தமிழ்நாடு – 53 – ஜெயங்கொண்டம்

கங்கைகொண்டசோழீச்சுரர்

சோழவளநாட்டிலேகொள்ளிடத்திலிருந்துபிரியும்மண்ணியாற்றின்கரையிலேசேய்ஞலூர்என்றுஒருசிற்றூர், சேயாம்குமரக்கடவுள்தாம்விரும்பிஉறைவதற்குநல்லஊர்என்றுதேர்ந்துஎடுக்கப்பட்டதலம்அது. சேய்நல்ஊர்தான்சேய்ஞலூர்என்றுபின்னால்பெயர்பெற்றிருக்கிறது. குமரனாம்சேயைமாத்திரம்அல்ல, இன்னுமொருமகனையுமேஇறைவன்பெற்றிருக்கிறான்இத்தலத்திலே. அந்தக்கதைஇதுதான்: எச்சத்தன்என்றஅந்தணனுக்குவிசாரருமன்பிறக்கிறான்; வளர்கிறான். பசுக்களைமேய்ப்பதுஅந்தணரதுதொழில்அல்லஎன்றாலும்விசாரருமனுக்குப்பசுநிரைகளைமேய்ப்பதிலே, அவற்றைப்பரிபாலிப்பதிலேஅலாதிப்பிரியம். பசுக்களும்விசாரருமனிடம்மிக்கஅன்போடுபழகுகின்றன. விசாரருமன்ஆற்றங்கரையிலேமணலால்சிவலிங்கம்ஒன்றுஅமைத்துப்பூசைசெய்கிறான். பசுக்களோஅச்சிவலிங்கவழிபாட்டுக்குத்துணைசெய்ய, தாமாகவேபால்சொரிகின்றன. சிவபூசையும்நாளுக்குநாள்ஓங்கிவளர்கின்றது. யாரோஒருவன்இத்தனைவிபரத்தையும்எச்சத்தனிடம்கூறுகின்றான். உண்மைஅறியஎச்சத்தன்வருகிறான்; நடப்பதைஅறிகிறான். பூசைநடக்கும்இடத்துக்குவந்துவிசாரசருமனைஅடிக்கிறான்; அங்குள்ளபால்குடங்களைக்காலினால்இடறுகிறான். விசாரசருமன்கோபங்கொண்டுதன்பக்கலில்உள்ளகோலைஎடுக்க, அதுமழுவாகமாற, அந்தமழுவினால்தந்தையாம்எச்சத்தன்காலையேவெட்டுகிறான். வெட்டுண்டகாலுடன்எச்சத்தன்கீழேவிழுந்துமடிகிறான். சிவபூசைக்குஇடையூறுசெய்தவனைத்தந்தைஎன்றும்பாராமல்வெட்டிவீழ்த்தியவிசாரருமனுக்குஇறைவன்ரிஷபாரூடனாகக்காட்சிதருகிறான். தந்தையற்றஅத்தனையனைத்தன்மகனாகவேஏற்றுக்கொள்கிறான். இத்துடன்தான்உண்டபரிகலம், உடுக்கும்உடை, சூடும்மாலை, அணிகள்முதலியவற்றைக்கொடுத்துத்திருத்தொண்டர்களுக்கெல்லாம்தலைவனாக்கிசண்டீசப்பதவியையும்அருளுகிறான். தன்சடைமுடியிலிருந்தகொன்றைமாலையையேஎடுத்துத்தன்மகனாம்சண்டீசனுக்குச்சூட்டுகின்றான்இறைவன். இதனைப்பாடுகிறார்சேக்கிழார்,

அண்டர்பிரானும், தொண்டர்தமக்கு

அதிபன்ஆக்கி, அனைத்துநாம்

உண்டகலமும், உடுப்பனவும்

சூடுவனவும், உனக்காகச்

சண்டீசனுமாம்பதந்தந்தோம்

என்றுஅங்குஅவர்பொன்தட

முடிக்குதுண்டமதிசேர்சடைக்கொன்றை

மாலைவாங்கிச்சூட்டினார்.

