நாச்சியார்கோயில் நாச்சியார்
பழந்தமிழ்இலக்கியமானகலித்தொகையில்ஒருகாதல்கதை. ஆம், அந்தக் ‘கற்றுஅறிந்தார்ஏத்தும்கலியில்எத்தனைகதைகள்! நான்சொல்லும்கதைபலர்படித்துஅனுபவித்ததுதான். ஒருபெண்; அவள்சிறுமியாகஇருக்கும்போதுபக்கத்துவீட்டுப்பெண்களுடன்கூடிச்சிறுவீடுகட்டி, சோறுசமைத்து, விருந்தருந்திஎல்லாம்விளையாடுவாள். ஆண்பிள்ளைகளைஅவள்விளையாட்டில்சேர்த்துக்கொள்வதில்லை. அதனால்கோபமுற்றஅடுத்ததெருப்பையன்ஒருவன்வருவான்; இவளதுபந்தைஎடுத்துக்கொண்டுஓடுவான்; கையால்கட்டியசிறுவீட்டைக்காலால்அழிப்பான். இப்படிச்சிறுசிறுகுறும்புசெய்வதேஅவன்தொழில்.
ஆண்டுகள்கழிகின்றன. பெண்வளர்ந்துமங்கைப்பருவம்அடைகிறாள். குறும்புசெய்தபயலும்வளர்ந்துகட்டிளங்காளையாகிறான். ஒருவரையொருவர்பார்க்கின்றனர்ஒருநாள், அந்தப்பார்வையிலேயேகாதல்பிறக்கிறதுஇருவருக்கும். என்றாலும், நெருங்கிப்பேசியதில்லை, பழகியதில்லை. தன்காதலைவெளியிடஒருசந்தர்ப்பத்தைஉருவாக்கிக்கொள்ளவிரைகிறான்இளைஞன். துணிந்துகன்னிப்பெண்ணின்வீட்டுக்கேவருகிறான்; பெண்ணும்தாயும்தனித்திருக்கும்நேரத்திலே ‘தாகமாயிருக்கிறது; கொஞ்சம்தண்ணீர்வேண்டும்‘ என்கிறான். வீட்டிற்குள்இருந்தஅம்மாவும், பெண்ணைஅழைத்து ‘பெண்ணே! இந்தப்பையனுக்குக்கொஞ்சம்தண்ணீர்கொடம்மா‘ என்கிறாள். பெண்ணும்ஒருசிறு! செம்பிலேதண்ணீர்எடுத்துக்கொண்டுதலைவாயிலுக்குவருகிறாள். வந்திருப்பவனைப்பார்க்கிறாள். அவன்தாகத்துக்குத்தண்ணீர்கேட்டுவந்தவனா? அவன்கொஞ்சம்அவசரக்காரனும்கூட; ஆதலால்நீர்கொண்டுவந்தபெண்ணின்கையைப்பற்றித்தன்பக்கலில்இழுக்கிறான். எவ்வளவுதான்காதல்வயப்பட்டாலும், இப்படித்திடீரென்றுஆடவன்கையைப்பற்றினால்கன்னிப்பெண்சும்மாஇருப்பாளா? ‘அம்மாஇவன்செய்வதைப்பாரம்மா‘ என்கிறாள். வீட்டிற்குள்ளிருந்தஅம்மா, மகள்சத்தம்கேட்டுஓடிவருகிறாள்.
