தமிழ்நாடு – 70 – ஆவுடையார்கோயில்

சீரார் பெருந்துறையான்

படிக்கும்திருப்புகழ்போற்றுவன்,

கூற்றுவன்பாசத்தினால்

பிடிக்கும்பொழுதுவந்துஅஞ்சல்

என்பாய்பெரும்பாம்பில்நின்று

நடிக்கும்பிரான்மருகா, கொடுஞ்

சூரன்நடுங்கவெற்பை

இடிக்கும்கலாபத்தனிமயில்

ஏறும்இராவுத்தனே.

என்றுஅருணகிரியார்மயில்ஏறும்மாமுருகனைக்கந்தர்அலங்காரத்திலேபாடுகிறார், அந்தப்பாட்டைப்பற்றிஇரண்டுமுருகபக்தர்களிடையேஒருவிவாதம். ‘ஏன்ராவுத்தன்என்றுபாடியிருக்கிறார்? என்றைக்குஇந்தமுருகன்முஸ்லிம்ஆககன்வெர்ட்ஆனார்? என்பதுஒருவர்கேள்வி. மற்றவரோ, ‘அப்படியெல்லாம்முருகனைமுஸ்லீம்ஆக்கிவிடவில்லைஅருணகிரியார். சர்வசமயசமரசபாவத்தைவளர்க்கும்தமிழ்மக்கள்முருகனையும்ராவுத்தன்என்றுஅழைத்துத்தம்சமரசமனோபாவத்தைவெளியிட்டிருக்கிறார்அவ்வளவுதான்என்றுவாதிடுகிறார். இருவரும்இந்தவிவாதத்தைத்தீர்க்கஎன்னிடம்வந்தார்கள்ஒருநாள், அவர்கள்சொன்னதையெல்லாம்கேட்டபின்நான்கேட்டேன்அவர்களிடம்; ‘ராவுத்தன்மகனைராவுத்தன்என்றுஅழைக்காமல்வேறுஎப்படிஅழைப்பதுஎன்று?’ இதைக்கேட்டுஇருவரும்அப்படியேஅதிர்ந்துபோனார்கள். ‘என்னஇப்படிச்சொல்கிறீர்கள்?’ என்றுஎன்னிடமேமுறைத்துக்கொண்டார்கள்,

அவர்களிடம்நான்சொன்னேன் ; ‘உங்களுக்குத்தெரியும்யானையைஓட்டுபவன்மாவுத்தன்என்று. அதுபோலவேகுதிரையைஓட்டுபவனைராவுத்தன்என்றஅழைத்திருக்கிறார்கள்தமிழர்கள். முதல்முதல்தமிழகத்துக்குஅரேபியாவிலிருந்துமுஸ்லிம்கள்குதிரைகளைஓட்டிக்கொண்டுவந்தார்கள். குதிரைகளைஓட்டிக்கொண்டுவந்தவர்களைராவுத்தர்என்றுஅழைத்ததமிழர்கள்பின்னர்எல்லாமுஸ்லிம்களையுமேராவுத்தர்என்றுஅழைத்திருக்கிறார்கள். நாமெல்லாம்அறிந்தகதை. நமதுசிவபெருமான்அன்றுதிருப்பெருந்துறையிலிருந்துமதுரைக்குக்குதிரைஓட்டிவந்தார்என்பது. அதுவும்நல்லகச்சவடமுறையில்நரிகளையெல்லாம்பரிகளாக்கி, அந்தப்பரிகளையும்பாண்டியன்மந்திரியாகக்குதிரைவாங்கவந்தமாணிக்கவாசகருக்காகமதுரைக்குஓட்டிவந்திருக்கிறார்.

குதிரையைஓட்டிவந்தராவுத்தர்சிவபெருமான், அந்தராவுத்தர்மகன்முருகன். ராவுத்தர்மகன்ராவுத்தனாகஇருப்பதில்வியப்பில்லைதானே!’ என்றுவிளக்கம்கூறினேன். ஒத்துக்கொண்டார்கள், அந்தச்சைவபெருமக்கள், முருகபக்தர்கள். எங்கே, எப்பொழுது, எதற்காகஇந்தச்சிவன்ராவுத்தராகமாறினார்என்றுதெரிந்துகொள்ளவேண்டுமென்றால்திருப்பெருந்துறைசெல்லவேணும். அங்கேயேசெல்கிறோம்நாம்இன்று.