என்பதுசேக்கிழார்தரும்சொல்லோவியம். இச்சொல்லோவியத்தைக்கல்லோவியமாகக்காணசேய்ஞலூரில்உள்ளசத்தியகிரிஈசுவரர்கோயிலுக்குப்போய்ப்பிரயோசனமில்லை. அதைக்காணும்ஆவல்உடையவர்கள்எல்லாம்சென்றுகாணவேண்டியதுஅந்தக்கங்கைகொண்டசோழபுரத்துக்கே. அங்கேயேசெல்கிறோம்நாம்இன்று.

கங்கைகொண்டசோழபுரம், திருச்சிராப்பள்ளியில்உடையார்பாளையம்தாலுகாவில்இருக்கிறது. அரியலூர்ஸ்டேஷனில்இறங்கிஜயங்கொண்டசோழபுரம்சென்றுபின்னும்செல்லவேண்டும். இப்பாதைமுப்பதுமைல்தொலைவுக்குமேல்இருக்கும். இதைவிடநல்லவழிகும்பகோணத்திலிருந்துகல்லணைஎன்னும்லோயர்அணைக்கட்டுபதினாறுமைல்தொலைவில்இருக்கிறது. அங்கிருந்துசென்னைசெல்லும்ரோட்டில்நான்குமைல்போய், அங்கிருந்துஜயங்கொண்டசோழபுரம்கிளைச்சாலையில்திரும்பவேண்டும். திரும்பிஒருமைல்சென்றால்இக்கோயில்இருக்கும்இடம்வந்துசேரலாம். கொள்ளிடத்தில்கட்டியுள்ளலோயர்அணைக்கட்டைக்கடந்ததுமேகோயில்விமானம்தெரியும். நல்லபொட்டல்காட்டில்கோயில்இருப்பதால், எந்தரோட்டில்வந்தாலும்ஏழுஎட்டுமைல்தூரத்திலேயேகோயில்விமானத்தைக்காணலாம். இந்தக்கோயில்இருக்கும்ஊர்கங்கைகொண்டசோழபுரம்என்றும், இக்கோயில்கங்கைகொண்டசோழீச்சுரம்என்றும்பெயர்பெற்றிருக்கின்றன. இக்கோயிலையும்கட்டி, இந்தநகரத்தையும்நிர்மாணித்தராஜேந்திரசோழனை, கங்கைகொண்டசோழன்என்றுசரித்திரம்கூறுகிறது. கோயில்வாயில்செல்வதற்குமுன்னமேயே, தலம்கோயில், அரசன்இவர்கள்வரலாற்றைக்கொஞ்சம்தெரிந்துகொள்ளலாமே. தஞ்சையில்இருந்துஅரசாண்டு, உலகம்புகழும்அந்தத்தஞ்சைப்பெரியகோயிலைஎடுப்பித்தராஜராஜனைத்தமிழ்மக்கள்நன்குஅறிவார்கள்.

