தமிழ்நாடு – 59 – தாராசுரம்

தாராசுரத்து ஐராவதேசுரர்

திருக்குடந்தைமான்மியம்என்றுஒருபுத்தகம். அதில்தாரேச்சுரப்படலம்என்றுஒருபடலம். அப்படலத்தில்ஒருவரலாறு. தாரன்என்றுஓர்அசுரன். அவன்தேவர்களைஅடக்கிஆளவிரும்புகிறான். அதற்குச்சிவபெருமானைநோக்கித்தவம்புரிகிறான். அவன்மாத்திரம்என்னஅவனுடையமனைவியர்நூறுபேருமேஇறைவன்திருவடிகளைப்பூசிக்கின்றனர். அவர்கள்எல்லாம்விரும்பியசிவலோகவாழ்வைஅளிக்கிறார்இறைவனும். பலம்மிக்கஅந்தத்தாரன்என்றஅசுரன்பூசித்ததலம்தாரேச்சுரம்என்றுபெயர்பெறுவதாயிற்று. தாரன்மாத்திரம்என்னஅவன்மகன்மேகதாரனும்அத்தலத்திலிருந்தேஅரசாண்டுசாயுஜ்ஜியம்பெற்றிருக்கிறான்என்றுமான்மியம்கூறுகிறது.

ஆனால்சரித்திரம்இதைஒத்துக்கொள்வதில்லை. தாராசுரம்என்றபெயர்வந்ததற்குச்சரித்திரம்கூறும்காரணம்வேறு. சோழமன்னனானஇரண்டாம்ராஜராஜன்இங்கிருந்துஅரசாண்டிருக்கிறான். அவன்ஆண்டகாலம் 1146 முதல் 1163 வரைபதினோழுவருஷங்கள். அவனேஇரண்டாம்குலோத்துங்கன்புதல்வனானபரகேசரிராஜராஜன். கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர்வரைஇவன்ராஜ்யம்பரவியிருக்கிறது. கொங்குநாடுகங்கநாடுஎல்லாம்இவன்ஆட்சிக்குஉட்பட்டுஇருந்திருக்கின்றன. இவன்முதலில்கங்கைகொண்டசோழபுரத்தையேதலைநகராகக்கொண்டுஆண்டிருக்கிறான். பின்னர்பழையபழையாறையைத்தேர்ந்தெடுத்துஅங்கிருந்துஅரசாண்டிருக்கிறான். அந்தப்பழையாறையைஎண்டிசைத்தேவரும்புகுதும்ராஜராஜபுரிஎன்றேதன்பெயரால்அழைத்திருக்கிறான்.

அவன்காலத்தில்போர்ஒன்றுமேநடக்கவில்லை. ஆனால்தமிழ், சமஸ்கிருதம்கற்பதிலும், கலைவளர்ப்பதிலும்ஆர்வம்காட்டியிருக்கிறான். ‘முத்தமிழுக்குத்தலைவன்‘ ‘ராஜபண்டிதன்என்றவிருதுப்பெயர்கள்பெற்றிருக்கிறான். அந்தப்பழையாறைவட்டத்தில்வடகீழ்ப்பகுதியில்ஒருகோயில்எடுப்பித்துஅதைராஜராஜேச்சுரம்என்றுஅழைத்திருக்கிறான். அங்குபிரதிஷ்டைசெய்தஇறைவனை. ராஜராஜேச்சுரமுடையார்என்றேவணங்கியிருக்கிறான்,

ஒருமருங்குடையமூலநாயகி

ஒற்றைவெள்விடைஊர்திமேல்

இருமருங்குமறைதொழ

எழுந்தருள்இராசராசபுரிஈசனே

என்றுஅவனதுஅவைக்களப்புலவர்ஒட்டக்கூத்தர்தக்கயாகப்பரணியில்இந்தஇறைவனைப்பாடியிருக்கிறார். இந்தராசராசபுரிஈசுவரரேபுராணம்பாடியவர்களால்ஐராவதேசுவரர்என்றுபாராட்டப்பட்டிருக்கிறார். ராஜேசுவரமேநாளடைவில்ராராசுரம்என்றுதிரிந்துபின்னர்தாராசுரம்ஆயிற்று. இதுதலத்தைப்பற்றிச்சரித்திரம்கூறும்செய்தி. நாம்சரித்திரத்துக்கேமதிப்புக்கொடுக்கலாம். அதையேநம்பலாம். இந்தத்தாராசுரம்என்றதலத்தில்உள்ளஐராவதேசுவரரைக்காணவேஇன்றுசொல்கிறோம்நாம்.