அதற்குள்மகள்சுதாரித்துக்கொள்கிறாள். காதலனைச்காட்டிக்கொடுக்கவில்லை. அம்மாஎன்ன? என்ன?’ என்றுகேட்க, ‘ஐயோ? இவருக்குத்தண்ணீர்குடிக்கும்போதுவிக்கிவிக்கிப்புரையேறிவிட்டதுஅம்மா! நான்பயந்தேவிட்டேன்‘ என்றுஒருபுதியநாடகமேநடிக்கிறாள். அம்மாவும்அவள்வார்த்தையைஉண்மைஎனநம்பி, அவன்முகத்தைத்தடவிக்கொடுக்கிறாள். அப்போதுபயல்சும்மாவாஇருக்கிறான்; அம்மாவுக்குத்தெரியாமல்பெண்ணைப்பார்த்துக்கண்சிமிட்டிச்சிரிக்கிறான். ஆம், அவள்உள்ளத்தையும்அவன்தெரிந்துகொண்டான்அல்லவா? இப்படிஒருநாடகம். இந்நாடகத்தைமறுநாள்தன்னைத்தேடிவந்ததன்தோழியிடம்பெண்ணேசொல்கிறாள், அப்படிச்சொன்னதாகக்குறிஞ்சிக்கலியில்கபிலர்பாடுகிறார்.
கடர்த்தொடீஇ! கேளாம். தெருவில்நாம்ஆடும்மணற்சிற்றில்காலின்சிதையாஅடைச்சிய
கோதைபரிந்து. வரிப்பந்துகொண்டுஓடி
நோதக்கசெய்யும்சிறுபட்டி, மேல்ஓர்நாள்
அன்னையும்யானும்இருந்தேமா. இல்லிரே!
உண்ணும்நீர்வேட்டேன்எனவந்தாற்கு, அன்னைஅடல்பொன்சிரகத்தால்வாக்கிசுடரிழாய்!
உண்ணும்நீர்ஊட்டிவாஎன்றாள் ; என, யானும்
தன்னைஅறியாதுசென்றேன். மற்றுஎன்னைவளைமுன்கைபற்றிநலிய, தெருமந்திட்டு
அன்னாய்இவன்ஒருவன்செய்ததுகாண்என்றேனா, அன்னைஅலறிப்படர்தர, தன்னையான்
உண்ணும்நீர்விக்கினான்என்றேனா, அன்னையும்தன்னைப்புறம்புஅழித்துநீவ, மற்றுஎன்னைக்கடைக்கண்ணால்கொல்வான்போல்நோக்கி
நகைக்கூட்டம்செய்தான், அக்கள்வன்மகன்
என்பதுபாட்டு. பெண்எப்படித்தன்காதலைத்தோழியிடம் “நைஸாக‘ வெளியிடுகிறாள்என்பதைஅறிந்துஅறிந்துஅனுபவிக்கிறோம்பாட்டைப்படிக்கிறபோதெல்லாம்.
இந்தக் ‘கள்வன்மகன்‘ செய்தசிறுகுறும்பையேஅந்தக்கள்ளக்கண்ணனுமேசெய்திருக்கிறான். கதைஇதுதான் : திருநறையூர்என்னும்தலத்திலேமேதாவிமுனிவர்இருந்துதவம்செய்கிறார். அவருடையஆசையெல்லாம்திருமாமகள், தனக்கொருமகளாகப்பிறக்கவேண்டும்என்பதுதான், அவர்விரும்பியவண்ணமேதிரும்களும், முனிவரதுபர்ணசாலையின்அருகிலேவஞ்சுளமரத்தடியில்சிறுகுழந்தையாகஅவதரிக்கிறாள். முனிவரும்அவளைஎடுத்துவஞ்சுளவல்லிஎன்றுபெயரிட்டுவளர்க்கிறார். அவளும்வளர்ந்துமங்கைப்பருவம்அடைகிறாள். அந்தநாராயணன்தான்எத்தனைநாட்களுக்குத்திருமகளைப்பிரிந்துஇருப்பான்? (ஆம், இந்தபக்தர்கள்விரும்பும்போதெல்லாம்தான்பூதேவியும்சீதேவியும்ஏன்அந்தஉமையும்கூடத்தங்கள்புருஷன்மாரைத்தவிக்கவிட்டுவிட்டு, பூலோகத்தில், வந்துஅவதரித்துவிடுகிறார்களே! அத்தனைஅன்புதம்பக்தர்களிடம்அவர்களுக்கு, தம்கணவரிடம்வைத்திருக்கும்அன்பைவிட). அவளைத்தேடிக்கொண்டுபூலோகத்திற்குவருகிறான்சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன்என்றுஐந்துஉருத்தாங்கிவருகிறான். இந்தப்பஞ்சவியூகப்பரமர்களையும்மேதாவிமுனிவரதுசீடர்கள்மணிமுத்தாற்றின்கரையிலேசந்தித்துமுனிவரதுஆசிரமத்திற்குஅழைத்துவருகிறார்கள்.