திருப்பெருந்துறைதஞ்சைமாவட்டத்தில்அறந்தாங்கிதாலுக்காவில்தென்கிழக்குக்கோடியில்இருக்கிறது. அங்குசெல்லவிரும்புகிறவர்கள்திருப்பெருந்துறைக்குச்செல்லவேண்டுமென்றுசொன்னால்பஸ்காரர்களுக்கோ, வண்டிக்காரர்களுக்கோதெரியாது. அந்தத்தலத்தின்பெயர்இன்றுஆவுடையார்கோயில்என்றுதான்வழங்குகிறதுஎன்பதைமுதலில்தெரிந்துகொள்ளவேணும். இந்தஆவுடையார்கோயில்என்னும்திருப்பெருந்துறைசெல்ல, திருவாரூர்காரைக்குடிரயில்பாதையில்ரயில்ஏறவேணும், அறந்தாங்கிஸ்டேஷனில்இறங்கிஅங்கிருந்துஒன்பதுமைல்போகவேணும். கார்வசதியுள்ளவர்கள்காரைக்குடியிலிருந்தும்போகலாம். எப்படிப்போனாலும்அறந்தாங்கியைக்கடந்தேசெல்லவேணும். ஊர்நிரம்பச்சின்னஊரும்அல்ல; பெரியஊரும்அல்ல; ஊரின்பெருமைஎல்லாம்அங்குள்ளகோயிலைவைத்துத்தான்.

இந்தத்தலத்துக்குஆவுடையார்கோயில்என்றுஏன்பெயர்வந்ததுஎன்றுதெரியவேண்டாமா? மற்றஎல்லாச்சிவன்கோயில்களிலும்இல்லாதவிசேஷம்ஒன்றுஇங்குஉண்டு. மற்றக்கோயில்களில்எல்லாம்கருவறையில்லிங்கத்திருவுருஇருக்கும். அம்பிகைகோயிலுள்அம்பிகைநின்றுகொண்டிருப்பாள். இந்தகோயிலில்மட்டும்ஆவுடையார்என்னும்பீடம்இருக்கும், லிங்கத்திருஉருஇருக்காது. அம்பிகைசந்நிதியிலும்அப்படியே. இறைவனுக்கும்இறைவிக்கும்உருவம்என்றுஒன்றுஇல்லை. கோயில்களில்சமைத்துவைத்திருக்கும்உருவம்எல்லாம்கலைஞன்கற்பனையில்உருவாக்கிநிறுத்தியவையேஎன்பதைஅறிவோம்.

அந்தஉண்மையைஅழுத்தமாகவிளக்குகிறதுஇந்தக்கோயில். இறைவன்திருப்பெயர், ஆத்மநாதர்; இறைவிபெயர்யோகாம்பிகை. இருவரும்அந்தர்யாமியாகத்தான்இங்குஎழுந்தருளியிருக்கிறார்கள். இருவருக்கும்இருக்கும்பீடம்இருக்கிறது. அதற்கேஅபிஷேகஆராதனைகள்எல்லாம். அப்படிப்பீடமாகியஆவுடையார்க்கேமுக்கியத்துவம்கொடுத்து, பூசைநடப்பதினால்தான்ஆவுடையார்கோயில்என்றுவழங்குகிறது. இப்படிஇறைவனும்இறைவியும்அரூபமாகஇருப்பதனால்தானோஎன்னவோஇங்குநந்திகிடையாது, கொடிமரம்கிடையாது, சண்டீசரும்இல்லை.

இந்தகோயிலில்பிரதான்யம்எல்லாம்சமயக்குரவர்நால்வரில்ஒருவரானமணிவாசகருக்கே. ஆதலால்அவர்சரிதத்தைத்தெரிந்துகொண்டேகோயிலுக்குள்செல்லலாம். மதுரையைஅடுத்தவாதவூரிலேமாணிக்கவாசகர்பிறக்கிறார். பலகலைகளையும்இளவயதிலேயேகற்கிறார். இவருடையஅறிவுடைமையைக்கேட்டு, அரிமர்த்தனபாண்டியன்இவரைத்தனக்குஅமைச்சராகஆக்கிக்கொள்கிறான். இவரிடம்நாற்பத்தொன்பதுகோடிபொன்கொடுத்து, கீழ்க்கடற்கரைக்குச்சென்றுஅங்குஅராபியர்கொண்டுவரும்குதிரைகளைவாங்கிவரச்சொல்கிறான். அமைச்சரானவாதவூரரும்திருப்பெருந்துறைவந்துசேருகிறார்.