தாராசுரம்செல்வதுமிகமிகஎளிது. கும்பகோணத்துக்குஅடுத்ததென்பக்கம்இருக்கும்தாராசுரம்ஸ்டேஷனில்இறங்கினால்அங்கிருந்துகூப்பிடுதொலையிலேயேகோயில்இருக்கிறது. கோயிலைஇனம்கண்டுபிடிப்பதும்எளிது. கலசம், ஸ்தூபிஎல்லாம்இல்லாதவிமானத்தோடுஅந்தவட்டாரத்தில்இருக்கும்கோயில்இதுஒன்றுதான். இதைஅடையாளமாகவைத்துக்கொண்டுஇடையில்இருக்கும்தோப்பைக்கடந்தால்கோயில்வாயில்வந்துசேர்ந்துவிடலாம். கோயில்எடுப்பித்தகாலத்தில்பலபிராகாரங்கள்எல்லாம்எடுப்பிக்கப்பட்டிருக்கவேண்டும். அதில்ஒருமதில்சிதைந்துகோயில்வாயிலுக்குக்கிழக்கேஇன்றும்இருக்கிறது. இடிந்துகிடக்கும்அந்தமதிலைப்பார்த்தேஅதுஎவ்வளவுகம்பீரமாகஎழுந்திருக்கவேண்டும்என்றுஊகித்துக்கொள்ளலாம்.

இக்கோயில்வாயில்எப்போதும்திறந்திருக்காது. அர்ச்சருக்குச்சொல்லிவிட்டுத்தான். அவரைவருவிக்சுவேண்டும். அதுவரைகோயில்வாயிலுக்குவெளியேஇருக்கும்பலிபீடத்தையும்நந்தியோடுகூடியமண்டபத்தையும்பார்க்கலாம். நந்திஎழுந்துஎங்கேஓடிவிடுகிறதோஎன்றுமூங்கில்தட்டிவைத்துக்கட்டிப்பதனப்படுத்தியிருப்பார்கள். அர்ச்சகர்வந்துநாம்கலைஅழகைக்காணவந்தவர்கள்என்றுதெரிந்துகொண்டால், அந்தப்பலிபீடத்தையேபலஇடங்களில்தட்டிஅதில்சப்தஸ்வரமும்பேசுகிறதுஎன்பார். நமக்குஸ்வரங்களில்எல்லாம்வித்தியாசம்தோன்றாது. ‘இதுகூடத்தாரன்கதைபோலத்தானோ?’ என்றுஎண்ணத்தோன்றும். ஆனால்கோயிலுள்நுழைந்தால்எவ்வளவோஅதிசயம்காத்துநிற்கும். கோயிலுள்கருவறையில்இருப்பவர்ஐராவதேசுவர்.

துர்வாசமுனிவர்சாபத்தால்தேவேந்திரனதுஐராவதத்தின்நிறம்மாறஅதனால்மனக்கவலையுற்றஐராவதம்இத்தலத்துக்குவந்துஇங்குள்ளஇறைவனைப்பூசித்துப்பேறுபெற்றிருக்கிறது. அன்றுமுதல்இறைவனேஐராவதேசுவரர்என்றபெயரில்நிலைத்துவிடுகிறார். மேலும்முனிவர்களதுகோபத்துக்குஆளாகியஅந்தயமதருமனுக்குவெம்மைநோய்வர, அந்நோய்தீரஅவன்பலதலங்களுக்குச்சென்றுஅலைந்துகடைசியாகஇங்குவந்துசிவபெருமானின்திரிசூலம்ஊன்றியஇடத்தில்தோன்றியதிருக்குளத்தில்மூழ்கிவெம்மைநோய்தீர்ந்தான்என்றுபுராணம்கூறும்.

இந்தப்புராணவரலாறுகளைத்தவிரவேறுசிறப்பானவரலாறுஇந்தக்கோயிலைப்பற்றிஇல்லைதான். ஆனால்கோயில், கோயில்அமைப்பு, அங்குள்ளசிற்பச்செல்வங்கள்எல்லாம்ஒருநாளில்பார்த்துஅனுபவித்துவிட்டுத்திரும்பிவிடக்கூடியவைஅல்ல. பலநாட்கள்அங்கேதங்கியிருந்துஒவ்வொன்றையும்அங்குலம்அங்குலமாகப்பார்த்துக்களிக்கவேண்டியவை. ஆதலால்கொஞ்சம்ஆறஆமரவேஇருந்துபார்க்கலாம்இச்சிற்பவடிவங்களையெல்லாம்.