அந்தராஜராஜனின்மகனேராஜேந்திரன். சேரர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர்எல்லோரையும்வென்றதுடன்கடல்கடந்துசென்றுஈழநாட்டையும்மும்முடிச்சோழமண்டலமாக்கி, இன்னும்முந்நீர்ப்பழந்தீவுபன்னீராயிரத்தையும்கைக்கொண்டவன்ராஜராஜன். அவன்மகனானராஜேந்திரனோ, வடநாட்டில்கங்கைவரைசென்றுவெற்றிக்கொடிநாட்டியவன், கிழக்கேமலாயாவரைசென்றுகடாரத்தையும்கைப்பற்றியவன். அதனாலேஅவன்கங்கைகொண்டான்என்றும்கடாரம்கொண்டான்என்றும்பாராட்டப்பெற்றிருக்கிறான்சரித்திரஆசிரியர்களால். தந்தைஒருகோயில்கட்டினான்என்றால்தனயனும்ஒருகோயில்கட்டமுனைகிறான், அக்கோயிலில்பிரதிஷ்டைசெய்திருக்கும்பிருஹதீசுவரருக்குக்கங்கையிலிருந்தேநீர்கொண்டுவந்துகுடமுழுக்குச்செய்யவிழைகிறான். இப்பணியைநிறைவேற்றத்தன்படைவீரர்களைஒருமாதண்டநாயகன்தலைமையில்அனுப்பிவைக்கிறான். அம்மாதண்டதாயகனும்இடையில்உள்ளதெலுங்குநாடு, வேங்கிநாடு, தென்கோசலம், வங்காளம்முதலியநாடுகளையும்வென்றுபகையரசர்தலையிலேயேகங்கைநீர்நிரம்பியகுடங்களைஏற்றிக்கொண்டுதிரும்பியிருக்கிறான். வெற்றியோடுமீண்டமாதண்டநாயகனைகோதாவரிக்கரையில்சந்தித்துஅழைத்துவருகிறான்ராஜேந்திரன். கங்கைகொண்டவீரராஜேந்திரன்கங்கைகொண்டசோழன்என்றுபெயர்பெறுகிறான். அவன்அமைத்தநகரம்கங்கைகொண்டசோழபுரம்ஆகிறது. அங்குஅமைத்தகோயில்கங்கைகொண்டசோழீச்சுரம்என்றுஅழைக்கப்படுகிறது. இந்தக்கங்கைகொண்டவெற்றியைக்கூறுகிறதுஅவனதுமெய்க்கீர்த்திஒன்று.

தொடுகடல்சங்குகொடுஅடல்மகிபாலனைவெஞ்சமர்வளாகத்துஅஞ்சுவித்துஅருளி

ஒண்திறல்யானையும்பெண்டிர்பண்டாரமும்

நித்திலநெடுங்கடல்உத்தரலாடமும்

வெறிமலர்தீர்த்தத்துஎறிபுனல்கங்கை

மாப்பொருதண்டால்கொண்ட

கோப்பரகேசரிவர்மரான

உடையார்இராஜேந்திரசோழதேவர்

என்பதுதான்மெய்க்கீர்த்தி.

இனிகிழக்குநோக்கியிருக்கும்கோயிலைநோக்கிநடக்கலாம். முதலிலேகோயில்வாயில்என்றுஒன்றுஇருக்காது. அங்குகோபுரம்ஒன்றும்அழகுசெய்யாது. என்றாலும்முன்னால்ஒருவாயிலும்கோபுரமும்இருந்துஇடிந்துவிழுந்திருக்கவேண்டும்என்பதுமட்டும்தெரியும். கொள்ளிடத்தில்அணைகட்டியபோதுஇங்குள்ளகற்களைஎல்லாம்இடித்துஎடுத்துப்போய்உபயோகித்துக்கொண்டனர்என்பதும்பிரசித்தம். (உத்திரமேரூரில்குடவோலைச்சாஸனமுள்ளகற்களையேபெயர்த்துஎடுத்துஇன்றுமக்கள்வீடுகட்டுகிறார்கள்என்றால், அன்றிருந்தஆங்கிலசர்க்கார்அதிகாரிகள், இக்கங்கைகொண்டசோழபுரத்துக்கோயில்மதில்கற்களைஅணைகட்டுவதற்குஉபயோகித்துக்கொண்டார்கள்என்பதில்வியப்புஎன்ன?) இன்றுஇடிந்துகிடக்கும்மதில்சுவர்கிழமேல் 584 அடி, தென்வடல் 372 அடி.ஆனால்கங்கைகொண்டசோழன்இதைவிடவிஸ்தாரமாகஆறுகோபுரங்களுடன்சுற்றாலைகள்எல்லாம்அமைத்தான்என்பர்அங்குள்ளவர்கள்.