அங்குகுருந்தமரத்தடியில்ஒருமுனிவர்உட்கார்ந்துதம்சீடர்சிலருக்குச்சிவஞானபோதம்உபதேசித்துக்கொண்டிருக்கிறார். அவரைப்பார்க்கிறார்வாதவூரர். அந்தக்குருவினிடம்ஒருபக்திஉண்டாகிறது. தம்மைமறக்கிறார். பின்னர்தம்மைஇப்படித்தடுத்துஆட்கொள்ளஎழுந்தகுருமூர்த்திஇறைவனேஎன்பதைஉணர்கிறார். கொண்டுவந்தபணத்தையெல்லாம்அந்தஇறைவனுக்குக்கோயில்கட்டுவதிலேயேசெலவுசெய்கிறார். விஷயம்எட்டுகிறதுபாண்டியனுக்கு. அரசன்அவரைமதுரைக்குஅழைக்கிறான். குதிரைகள்என்னஆயினஎன்றுகேட்கிறான். இறைவன்அருளியபடி, ஆவணிமூலத்தன்றுகுதிரைகள்வரும்என்றுகூறுகிறார். வாதவூரர்சொன்னபடியேஇறைவனும், திருப்பெருந்துறைக்காட்டிலுள்ளநரிகளையெல்லாம்பரிகளாக்கிஅவைகளைஓட்டிக்கொண்டுமதுரைக்குவருகிறான்ராவுத்தனாக. பரிகளைஎல்லாம்லாயத்தில்கட்டிவைக்கிறார்கள். ஆனால்இரவுக்கிரவேபரிகள்பழையபடிநரிகளாகிமற்றக்குதிரைகளையும்கடித்துக்குதறிவிட்டுஓடிவிடுகின்றன.

மன்னன்இதுஅறிந்துவாதவூரரைச்சிறையில்அடைக்கிறான்; துன்புறுத்துகிறான், திரும்பவும்இறைவன்மண்சுமக்கும்கூலியாளாகவந்துமன்னனிடம்அடிபடுகிறான். தனதுதிருக்கோலத்தையும்காட்டுகிறான். வாதவூரரும்சிறைநீங்கிஇறைவன்புகழைமணிமணியானபாடல்களில்பாடிமகிழ்கிறார். தலயாத்திரையையேதுவக்குகிறார். இந்தமணிவாசகர்பாடியதேதிருவாசகம். அந்தத்திருவாசகம்எழுவதற்குக்காரணமாகஇருந்ததலம்தான்இந்தத்திருப்பெருந்துறை.

நரியைக்குதிரைப்பரியாக்கி

ஞாலமெல்லாம்நிகழ்வித்து

பெரியதென்னன்மதுரையெலாம்

பிச்சதேற்றும்பெருந்துறையாய்!

என்பதுதானேமணிவாசகரதுபாடல், இந்தமணிவாசகரையும்அவருக்காகக்குதிரைவிற்கவந்தஇறைவனையும்காணவேநாம்இந்தத்தொலைதூரத்தில்உள்ளதிருப்பெருந்துறைக்குவந்திருக்கிறோம்.

பெருந்துறைக்கோயில்வாயில்

கோயில்தெற்கேபார்த்தகோயில். கோயிலுக்குமுன்ஒருபெரியகுளம்இருக்கிறது. அதைநெல்லியடிதேவதீர்த்தம்என்கிறார்கள். குளம்வெட்டியகாலத்தில்அதன்கரையில்நெல்லிமரங்கள்இருந்திருக்கவேண்டும். இந்ததேவதீர்த்தத்தின்கரையிலேவல்லபகணபதிகிழக்குநோக்கியிருக்கிறார். இவர்ஐந்துகரத்தனாகஇல்லைபதினோருகரத்தனாகஇருக்கும்இவரைவணங்கியபின்கோயிலின்பெரியமண்டபத்துக்குவந்துசேரலாம். இதனையேகோயில்நிர்வாகிகள்ஆயிரக்கால்மண்டபம்என்கின்றனர். இந்தமண்டபத்தின்முகப்பில்ஏழுதூண்களிலும்ஏழுசிற்பவடிவங்கள். உக்கிரநரசிம்மர், ஊர்த்துவதாண்டவர், ஆலங்காட்டுக்காளி, பிக்ஷாடனர்முதலியவர்கள். இன்னும்இந்தமண்டபத்தின்உள்ளேவில்லேந்தியவேலன், சங்கரநாராயணர், ரிஷபாந்திகர்எல்லாம். மண்டபம்நாயக்கமன்னர்காலத்தில்உருவாகியிருக்கவேண்டும். அளவிலும்காத்திரத்திலும்கம்பீரத்திலும்சிறந்தவையாகச்சிற்பவடிவங்கள்இருக்கின்றன.