ஐவரையும்அதிதிகளாகஏற்றுஉபசரிக்கிறார்முனிவர். ஐவரில்நடுநாயகமாகஅமைந்தவசுதேவருக்குவஞ்சுளவல்லியின்மேலேஒருகண். உணவுஅருந்திவிட்டுக்கையலம்பக்கிளம்பியபோது, முனிவர்தம்பெண்ணைதண்ணீர்கொடுக்கச்சொல்கிறார். தண்ணீர்கொண்டுவந்ததையலின்கையைவசுதேவன்பற்றுகிறான். உடனேவஞ்சுளவல்லி ‘அப்பா! இவர்செய்வதைப்பாரும்‘ என்கிறாள். ஓடிவந்தமேதாவிமுனிவர், தம்மகள்கைப்பற்றிநிற்கம்வசுதேவனைக்காண்கிறார். அவனதுஅக்கிரமத்தைக்கண்டுகோபங்கொள்கிறார். சாபம்கொடுக்கவேமுனைகிறார்.
வசுதேவனோஇந்தஇக்கட்டானநிலையைஉணர்ந்து, சங்குசக்கரம்ஏந்தியதன்திருக்கோலத்தைஉடனேகாட்டுகிறான். வந்திருப்பவன்திருமகள்கொழுநனாம்நாராயணனேஎன்றுஅறிந்ததும்மேதாவிமுனிவர்வாழ்த்துகிறார்; தம்மகளாம்வஞ்சுளவல்லியைவசுதேவன்வடிவில்வந்தநம்பிக்குத்திருமணம்செய்துகொடுக்கிறார். அந்தத்திருமணக்கோலத்திலேயேஇந்தநறையூரிலேநம்பிநின்றருளுகிறான். மேதாவிமுனிவர்கெட்டிக்காரர். திருமணம்முடியும்முன்பே, நறையூர்நம்பியிடம்சிலநிபந்தனைகள்போடுகிறார். ஒன்றுதமக்குப்பிறவாமையாகியபேறு, மற்றொன்றுஅத்தலத்தில்வாழும்உயிர்களுக்குஎல்லாம்விண்ணகரவாழ்வு, மூன்றாவதாகஅத்தலத்தில்எல்லாக்காரியங்களிலும்அக்ரஸ்தானம்தம்பெண்ணாகியவஞ்சுளவல்லிநாச்சியாருக்கேஎன்பவைஅவை.
நிபந்தனைகளுக்குஎல்லாம்உட்பட்டேநம்பி, நாச்சியாரைத்திருமணம்செய்துகொள்கிறான். அன்றுமுதல்நறையூர்என்றபெயர்மங்கிநாச்சியார்கோயில்என்றேவிளங்குகிறதுஅத்தலம். நறையூர்நம்பியும், அன்றுமுதல் ‘ஹென்பெக்ட்ஹஸ்பெண்டாகவே‘ அத்தலத்தில்வாழ்கிறான்! அந்தநாச்சியார்கோயிலுக்கேஇன்றுசெல்கிறோம்நாம்.