கோயில்வாயிலில்நுழைந்ததும்நேரேகருவறைக்குச்சென்றுவிடமுடியாது. கோயில்ஒருசிறியஅளவில்மாடக்கோயிலாகஇருக்கும். கோயில்மாடத்தில்ஏறத்தெற்குநோக்கிக்கொஞ்சம்நடந்து, அதன்பின்னரேமேற்குநோக்கிப்படிகளில்ஏறவேண்டும். தெற்குநோக்கிநடக்கும்போதேகிழக்கேபார்த்தஒருமாடத்தில்ஒருகற்சிலைநிற்கும், பார்த்ததும்அதனைஅர்த்தநாரியின்வடிவம்என்றுகருதுவோம். இடப்பக்கம்மாத்திரம்விம்மிப்புடைத்திருக்கும்மார்பகத்தைக்கண்டு: கொஞ்சம்கூர்ந்துநோக்கினால்அவ்வுருவுக்குமூன்றுதலைகள்இருப்பதும்தெரியும். இதுஎன்னபுதிதாகஇருக்கிறதே? என்றுஅர்ச்சகரைக்கேட்போம். அவரும்நம்மைப்போலவேதிருதிருஎன்றுவிழிப்பாரேஒழியவிளக்கம்சொல்லமாட்டார்.

சிறிதுசிந்தித்தால்தேவர்மூவரையும்அவர்களுடன்பராசக்தியையும்சேர்த்துஅமைத்துக்காட்டியவிசுவரூபம்என்றுதெரியும். இப்படிஒருஅற்புதமானசிலைவேறுஎந்தக்கோயிலிலும்இல்லை. அற்புதம்மாத்திரம்அல்ல; நல்லஅழகானசிலையும்கூட. அந்தச்சிலையின்அழகிலேயேமெய்மறந்துவிடாமல்மேலும்நடந்துதெற்குநோக்கிப்படிஏறினால்ராஜகம்பீரன்மண்டபம்வந்துசேரலாம். அந்தப்படிக்கட்டுஏறும்போதேவடக்குச்சுவரில், மூக்குப்போனஅகத்தியர், அஞ்சுதலைஆதிசேஷன்இவர்களின்உருவையும்காணலாம்.

பிறகுராஜகம்பீரன்மண்டபத்துத்தூண்களை, சுவரை, விதானத்தையெல்லாம்பார்த்தால்அப்படியேமலைத்துவிடுவோம். ஒருஅங்குலஇடங்கூடவிடாமல்அத்தனைஇடத்தையும்சிற்பவடிவங்களாலேயேநிறைத்திருக்கிறான்ராஜராஜன். நர்த்தனவிநாயகரேஅவனதுமுத்திரையாகஅமைந்திருக்கிறார். சிற்பிகள்ஒருஅங்குலவிநாயகர்முதல், ஒருமுழவிநாயகர்வரை (பலர்நடம்ஆடிக்கொண்டே ) தூண்களைநிறைந்திருக்கிறார்கள். இன்னும்அத்தூண்களில்செதுக்கியிருக்கும்அழகு, அத்தூண்களில்வடித்திருக்கும்வடிவங்கள்எல்லாம்எவ்வளவோவரலாறுகளைச்சொல்லும். இந்தமண்டபத்தின்வடபகுதிக்கேஅழைத்துச்செல்லவிரும்புகிறேன். அங்குதெற்குநோக்கியசந்நிதிவாயிலில்சாமரைஏந்திநிற்கும். பெண்கள்இருவர், அவர்களோடுயாதொருதொடர்பும்கொள்ளாதஒருசிற்பவடிவம்உச்சிஷ்டகணபதிஒன்றும்இருக்கும். இவைசாதாரணமானவை.