இந்தமண்டபத்தைக்கடந்துஉள்நுழைந்தால்இரண்டுவீரபத்திரர்உருவங்களையும்பார்க்கலாம். இத்தலத்தில்உள்ளசிவயோகநாயகி, தவக்கோலத்தில்இருப்பதாகஐதீகம். அவளதுதவத்தைக்காப்பதற்குஇறைவன்வீரபத்திரனைஉருவாக்கினார்என்பதுபுராணக்கதை. இந்தவீரபத்திரன்அம்பிகைகோயிலிலும்இருக்கிறான். என்றாலும்சந்நிதிவாயிலிலுமேஒருவருக்குஇருவராகஇருந்துகாவல்புரிகின்றனர். இந்தவீரபத்திரர்களைவணங்கியபின்நாம்வந்துசேருவதுமாணிக்கவாசகரதுசந்நிதிக்கு. இச்சந்நிதியைக்கடந்துதான்மற்றஇடங்களுக்குச்செல்லவேணும். அப்படிச்கடந்துவெளிப்பிரகாரத்துக்குவந்தால்அங்குவெயில்உவந்தவிநாயகர்நம்மைவரவேற்பார். அவருக்குக்கோயில்இல்லை. அவர்தான்எப்பொழுதுமேசன்பாத்எடுக்கிறவர்ஆயிற்றே. எப்போதுமேவெயிலிலேயேஉட்கார்ந்துஉட்கார்ந்துநல்லதிடசரீரியாகவாழ்கிறார். இவரையே, ‘நிலவுவந்தமுடியினொடுவெயிலுவந்தமழகளிறுஎன்றுமகாவித்வான்மீனாட்சிசுந்தரம்பிள்ளைஅவர்கள்பாடிப்பரவியிருக்கிறார்கள். இவரையும்வணங்கிவிட்டேபிரசித்திபெற்றதியாகராஜமண்டபத்துக்குச்செல்லவேணும்.

இங்குதான்மாணிக்கவாசர்இரண்டுதிருக்கோலங்களில்சிலைஉருவில்இருக்கிறார். ஒன்றுமந்திரியின்கோலம். அந்தக்கோலத்தில்தானேஅவர்இங்குமுதல்முதல்வந்திருக்கிறார். மன்னனுக்குஉரியகிரீடம்கூடஅவர்தலையைஅலங்கரிக்கிறது. காதிலேகுண்டலங்கள், மார்பிலேஆரம், கைகளிலேஅணிகள்எல்லாம்அணிந்துகம்பீரமாகநிற்கிறார். இதற்குஎதிர்ப்புறமோ, அவரதுதுறவுக்கோலம். எல்லாஅணிகளையும்பணிகளையும்உதறிவிட்டுக்கூப்பியகையராய்நிற்கிறார். இந்தவடிவில்தானேஇறைவன்திருவடியில்நிலைத்துநின்றிருக்கிறார்அவர்.

இந்தமண்டபத்தின்கொடுங்கைகள்சிற்பஉலகில்பிரசித்தமானவை. கல்லைத்தகடாக்கிஅதில்பலவளைவுகள்கொடுத்துக்கூரைவேய்ந்திருக்கிறார்கள். அந்தக்காலத்திலேகோயில்கட்டஎக்ரிமெண்டுஎழுதிக்கொடுக்கும்சிற்பிகள், ‘தாரமங்கலம்தூண், திருவலஞ்சுழிப்பலகணி, ஆவுடையார்கோயில்கொடுங்கைஆகியவற்றைத்தவிரமற்றவேலைப்பாடுகளுக்குக்குறையாமல்செய்துதருகிறோம்என்றுஎழுதிக்கொடுப்பார்களாம். கொடுங்கைவேலைஅத்தனைஅற்புதமானது, அழகானது. இந்தமண்டபத்துக்குவடமேற்கிலேதான்தலவிருட்சமாகியகுருந்தமரம்நிற்கிறது. இந்தமரத்தடியிலேதான்இறைவன்எழுந்தருளிவாதவூரரைஆட்கொண்டிருக்கிறார்இதனைஅந்தமணிவாசகரேசொல்கிறாரே.