நறையூர்என்னும்இந்நாச்சியார்கோயில்கும்பகோணத்திலிருந்துதிருவாரூர்செல்லும்பாதையில்ஆறுமைல்தொலைவில்இருக்கிறது. கும்பகோணம்ஸ்டேஷனில்இறங்கினால்வண்டிகிடைக்கும்; பஸ்கிடைக்கும்; ஏன்? கார்வேண்டுமானாலும்கிடைக்கும். செல்பவர்கள்ஸ்ரீவைஷ்ணவர்கள்என்றால்கண்ணைமூடிக்கொண்டுநேரேநாச்சியார்கோயிலுக்கேசென்றுவிடலாம்.
சைவவைஷ்ணவவேற்றுமைஎல்லாம்நமக்குக்கிடையாதுஎன்றுசொல்பவர்கள்இருந்தால்வழியில்உள்ளஅரிசிற்கரைப்புத்தூர், நறையூர்சித்தீச்சுரம்என்னும்சிவன்கோயில்களிலும்இறங்கிஅங்குள்ளசொர்ணபுரிஈசுவரர், சித்தநாதஈசுவரர்இவர்களையும்வணங்கியபின்மேலேநடக்கலாம். நாராயணன்சிவனைவணங்கிப்பலவரங்களைப்பெற்றான்என்றுதான்சைவர்கள்கதைசொல்வார்கள். இவற்றிற்கெல்லாம்வஞ்சம்தீர்த்துக்கொள்கிறார்கள்வைஷ்ணவர்கள், பிரமன்தலையைக்கொய்தசிவபெருமான்கையில்அந்தக்கபாலம்ஒட்டிக்கொள்ளஅதைக்களைய, சித்தநாதஈசுவரர்நறையூர்நம்பியைவணங்கினார்என்பதுபுராணவரலாறு.
ஏதோபெண்சாதிக்குஅடங்கிவாழ்பவர்என்றாலும், இப்படிசிவனுக்கும்மேற்பட்டபரத்துவம்உடையவராகஇருக்கிறாரேஎன்பதில்நமக்குஒருமகிழ்ச்சி. இனிநாச்சியார்கோயிலைநோக்கிநடக்கலாம். அந்தக்கோயிலையும்முந்திக், கொண்டுஒருபெரியதிருக்குளம்தோன்றும். 684 அடிநீளமும் 225 அடிஅகலமும்உள்ளஇந்தத்திருக்குளத்தைமணிமுத்தாறுஎன்றுகூறுகிறார்கள், நறையூர்நம்பிக்குஅணிவிக்கத்திருப்பாற்கடலிலிருந்துவைரமுடியைக்கருடாழ்வார்எடுத்துப்போகும்போதுஅதில்உள்ளமணிஒன்றுகழன்றுவிழுந்திருக்கிறதுஇக்குளத்தில். அதனால்தான்மணிமுத்தாறுஎன்கிறார்களாம். இதுமிகப்புனிதமானதீர்த்தம்: இறங்கிநீராடுவதற்குவசதியாகவும்இருக்கும். ஆதலால்நீராடிவிட்டேகோயிலுள்செல்லலாம். .
கோயில்வாயிலில், நிரந்தரமாகப்பந்தல்போட்டுவைத்திருக்கிறார்கள். கோயில்வாயிலை 75 அடிஉயரமுள்ளகோபுரம்அழகுசெய்கிறது. கோபுரவாயிலில்ஒருமாடத்தில்தும்பிக்கைஆழ்வார்இடம்பிடித்துஉட்கார்ந்திருக்கிறார், அவரைவணங்கிவிட்டுஉள்ளேசெல்லலாம். உள்ளேநுழைந்ததும்ஏதோதெரியாத்தனமாகமதுரைதிருமலைநாயக்கர்மஹாலுக்கேவந்துசேர்ந்துவிட்டோமேஎன்றுதோன்றும். அப்படிஉருண்டுதிரண்டபெரியதூண்கள்ஏந்தும்மண்டபம்ஒன்றைப்புதிதாகச்சமைத்திருக்கிறார்கள். மண்டபம்அழகாயிருக்கிறதுஎன்பதுவாஸ்தவம். ஆனால்அந்தகோச்செங்கணான்கட்டியமாடக்கோயில்கட்டிடக்கலையோடுபொருந்துவதாகஇல்லை. பரவாயில்லை. செய்ததைஅழகாகச்செய்திருக்கிறார்களேஎன்றுதிருப்திப்பட்டுக்கொண்டேநடக்கலாம்.