இனிமேற்குநோக்கிக்கோயிலுள்நுழையவிரும்பினால்நாம்உடனேபோய்விடமுடியாது. மூன்றுஅற்புதமானசிலைகள்வழிமறிக்கும். வாயிலுக்குத்தென்பக்கத்தில்உள்ளஅன்னபூரணி, வடபக்கத்தில்உள்ளஅதிகாரநந்தி, கண்ணப்பர்எல்லாம்நான்குஅடிஉயரத்தில்உள்ளஅழகியகற்சிலைகள். அதில்அன்னபூரணிஓர்உயிர்ஓவியம். கையிலேஅவள்அமுதகலசம்ஏந்திநிற்கிறஒயில்ஒன்றேபோதும். அவளைப்பிரார்த்தித்துக்கொண்டேகோயிலுள்நுழையலாம். நேரேகருவறைக்கேசெல்லலாம். கருவறைவாயிலிலேகல்லில்ஒருசிலை. செம்பிலேஒருபடிமம்முன்னையதுகார்த்திகேயன். பின்னையதுபோகசக்திஅம்மன். இரண்டும்பார்த்துப்பார்த்துஅனுபவிக்கத்தகுந்தவை. இவர்களைக்கண்டுகளித்தபின்ஐராவதேசுவரரையும்வணங்கிவிட்டுவெளியேவந்துஒருசுற்றுச்சுற்றலாம். ராஜகம்பீரன்மண்டபத்தின்உள்தோற்றத்தைப்பார்த்தோம்முன்னால். வெளித்தோற்றம்ஒருதேர்போலவேஇருக்கும். தேர்ச்சக்கரங்கள்உருளும்; குதிரைகள்ஓடும். மேலும்ஒவ்வொருவரிசையிலும்எண்ணிறந்தசிற்பவடிவங்கள், யாழ்வரிசைகள்எல்லாம்மிக்கஅழகோடுஅமைந்தவை. மேலும்நடந்தால்ஒருமாடத்தில்அக்கினிஉட்கார்ந்திருப்பார், இன்னொருமாடத்தில்வீரபத்திரர்ஆடிக்கொண்டிருப்பார்திரிபுவனத்தில்கண்டசரபர்வேறேஒருசிறுகோயிலுள்.

இவைதவிரயானைசிங்கம்போர், யானையின்மத்தகத்திலேபாய்ந்துஅதனைக்கிழிக்கும்சிங்கம்எல்லாம்தத்ரூபம். இன்னும்சிற்பஉலகிலேஎண்ணிறந்தவின்னியாசங்கள். ஒரேவடிவிலேயானையும்எருதும்என்றெல்லாம். இக்கோயில்வடபக்கத்துமண்டபத்திலேதான்பிக்ஷாடனரும், அவருடைய . அழகில்மயங்கியரிஷிபத்தினிகளும்இருந்திருக்கிறார்கள். இவர்களோடுதிரிபுராந்தகர், கஜசம்ஹாரர்எல்லாம்நல்லகல்லுருவில்ஆஜானுபாகுவாகநின்றிருக்கிறார்கள். இவர்கள்தலையில்மண்டபங்கள்விழுந்துவிடக்கூடாதேஎன்றுபக்குவமாகஅவர்களைஅடிபெயர்த்துத். தஞ்சையில்உருவானகலைக்கூடத்துக்கேகொண்டுசென்றிருக்கிறார்கள். தஞ்சைசெல்லும்போதுஅவர்களைப்பார்த்துக்கொள்ளலாம்.

இத்தனையும்பார்த்துவிட்டோமே, இங்கேஅம்பிகைகோயில்இல்லையா? என்றுநீங்கள்கேட்பதுகாதில்விழுகிறது. அம்பிகையாம்தெய்வநாயகிக்குத்தனியாகஒருகோயில்வடக்கேநூறுகஜதூரத்தில்இருக்கிறது. இதுநிரம்பப்பெரியகோயில்அல்ல. சிற்பவடிவங்கள்நிறைந்ததும்அல்ல. செல்வத்தையெல்லாம்தான்அள்ளிக்கொட்டிவிட்டானே, ஐராவதேசுவரர்கோயிலிலேயே.