நீதியே! செல்வத்திருப்பெருந்துறையில்

நிறைமலர்க்குருந்தமேவியசீர்

ஆதியே! அடியேன்ஆதரித்துஅழைத்தால்

அதெந்துவேஎன்றுஅருளாயே!

என்பதுதானேஅவரதுதிருவாசகம். இரண்டாவதுபிரகாரத்தில்தான்பஞ்சாட்சரமண்டபம்என்னும்கனகசபைஇருக்கிறது. இந்தமண்டபத்தின்தூண்கள்ஒன்றில்தான்குதிரைச்சாமிஇருக்கிறார். ராவுத்தருக்குஉரியஉடையும்அணிந்துநாலுகால்பாய்ச்சலில்செல்லும்குதிரைமேல்ஆரோகணித்துஇருக்கிறார். இக்கோயிலில்பலகுதிரைவீரர்களதுசிலைகள்இருந்தாலும்இந்தக்குதிரைச்சாமிக்குமட்டுமேபூசைநடக்கிறது. இந்தமண்டபத்தைமாணிக்கவாசகரேகட்டினார்என்பதுவரலாறு. மண்டபத்தின்அமைப்பைப்பார்த்தால்மிகவும்பிந்தியகாலத்தில்தான்கட்டியிருக்கவேண்டும், என்றாலும்இந்தக்கோயில்முழுவதையுமேமணிவாசகர்கட்டினார்என்றுசொல்வதிலேபின்னால்கோயிலைவிரிவாக்கியவர்கள்பெருமைப்பட்டிருக்கிறார்கள். இன்றுகோயில்திருவாடுதுறைஆதீனத்தார்ஆளுகையில்இருக்கிறது.

இத்தனையும்பார்த்தபின்னரேதெற்குநோக்கியசுவாமிசந்நிதியிலும்கிழக்குநோக்கியஅம்பிகைசந்நிதியிலும்சென்றுவணங்கவேண்டும். மாணிக்கவாசகர்சந்நிதிக்குஎதிரிலேதான்அம்பிகைசந்நிதியிருக்கிறது. அம்மன்சந்நிதியைச்சுற்றிச்சலாகைஅடித்தசுவர்இருப்பதால்அந்தச்சுவர்த்துவாரங்களின்வழியாகத்தான்கர்பூரஹாரத்தியைக்காணவேண்டும். அம்பிகைக்கும்மாணிக்கவாசகருக்கும்ஏககாலத்தில்தீபஆராதனைநடக்கும். அப்போதுமணிவாசகர்பாடியதிருவாசகப்பாடல்கள்எல்லாம்நமதுஞாபகத்துவரும்.

நெறியல்லாநெறிதன்னை

நெறியாகநினைவேனை

சிறுநெறிகள்சேராமே

திருஅருளேசேரும்வண்ணம்

குறிஒன்றும்இல்லாத

கூத்தன்தன்கூத்தைஎனக்கு

அறியும்வண்ணம்அருளியவாறு

ஆர்பெறுவார்அச்சோவே

என்றுபாடினார்மாணிக்கவாசகர். நம்மையும்இந்தக்குறிஒன்றும்இல்லாதகூத்தனதுகோயிலுக்குஅழைத்துவந்து, அங்குஇருக்கும்அற்புதங்களையெல்லாம்காணவைத்தஇறைவன்திருவருளைவியந்துகொண்டேநாமும்வீடுதிரும்பலாம். இனி,

இன்பம்பெருக்கி

இருள்அகற்றிஎஞ்ஞான்றும்

துன்பம்தொடர்வறுத்து

சோதியாய்அன்புஅமைத்து

சீரார்பெருந்துறையான்

தன்னுடையசிந்தையே

ஊராகக்கொண்டான்

உவந்துஎன்றுதிருவாசகப்பாடலேநமதுநித்யப்பிரார்த்தனையாகவும்இருக்கலாம்தானே.