கோயில்மிகவும்பெரியகோயில், 690 அடிநீளம் 288 அடிஅகலம்என்றால்கொஞ்சம்கற்பனைபண்ணிப்பார்த்துக்கொள்ளுங்களேன். இக்கோயில்விமானம்ஸ்ரீநிவாசவிமானம்எனப்பெயர்பெறும். ஸ்ரீநிவாசன்மிகவும்மகிழ்ந்துஉறையும்தலத்தில்உள்ளவிமானம்ஸ்ரீநிவாசவிமானமாயிருப்பதுபொருத்தம்தானே. ஒன்றுசொல்லமறந்துவிட்டேன். இதுஸ்ரீநிவாசனுக்குமட்டுந்தான்உகந்ததலம்என்பதல்ல; அந்தஸ்ரீதேவிக்குமேதேன்அனையஇருப்பானதுபற்றித்தானேநறையூர்என்றேபெயர்பெற்றிருக்கிறது. புதிதாய்க்கட்டியமண்டபத்தினின்றும்விலகிவிமானதரிசனம்செய்தபின்படிக்கட்டுகள்ஏறிக்கல்யாணமண்டபத்தைக்கடந்து, திரும்பவும்படிக்கட்டுகள்ஏறியேகருப்பக்கிருகவாயிலுக்கேவரவேணும். அங்கேகிழக்குநோக்கியதிருமுகமண்டலத்துடன்நிற்பவனேஸ்ரீநிவாசன்என்னும்நறையூர்நம்பி. அன்றுமேதாவிமுனிவருக்குஆழியும்சங்கமும்ஏந்தியகைகளைமுன்னேநீட்டிக்கொண்டுஎழுந்தருளியஅவசரத்திலேயேநிற்கிறான். இவருக்குஇரண்டேகைகள்தான். காட்சிகொடுக்கத்துடித்தஅவசரத்தில்தனக்குநான்குகைகள்உண்டுஎன்பதைக்கூடஅல்லவாஇவர்மறந்திருக்கிறார்!
இந்திரநீலமொத்தஇருண்டமேனி, குன்றாடும்கொழுமுகில்போல், குவளைகள்போல், குரைகடல்போல், நின்றாடும்கமலமயில்போல்நிறமுடையபெருமான்அவன்என்றாலும்மேனியெல்லாம்தங்கக்கவசமும், அழகானஆபரணங்களும்அணிந்துகொண்டேசேவைசாதிக்கிறான். இவருக்குப்பக்கத்திலேவஞ்சுளவல்லி, மன்னும்மரகதக்குன்றின்அருகேஓர்இளம்வஞ்சிக்கொடிநிற்பதுபோலநிற்கிறாள். இந்தநம்பியைஅடுத்தேஅன்றுஅவருடன்வந்தசங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர், புருஷோத்தமர்நிற்கிறார்கள். மூலவருக்குமுன்னால்உற்சவர்இருக்கிறார், எல்லாஇடத்திலும்பூதேவிஸ்ரீதேவிசமேதனாகநிற்பவர்இங்கேவஞ்சுளவல்லியோடுமாத்திரமேநிற்கிறார். இந்தவஞ்சுளவல்லியும், ‘இத்தலத்தில்எனக்கேபிரதானம்‘ என்பதைச்சொல்லிக்கொள்கிறவள்போன்றுஓர்அடிஎட்டிஎடுத்துவைத்துமுன்வந்துநிற்கிறாள். இந்தக்கோயிலிலும்நாச்சியாருக்குத்தனிச்சந்நிதிகிடையாது. ஆம், நறையூர்நம்பியே, நாச்சியார்நிழலிலேஒதுங்கித்தானேவாழ்கிறார்.