இக்கோயிலில் 52 கல்வெட்டுக்கள்இருக்கின்றன. அவைகளுள்பெரும்பாலானவைஇரண்டாம்ராஜராஜன், இரண்டாம்ராஜாதிராஜன், மூன்றாம்குலோத்துங்கன், வீரபாண்டியன்காலத்தியவையாகும். இவைகளைஆராயுமிடத்து, இக்கோயில்இரண்டாம்ராஜராஜனால்கட்டப்பட்டுப்பின்னர்மூன்றாம்குலோத்துங்கனால்செப்பனிடப்பட்டிருக்கவேண்டும். கோயில்திருமாளிகைச்சுற்றுப்பகுதியில்கீழ்ப்புறம், இக்கோயிலைஎழுப்பியஇரண்டாம்ராஜராஜன்அவனுடையபட்டமகிஷிபுவனமுழுதுடையாள்இவர்களதுசிலைகள்இருந்திருக்கின்றன. அவர்களையுமேஎடுத்துச்சென்றுவிட்டார்கள்இந்தத்தஞ்சைக்கலைக்கூடத்தார். கோயிலின்கருவறையின்புறச்சுவரில் 63 நாயன்மார்வடிவங்களும்சைவஆச்சாரியார் 108 வடிவங்களும்இருக்கின்றன. பெரியபுராணவரலாறுகளைஆராய்பவர்க்குப்பெரிதும்பயன்படும்.

ஐராவதேசுவரர்பாடல்பெறும்பாக்கியம்பெற்றவர்அல்லர். பன்னிரண்டாம்நூற்றாண்டில்இருந்தபுலவர்களுக்கோதலங்களில்அக்கறைஇல்லை. அவர்கள்அக்கறைஎல்லாம்அரசர்களிடத்தே. அதனால்அவர்பாடல்பெறாமலேநின்றுவிட்டார். ஆனால்அவரைஉருவாக்கியராஜராஜன்பாடல்பெற்றவன், அதுவும்அவனதுதந்தையின்அவைக்களப்புலவராகஇருந்தஒட்டக்கூத்தராலேயே. ராஜராஜன்உலாவிற்குகண்ணிக்குஆயிரம்பொன்வீதம்பரிசுகொடுத்திருக்கிறான்அரசன். இதுதவிர, இவனுக்கும்இவனதுமனைவிக்கும்நேர்ந்தபிணக்கைத்தீர்க்கவும்பாடியிருக்கிறார்அவர். இதைப்பற்றிஒருரஸமானவரலாறு. இரண்டுநல்லபாடல்கள்நமக்குக்கிடைக்கின்றன. அரசிஅரசனோடுஊடிஅக்கோபத்தில்தன்அந்தப்புரவாயிலைஅடைத்துக்கொள்கிறாள். அரசன்போய்க்கதவைத்தட்டினால்திறக்கிறவழியாகக்காணோம். அவைப்புலவர்ஒட்டக்கூத்தர்போகிறார்.

நானேஇனிஉனைவேண்டுவதில்லை

நளினமலர்த்

தேனே! கபாடம்திறந்திடுவாய்;

திறவாவிடிலோ

வான்ஏறுஅனையஇரவி

குலாதியன்வாயில்வந்தால்

தானேதிறக்கும்நின்கைத்

தலம்ஆகியதாமரையே.

என்றுபாடுகிறார். தேவியோஇன்னும்கொஞ்சம்கோபமுற்று, “! அப்படியாசங்கதி? நானாதிறப்பேன்! ஒட்டக்கூத்தன்பாட்டுக்குஇரட்டைத்தாழ்என்றுமற்றொருதாழ்ப்பாளையும்போட்டுக்கொள்கிறாள். அரசியுடன்வந்தசீதனக்கவிஞனானபுகழேந்திவருகிறார்பின்னால்,

இழைஒன்றுஇரண்டுவகிர்செய்த

நுண்ணிடைஏந்துவள்ளைக்

குழைஒன்றுஇரண்டுவிழிஅணங்கே!

கொண்டகோபமென்னோ!

மழைஒன்றுஇரண்டுகை

மானாபரணன்உன்வாயில்வந்தால்

பிழைஒன்றுஇரண்டுபொறாரோ?

குடியில்பிறந்தவரே!

என்றுபக்குவமாகப்பாடுகிறார். கதவைத்திறக்கிறாள்அரசி. ஊடல்தீர்கிறதுஅவளுக்கு. இவ்விரண்டுபாட்டும்எந்தச்சோழமன்னனைப்பற்றியதுஎன்றுபாட்டிலிருந்துதெரியவில்லை. அதனால்பரவாயில்லை. குலோத்துங்கனைப்பற்றிஇருந்தால்என்ன? சுவையோடுஅனுபவிக்கத்தகுந்தவைதானே.