அதுஎல்லாம்எவ்வளவுஉண்மையோ? இன்றிருக்கின்றகோயிலேபிரும்மாண்டமானதாகஇருக்கிறது. வெளிப்பிரகாரத்தில்கல்லாலும்சுதையாலும்கட்டப்பட்டபிரும்மாண்டமானநந்திஒன்றும், அதைஒட்டிச்சிங்கமுகக்கிணறுஒன்றும்இருக்கும். இந்தக்கோயில்பிராகாரத்தில்வலம்வருவதும்கொஞ்சம்கஷ்டம். உறுத்தும்கல்லுக்கும்அழுத்தும்நெருஞ்சிமுள்ளுக்கும்ஜவாப்சொல்லவேண்டியிருக்கும். இதையெல்லாம்பொருட்படுத்தாமல்தான்வலம்வரவேணும். தெற்குப்பிரகாரத்தில்இருநூறுஅடிவந்ததும், அங்குஎழுந்திருக்கும்விமானத்தைப்பார்க்கலாம். விமானம்நூறுஅடிசதுரத்தில்தரையிலிருந்துஇருபதுஅடிவரைஉயர்ந்துஅடிப்பீடத்தின்மேல்கர்ப்பகிருஹத்தின்மேல் 170 அடிஉயரம்எழுந்திருக்கிறது. பிரும்மாண்டமானஅப்பீடத்தின்பேரில்எழுந்துநிற்பதால், தஞ்சைப்பெரியகோயில்விமானத்தில்உள்ளகம்பீர்யம்இல்லை. அங்குள்ளவிமானம் 80அடிசதுரபீடத்தின்மேல் 216 அடிஉயர்ந்திருக்கிறது. கங்கைகொண்டானுக்கோதந்தையைவிஞ்சவேண்டுமென்றுஆசை. ஆதலால்அடிப்பீடத்தைநூறுஅடிசதுரமாக்கிஅதற்கேற்றஉயரத்தில்ஆம். சுமார் 300 அடிஉயரத்தில்விமானத்தைஉயர்த்திவிடவேண்டும்என்றுஎண்ணம். சிற்பிக்கோ, அடித்தளத்துக்குஏற்றவகையில்விமானத்தைஉயர்த்தமுடியவில்லை. இதைப்பற்றிரஸமானவரலாறுகூடஒன்றுஉண்டு.

அதுஇதுதான்: போட்டஅஸ்திவாரத்திற்குஏற்றவாறுவிமானம்எழுப்பவகைஅறியாதசிற்பி, திருவாரூர்சிற்பியினிடம்கேட்கச்செல்கிறான். திருவாரூர்சிற்பியோ, அகண்டகமலாலயத்தைஒட்டிஅதில்ஊறிவரும்தண்ணீரைவடிக்கவழியறியாது, இந்தக்கங்கைகொண்டசோழபுரத்துச்சிற்பியைத்தேடிவருகிறான். இருவரும்நடுவழியில்ஒருசத்திரத்தில்சந்திக்கிறார்கள். ‘வாளைமலிந்தஊரில்ஊற்றுக்கண்ணைஅடைப்பதாபிரமாதம் ?” என்கிறான்கங்கைகொண்டசோழபுரத்துச்சிற்பி. ‘பஞ்சுபெருத்தஇடத்தில்விமானத்தில்கல்ஏற்றுவதுஎன்னகஷ்டம்என்கிறான்திருவாரூர்சிற்பி. இருவரும்ஊர்திரும்புகிறார்கள்.