நம்பி, நாச்சியார்எல்லோரையும்வணங்கிவிட்டுவெளியேவரும்போதுஇத்தலம்தானேகருடசேவைக்குப்பேர்போனது, கருவறையில்கருடனைக்காணோமேஎன்றுகேட்கத்தோன்றும். அதற்குள்அர்ச்சர்கள்நம்மைஅந்தப்பக்ஷிராஜன்சந்நிதிக்கேகூட்டிச்சென்றுவிடுவார்கள். இவர்நல்லகருங்கல்உருவினர். கல்கருடன்என்றபெயர்பெற்றவர். வாகானவடிவம், நீள்சிறகு, நீள்முடி, அகன்றமார்பு, ஆஜானுபாகுவானதோற்றத்தோடுவிளங்குவார்தனிக்கோயிலில். இந்தக்கோயில்பத்தரைஅடிச்சதுரமேஉள்ளசிறியகோயில்தான். அங்கிருந்துவெளியேநான்குபேர்எளிதாகஎடுத்துவந்துவிடுவார்கள்.
அதன்பின்அந்தப்பொல்லாதகருடாழ்வாருக்குஎங்கிருந்துதான்பலம்வருகிறதோதெரியவில்லை . பின்னர்வெளியில்எடுக்கவேண்டுமானால்எட்டுப்பேர்களாகவும்இன்னும்படிகள்இறங்கும்போதுமுப்பத்திரண்டுபேர்களாகவும்ஸ்ரீபாதம்தாங்குகிறவர்கள்வளர்ந்துகொண்டேபோவார்கள். தறையூர்நம்பிஆரோகணித்துவரும்நாச்சியார்கோயில்கருடசேவைகண்கொள்ளாக்காட்சியே. மார்கழி, பங்குனிமாதங்களில்நடக்கும்இந்தச்சேவைக்குப்பக்தர்கள்கூட்டம்அதிகம். இவர்சிறந்தவரப்பிரசாதி. நறையூர்நம்பியிடம்கேட்டுப்பெறாதபிரார்த்தனைகளைக்கூடஇவர்நிறைவேற்றிவைக்கும்ஆற்றல்உடையவர்.
அவருக்குஉவப்பானபலகாரம்அமுதகலசம்என்னும்மோதகம்தான். இந்தஅமுதகலசம்என்றைக்கும். கிடைக்கும். கிடைக்காவிட்டாலும், காத்திருந்துபண்ணச்சொல்லி, பக்ஷிராஜனுக்குநிவேதனம்பண்ணிவிட்டு, ருசிபார்த்துவிட்டேகிளம்புங்கள். எக்காரணத்தையிட்டும்அமுதகலசம்அருந்தமறந்துவிடாதீர்கள்.
இன்னும்இத்தலத்திலே, நரசிம்மன்சந்நிதி, ஆஞ்சநேயர்சந்நிதி, ஆழ்வார்கள்சந்நிதிஎல்லாம்பார்க்கவேண்டியவை. மேலும்எண்ணற்றசெப்புவடிவங்கள்பெரியஅளவிலும்மிகச்சிறியஅளவிலும்ஏராளமாகஇருக்கின்றன. இருப்பவைகளில்கலைஅழகுநிரம்பியதுயோகநரசிம்மரதுவடிவம். சிறியவைகளைஎல்லாம், நல்லகண்ணாடிப்பெட்டியில்பாதுகாத்துவைத்திருக்கிறார்கள். கலைஅன்பர்கள்விரும்பினால்எடுத்துக்காட்டுவார்கள். இந்தநறையூர்நம்பியிடம்ஆறாதகாதல்உடையவர்திருமங்கைமன்னன்என்பதைஅவர்பாடியநூற்றுப்பத்துப்பாசுரங்களிலிருந்துதெரிந்துகொள்ளலாம். இத்தலத்துஸ்ரீனிவாசனேஅவருக்குமுத்திராதாரணம்செய்துவைத்திருக்கிறார். இத்தலத்தைப்பற்றி, இங்குள்ளநம்பியைப்பற்றிஅவர்பாடியபாடல்கள்எல்லாம்எத்தனைதரம்படித்தாலும்தெவிட்டாதவை.
