஇருக்கிறதேஇந்தவட்டாரம்?’ என்றுஎண்ணுவோம். சந்தர்ப்பத்தைவிட்டுவிடாமலேமேலேநடக்கலாம். திருமணஞ்சேரிக்குஇரண்டுவழி. வேள்விக்குடியிலிருந்துஇரண்டுமைல்மேற்குநோக்கிநடக்கவேணும். நடக்கத்தான்வேண்டும். வண்டிகூடப்போகாதுஅந்தப்பாதையில். இடையில்வரும்விக்ரமன்ஆற்றையும்கடக்கவேணும். நடக்கவேஇயலாதுஎன்பவர்கள், வேள்விக்குடியிலிருந்துகுத்தாலம்வரும்வழியில்இரண்டுமைல்வந்துவிக்ரமன்ஆற்றைக்கடந்துஎதிர்கொள்பாடிவழியாகஇரண்டுமைல்செல்லவேண்டும். இரண்டாவதுவழியிலேயேபோகலாம்நாம். வழியிலுள்ளமேலைத்திருமணஞ்சேரிஎன்னும்எதிர்கொள்பாடியில்உள்ளஐராவதேசுவரர், மலர்க்குழல்மாதுஅம்மையையும்வணங்கிவிட்டேசெல்லலாம். வேள்விக்குடியில்திருமணம்செய்துகொண்டுதன்நகர்திரும்பியஅரசகுமாரனை, அவனுடையமாமனார்உருவில்எதிர்கொண்டுஉபசரித்திருக்கிறார்இத்தலத்துஇறைவன். அதனால்இத்தலமேஎதிர்கொள்பாடிஎன்றுபெயர்பெற்றிருக்கிறது. கோயிலிலேஇப்போதுதிருப்பணிவேலைமும்முரமாகநடப்பதால்நம்மைஎதிர்கொண்டுஅழைக்கஒருவருமேஇருக்கமாட்டார்கள். நாமும்அதைஎதிர்பாக்காமலேயேநடந்துகீழைத்திருமணஞ்சேரிக்கேசென்றுசேரலாம். கோயில்பெரியகோயில். இங்குகோயில்கொண்டிருப்பவர்அருள்வள்ளல்நாயகரும், யாழின்மென்மொழிஅம்மையும். இத்தலத்திலேமன்மதன்பூஜித்திருக்கிறான். ஒன்றுக்குமூன்றாகத்திருமணம்நடந்திருக்கிறதேஇந்தவட்டாரத்தில், மன்மதன்பூஜியாமல்இருப்பானா? இங்கும்இறைவன்மணக்கோலத்திலேயேஇருக்கிறார்.

இத்தலத்தில்மணக்கோலம்கொண்டதற்குக்கதைஇதுதான்: வைசியகுலத்திலேஇரண்டுபெண்கள். ஒருத்திமற்றொருத்திக்குநாத்தி, இவர்கள்இருவரும்ஒருங்கேகருப்பமுறுகிறார்கள். அப்போதுதமக்குப்பிறக்கும்குழந்தைகளைஒருவருக்கொருவர்சம்பந்தம்செய்துகொள்வதுஎன்றுபேசிக்கொள்கிறார்கள். ஒருத்திபெண்ணைப்பெறுகிறாள். மற்றொருத்தியோஆமைபோன்றமகனைப்பெற்றெடுக்கிறாள். அதனால்பின்னர்பெண்பெற்றவள்ஆமைக்குமரனுக்குப்பெண்கொடுக்கமறுக்கிறாள். ஆமைக்குமரனோபெருமானைப்பூஜிக்கிறான். ஆமைஉருநீங்கிக்குறித்தபெண்ணைமணக்கிறான். இந்தமணத்தையும்முடித்துவைத்தகாரணத்தால்இங்குமேமணக்கோலத்தில்எழுந்தருளிவிடுகிறார். இக்கோயிலிலுமேமணக்கோலநாதர்செப்புப்படிமம்அழகுவாய்ந்தது. இங்குநல்லசெப்புச்சிலைகள்பலஇருக்கின்றன. நடராஜர்இருக்கிறார். வீரசக்திஅம்மனும்இருக்கிறாள்தன்தோழியருடன். இந்தச்சொன்னவாறுஅறிவார்சொன்னசொல்லைக்காப்பாற்றுவதோடு, சொல்லாதசொல்லையும்அல்லவாகாப்பாற்றுகிறார். தான்தான்சொன்னசொல்லைக்காப்பாற்றநறுஞ்சாந்துஇளமுலையைக்கல்யாணம்செய்துகொள்கிறார். அத்துடன்வேறுஇரண்டுதிருமணங்களையும்நடத்திவைத்துமகிழ்கிறார். ஆதலால்திருமணம்விரும்பும்வாலிபர்பெண்கள்எல்லாம்இத்தலங்களுக்குச்செல்லலாம். அதன்பயனாகவிரைவிலேயேதிருமணம்நடக்கஅருள்பெறலாம். ஆம்! சொன்னவாறுஅறிவார்தான்ஒருமாட்ரிமோனியல்பீரோவேநடத்துகிறவர்ஆயிற்றே!