இறைக்கும்நீரிலேவாளைமீன்களைவிட, அவைசென்றுஊற்றுக்கண்களில்புகுந்துஊற்றுக்கண்களைஅடைத்துக்கொள்ளநீரைஇறைத்துவேலையைமுடிக்கிறான்திருவாரூர்சிற்பி. பஞ்சுஎன்னும்சாரக்கட்டைகளைஅடுக்கிஅதன்மேல்கற்களைஏற்றிவிமானம்அமைக்கிறான்கங்கைகொண்டசோழபுரத்துச்சிற்பி. எவ்வளவுதான்சாரம்கட்டினாலும் 170 அடிக்குமேல்விமானம்உயரவில்லை. என்றாலும்ஒன்பதுநிலைகளோடுஉயர்ந்துஉயர்ந்து, மேலுள்ளபகுதிசரிந்துசரிந்துஉச்சியில்குவிந்துகுவிந்துஒற்றைக்கலசம்தாங்கிநிற்கிறதுவிமானம். கலசத்தின்உயரம்பன்னிரண்டுஅடி. அதற்கேற்றவாறேஅகலமும். (இதுஎப்படித்தெரிந்ததுஎன்றுகேட்காதீர்கள். பலவருஷங்களுக்குமுன்புஇக்கோயில்கலசம்விழுந்திருக்கிறது. 1951-ம்வருஷம், தஞ்சைவெற்றிவேல்பிரஸ்அதிபர்திரு. பக்கிரிசாமிபிள்ளையின்முயற்சியால்கலசம்புதுப்பிக்கப்பட்டுத்தஞ்சையில்இருந்துஒருபெரியலாரியில்எடுத்துச்செல்லப்பட்டது. அப்போதுஉடன்இருந்துகாணும்வாய்ப்புஎனக்குக்கிடைத்தது. இனிநான்சொல்வதைநம்புவீர்களல்லவா?) கருவறையைச்சுற்றியகோஷ்டங்களில், நர்த்தனவிநாயகர், நடராஜர், அர்த்தநாரி, கங்காதரர், பிக்ஷாடனர், லிங்கோத்பவர்எல்லாம்இருக்கிறார்கள். நாம்காணவந்ததுஇவர்களைஅல்லவே.

ஆகவேவிறுவிறுஎன்றுநடந்துவடக்குப்பிராகாரம்வந்துஅங்கிருந்துஅர்த்தமண்டபம்செல்வதற்கு

சண்டீசஅனுக்கிரஹமூர்த்தி

அமைத்திருக்கும்படிகளில்ஏறிமேற்கேதிரும்பினால்நான்முன்சொன்னசண்டீசஅனுக்கிரகமூர்த்தியைக்காணலாம். நல்லகம்பீரமானகற்சிலை, அன்னைபார்வதியுடன்அத்தன்அமர்ந்திருக்கிறார்ஒருபீடத்தில். அவர்காலடியில்சண்டீசர்கூப்பியகையுடன்இறைவனோகொன்றைமாலையை, சண்டீசர்தலையைச்சுற்றிஅலங்கரிக்கிறார். மாடத்தில்இருக்கும்இந்தச்சிற்பவடிவத்தைச்சுற்றியசுவர்களிலே, சண்டீசர்கதைமுழுவதுமே, சின்னச்சின்னவடிவில்சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

அன்னையையும்அத்தனையும்செதுக்கியதில்காட்டியஅக்கறையைச்சண்டீசரைச்செதுக்குவதில்காட்டவில்லைசிற்பி. நான்ஊகிக்கும்காரணம்இதுதான். கங்கைகொண்டசோழனாம்ராஜேந்திரனுக்கேஇறைவன்முடிசூட்டமுனைகிறான்என்றகுப்தமாகக்காட்டவேசிற்பிஇச்சண்டீரனுக்குகிரஹமூர்த்தியைஉருவாக்கியிருக்கிறான். சண்டீசனதுமுகத்தைராஜேந்திரனதுமுகம்போலவேஅமைத்திருக்கிறான். இதைக்கண்டுராஜேந்திரன்உள்ளம்மகிழ்ச்சியுற்றாலும், வேண்டாதஅலங்காரங்களை, அச்சிற்பவடிவுக்குச்செய்யவேண்டாம்என்றுகட்டளையிட்டுத்தன்பணிவைக்காட்டியிருக்கிறான். அதனால்தான்அரைக்குக்கீழேஉள்ளபாகம்செம்மையாகச்செதுக்கப்படவில்லைஎனநினைக்கிறேன். இந்தச்சிற்பவடிவம்கலைஉலகிலேபிரசித்தம். இந்தஒப்பற்றசிலைக்குஎதிர்த்தசுவரிலே, ஞானசரஸ்வதிகொலுவீற்றிருக்கிறாள். ‘ஒன்றேயென்னில்ஒன்றேயாம்என்றுநமக்கெல்லாம்ஞானஉபதேசம்செய்யும்நிலையில்இருக்கிறாள். இவளதுஅழகைவர்ணித்தல்இயலாது. சென்றுகண்டுமகிழுங்கள்என்றுமட்டும்சொல்லவிரும்புகிறேன்.