குலையார்ந்தபழுக்காயும்,
பசுங்காயும்பாளைமுத்தும்
தலையார்த்தஇளங்கமுகின்
தடஞ்சோலைத்திருநறையூர்,
மலையார்ந்தகோலம்சேர்
மணிமாடம்மிகமன்னி
நிலையார்நின்றான். தன்
நீள்கழலேஅடைநெஞ்சே
என்றுநம்பியைப்பாடுவார். பின்னர்,
அம்பரமும், பெருநிலனும், திசைகள்எட்டும்,
அலைகடலும், குலவரையும், உண்டகண்டான்
கொம்புஅமரும்வட்மரத்தின்இலைமேல்பள்ளி
கூடினான்திருவடியேகூடகிற்பீர்?
வம்புஅவிழும்செண்பகத்தின்வாசமுண்டு
மணிவண்டுவகுளத்தின்மலர்மேல்வைகும்
செம்பியன்கோச்செங்கணான்சேர்ந்தகோயில் :திருநறையூர்மணிமாடம்சேர்மின்களே.
என்றுநம்மைஎல்லாம்கூவிஅழைத்துஅந்தநம்பியிடம்ஈடுபடுத்துவார். இந்தப்பாசுரங்கள்எல்லாம்அரங்கத்தில்துயிலும்அரவணையான். காதிலும்விழுந்திருக்கிறது. திருமங்கைமன்னன்நறையூர்நம்பிக்குஒருபெரியமடலும்அரங்கநாதனுக்குஒருபெரியமதிலும்கட்டமுனைந்தபோதுஅந்தஅரவணையான், மங்கைமன்னனைஅழைத்து “மதிலைஅங்கேகட்டு, மடலைஇங்கேபாடு”என்றுவேண்டியிருக்கிறான். அத்தனைவிருப்பம்அந்தஅரங்கநாதனுக்குமங்கைமன்னன்பாடல்பெற.
ஆனால்ஆழ்வாரோஇதற்குஇணங்கவில்லை. ‘மடல்அங்கேதான்மதில்இங்கேதான்‘ என்றுசொல்லிஅரங்கன்வேண்டுகோளையேதட்டிக்கழித்திருக்கிறார். அத்தனைஆர்வம்ஆழ்வார்க்குநம்பியிடம்.
கோச்செங்கணான்கட்டியமாடக்கோயில்பின்னர்வந்தமன்னர்களால்விரிவடைந்திருக்கிறது. அதைஎல்லாம்அங்குள்ளகல்வெட்டுக்கள்கூறுகின்றன. திரிபுவனசக்கரவர்த்திசடாவர்மன்சுந்தரபாண்டியன்நறையூரில்நின்றருளியஎம்பெருமானுக்குஒருதலத்தையேசாஸனம்செய்திருக்கிறான். தஞ்சைரகுநாதநாயக்கன்நாச்சியாருக்குஒருமண்டபம்கட்டியிருக்கிறான்.
இன்னும்இதுபோன்றஎத்தனையோதகவல்கள். நமக்குத்தகவல்கள்எதற்கு, நாச்சியாரும்நம்பியும்ஆட்கொள்ளமுனைந்துநிற்கும்போது.