இனிஅந்தவடக்குவாயில்வழியாகவேகோயிலுள்நுழையலாம், அர்த்தமண்டபத்தில்இருந்துகொண்டுமேற்கேதிரும்பினால்கருவறையில்உள்ளபெருஉடையாரை, கங்கைகொண்டசோழீச்சுரரைக்காணலாம். சாதாரணமாகலிங்கத்திருவுருவின்பரிவட்டங்களைப்பற்றிப்பேசும்போதுமூன்றுமுழமும்ஒருசுற்று (லிங்கத்திருவுருவைச்சுற்ற ) என்பார்கள். இங்குஅந்தப்பருப்புஎல்லாம்வேகாது. லிங்கத்திருவுருவைச்சுற்ற 15 முழம்வேணும்; ஆவுடையாரைச்சுற்றவோஐம்பத்துநாலுமுழமேவேணும். 13அடிஉயரத்தில்உயர்ந்திருக்கும்பெருஉடையார், பெரியதிருஉருஉடையவரே. அபிஷேகம்முதலியன்செய்யப்பெரியகிராதிகட்டவேண்டியிருக்கிறது. கருவறையில்வெளிச்சம்காணாது. நன்றாகத்தீபஅலங்காரம்செய்தால்கோலாகலமானகாட்சியாகஇருக்கும். இந்தப்பெருஉடையாரை, சோழீச்சுரத்தானைவணங்கியபின்பே,

அன்னமாய்விசும்புபறந்து

அயன்தேட, அங்ஙனே

பெரியநீ! சிறிய

என்னையாளவிரும்பி

என்மனம்புகுந்தஎளிமையை

என்றும்நான்மறக்கேன்,

என்றுதிருவிசைப்பாபாடியிருக்கிறார்கருவூர்த்தேவர். நாம்அந்தஇசைப்பாவைப்பாடிக்கொண்டேகிழக்குநோக்கிநடந்துமகாமண்ட்பத்தைக்கடக்கலாம். பெரியமண்டபம்; அதற்கேற்றதூண்கள், கலைஅழகுஒன்றும்இல்லை. செப்புப்படிமங்கள்பலஇருட்டில்புதைந்துகிடக்கும். அவற்றையெல்லாம்தேடிப்பிடித்தேகாணவேண்டும். இருட்டோடுஇருட்டாகஈசானமூலையிலேஒருசிலை. அதனைநவக்கிரஹம்என்பர். ஒருசதுரமானகல். அதன்எட்டுமூலைகளிலும்எட்டுக்கிரஹங்கள். மேல்தளத்தில்ஒருமலர்ந்தபதுமம். பக்கத்தில்ஏழுகுதிரைகள்இழுக்கும்பாவனை. அதனைஓட்டும்அருணன்என்றெல்லாம்அமைந்திருக்கும். நவக்கிரஹஅமைப்பில்இதுஒருபுதியமுறை. தவறாமல்பார்க்கவேண்டியதொன்று. கோயிலுள்பார்க்கவேண்டியவைஇவைகளே.

இனிவெளிச்சுற்றுக்கோயில்களையும்பார்க்கலாம். விநாயகர், மஹிஷமர்த்தினி, சண்டீசர், அம்பிகைசந்நிதிகள்எல்லாம்தனித்தனி. இங்குள்ளவிநாயகர்கணக்கவிநாயகர்என்றபெயருடன்விளங்குகிறார். இந்தப்பெரியகோயிலகட்டும்பொறுப்பைஓர்அமைச்சரிடம்ராஜேந்திரசோழன்ஒப்படைத்திருக்கிறான். அமைச்சரோநிறைந்தசிவபக்திஉடையவர், பணத்தைவாரிவாரித்திருப்பணிவேலையைநடத்துகிறார். அவருக்கோகணக்குஎன்றுஒன்றுஎழுதிவைத்துக்கொள்ளநேரமில்லை. அரசரிடம்யாரோகோள்மூட்டியிருக்கிறார்கள், அரசரும்அமைச்சரிடம்தாம்கணக்குகளைப்பார்வையிடவிரும்புவதாகச்சொல்கிறார். அமைச்சர்என்னபண்ணுவர்? ஆனால்அமைச்சரையும்முந்திக்கொண்டுவிநாயகர்கணக்குப்பிள்ளைவடிவத்தில்அரசர்முன்ஆஜராகிறார். கணக்கைவாசிக்கிறார். ‘எத்துநூல்எண்ணாயிரம்பொன்என்றுகணக்கைப்படிக்கஆரம்பித்ததுமேபோதும்போதும்என்றுநிறுத்திவிடுகிறார்அரசர். கற்களைவெட்டிச்செதுக்குமுன்கயிற்றைசுண்ணாம்பில்தோய்த்துக்குறிசெய்துகொள்வான்சிற்பி. அந்தக்கயிற்றுக்கேஎத்துநூல்என்றுபெயர். எத்துநூலேஎண்ணாயிரம்பொன்என்றால்மற்றச்செலவுகளைஎப்படிக்கணக்கிடுவது. இப்படிஒருகணக்குப்பிள்ளையாகவந்தவிநாயகரேகணக்கவிநாயகராகஅந்தக்கோயிலில்தங்கிவிடுகிறார்.

இந்தக்கங்கைகொண்டசோழீச்சுரத்தின்பெருமையையும், விசாலமானபரப்பையும்வெளிப்படுத்தும்சின்னங்கள்பலஅங்கேஇருக்கின்றன. இங்கேபழையஅரண்மனைகள்இருந்தஇடம்இன்றுமாளிகைமேடாய்விளங்குகிறது. அங்கேமேடுஇருக்கிறது, மாளிகைஇல்லை. இன்னும்தொட்டிகுளம், பள்ளிவாடை, செங்கல்வேடு, குயவன்பேட்டை, யுத்தபள்ளம்என்றெல்லாம்பலபகுதிகள்அங்குஅன்றுவாழ்ந்தமக்கள்தொகுதிகளைப்பற்றிக்கதைகதையாகக்கூறுகின்றன. எல்லாவற்றையும்தூக்கிஅடிக்கும்சோழகங்கம்என்றபெரியஏரிஒன்றும்இருந்திருக்கிறது. அந்தஏரியின்கரை 16மைல், அதற்குவந்தகால்வாயின்நீளம் 60மைல். எல்லாம்இடிந்துஇன்றுகரைகள்மட்டுமேகாணப்படுகின்றன.

இக்கோயிலில்உள்ளகல்வெட்டுக்கள்அனந்தம். பாண்டிமன்னன்கோமாறவர்மன்இரண்டாம்குலசேகரதேவன், விக்கிரமபாண்டியன், கோநேரின்மைகொண்டான்சுந்தரபாண்டியன்காலத்துக்கல்வெட்டுக்கள்பிராகாரச்சுவர்களில்காணப்படுகின்றன. விஜயநகரமன்னர்கள்கல்வெட்டும்இரண்டுஉண்டு. மற்றவைஎல்லாம்சோழர்காலத்தியவையே. குலோத்துங்கன், வீரராஜேந்திரன், திரிபுவனச்சக்கரவர்த்திகோநேரின்மைகொண்டான்கல்வெட்டுக்கள்பிரசித்தமானவை. கோயில்சிதைந்ததுபோலவேகல்வெட்டுக்களும்சிதைந்திருக்கின்றன. என்றாலும்அவைசொல்லும்வரலாறுகளோஎண்ணிறந்தவை, இக்கோயிலைவிட்டுஇக்கோயில்உள்ளஊரைவிட்டுவெளியேறும்போதுஅந்தக்கங்கைகொண்டசோழனவன்கனவில்உருவானகங்கையணிவேணியனின்கலைக்கோயில்பொலிவுஇழந்துநிற்பதுநம்நெஞ்சைஉறுத்தாமல்போகாது.