ஐயாறப்பன்
இது ‘டெலிவிஷன்‘ காலம்.’ மனிதனதுஅறிவுவளர்ச்சியின்காரணமாகமனிதனோடுமனிதன்எவ்வளவுதொலைதூரத்தில்இருந்தாலும்தொடர்புகொள்வதற்குஇன்றையவிஞ்ஞானம்சாதிக்கக்கொடுத்தவைஎத்தனைஎத்தனையோ? முதல்முதல்சங்கேதஒலிமூலம்ஓர்இடத்திலிருந்துஓர்இடத்துக்குச்செய்திஅனுப்பமனிதன்கற்றுக்கொண்டிருக்கிறான். அதன்பின்மனிதனுக்குமனிதன்நேரில்பேசுவதுபோல்தொலைதூரத்தில்உள்ளஇருவரும்பேசிக்கொள்ளவசதிசெய்துகொண்டிருக்கிறான். பின்னர்ஓர்இடத்தில்எழுகின்றஒலியைப்பலஇடத்தும்கேட்கஏற்பாடுகள்செய்துஅதன்மூலமெல்லாம்இன்னிசையை, தினசரிச்செய்திகளைப்பரப்பத்தெரிந்துகொண்டிருக்கிறான், எல்லாவற்றிற்கும்மகுடம்வைத்தாற்போல், ஓர்இடத்தில்நடக்கும்காட்சியையேதொலைவில்உள்ளவர்கள்உடனடியாகவேகாணுமாறுமின்காந்தஅலைகள்மூலம்அனுப்பக்கற்றுக்கொண்டிருக்கிறான். இதனையேஇன்று ‘டெலிவிஷன்‘ தொலைக்காட்சி ‘காணுதல்‘ என்றுசொல்கிறோம்நாம்.
இந்தத்தொலைக்காட்சிகாணஇன்றையவிஞ்ஞானிகள்நமக்குத்துணைபுரிகிறார்கள். இந்தவிஞ்ஞானிகளுக்குஎல்லாம்மேலானவிஞ்ஞானி, ஆம்! ‘டெலிவிஷன்எக்ஸ்பர்ட்‘ ஆகஒருவன்அன்றேஇருந்திருக்கிறான்நம்மிடையே, அவன்யார்? அவன்காட்டியடெலிவிஷன்காட்சிஎன்னஎன்றுதெரியவேண்டாமா? அதற்குச்சமயக்குரவரில்ஒருவரானஅப்பர்வரலாற்றைப்படிக்கவேணும். வரலாறுஇதுதான். நாவுக்கரசர்பலதலங்களுக்குச்சென்றுவிட்டுக்காளத்திவந்துசேருகிறார். அவருக்குஓர்ஆசை, தென்கயிலையாம்காளத்தியிலிருந்துவடகயிலைக்குச்சென்றுஅங்குஇறைவனைநேருக்குநேரேகண்டுவணங்கவேண்டும்என்று. அந்தஎண்ணத்தோடேயேதளர்ந்தஅந்தவயதில்தம்யாத்திரையைத்தொடங்கியிருக்கிறார். வாரணாசிவரைவந்திருக்கிறார். உடன்வந்தஅடியார்களால்அதற்குமேல்தொடரமுடியவில்லை. அவர்களையெல்லாம்அங்கேநிறுத்திவிட்டுமேலும்செல்கிறார்.
கைகால்தளர்ந்தாலும், மார்பினால்புரண்டுபுரண்டாவதுபோய்விடவேண்டும்என்றேதொடர்ந்துசெல்கிறார். இந்தநிலையில்இறைவன்ஒருமுனிவர்உருவில்வந்து, ‘கயிலையைமானிடர்இந்தஊனக்கண்ணால்காணுதல்இயலாதுஅப்பனே! ஆதலால்திரும்பிவிடு‘ என்கிறார். அப்பரோ, ‘ஆளும்நாயகன்கயிலையில்இருக்கைகண்டுஅல்லால், மாளும்இவ்வுடல்கொண்டுமீளேன்‘ என்கிறார். உடனேஇறைவன்அவருக்குஇரங்கி, அங்குள்ளபொய்கைஒன்றைக்காட்டிஅதில்முழுகும்படிசொல்கிறார். அப்படியேமுழுகியவர்பின்எழுந்ததுதிருவையாற்றிலுள்ளதிருக்குளத்திலேதான். எழுந்தவர்கண்முன்எழுகிறதுகயிலை. அங்குஅவர்கண்டஉயிர்கள்எல்லாம்சக்திசிவமாகவேவிளங்குகின்றன.
மாதர்பிறைக்கண்ணியானை
மலையான்மகளோடும்பாடி
போதொடுநீர்சுமந்துஏத்திப்
புகுவார்அவர்பின்புகுவேன்,
யாதும்கவடுபடாமல்
ஐயாறுஅடைகின்றபோது,
காதல்மடப்பிடியோடும்
களிறுவருவனகண்டேன்;
கண்டேன்அவன்திருப்பாதம்
கண்டறியாதனகண்டேன்.
என்றுஅவர்கண்டகயிலாயதரிசனத்தைத்தான்எவ்வளவுஎக்களிப்போடுபாடுகிறார்? இப்படித்தூராதொலைவில்உள்ளகயிலையைஐயாற்றில்அப்பருக்குக்காட்டியபெருமகன் ‘டெலிவிஷன்எக்ஸ்பர்ட்‘ அல்லவா? காட்சியைக்காட்டுவதோடுநிற்கவில்லை. காசிப்பக்கம்பொய்கையில்மூழ்கியவரைக்காவிரிக்கரையில்அல்லவாஎழச்செய்திருக்கிறார். இந்தவித்தகவிளையாட்டைஎன்னஎன்றுஉரைப்பது? இப்படித்தான்சிந்தனைகள்எழும்திருவையாறுசென்றுஅங்குஅப்பர்எழுந்தருளியதிருக்குளத்தையும், அதன்கரையில்கட்டப்பட்டுள்ளதென்கயிலாயம்என்றகோயிலையும்கண்டால், அந்தத்திருவையாற்றுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
திருவையாறுதஞ்சைக்குவடக்கேஏழுமைல்தொலைவில்காவிரிக்கரையில்இருக்கிறது, நெடுஞ்சாலைப்பொறியாளர்கள்மைல்கற்களில் ‘திருவையார்‘ என்றுஎழுதிவழிகாட்டுவார்கள் (அப்பர்கயிலைக்காட்சிகண்டஇடம்இவர்களுக்குத்திருவைக்காதஇடமாகக்காட்சிகொடுக்கிறது. என்னசெய்ய?). ஆங்கிலம்கற்றதமிழர்களோஅவ்வூரைத் ‘திருவாடி‘ என்றுசொல்வதிலேபெருமைப்படுவார்கள். இத்தலம்திருஐயாறுஎன்றுஅழைக்கப்படுவானேன்என்றுஅத்தலத்துஅன்பர்களைக்கேட்டால், “இதுதெரியாதா? தஞ்சையிலிருந்துதிருவையாறுவரும்போதுவடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுட்டி, காவேரிஎன்றுஐந்துநதிகளைக்கடக்கிறீர்களேஅதனால்தான்ஐயாறுஎன்கிறோம்நாங்கள்”என்பார்கள். சரி, கும்பகோணத்திலிருந்துவரும்போதுஓர்ஆற்றையுமேகடக்கவில்லையேஎன்றால், அதற்குஅவர்களுக்குப்பதில்சொல்லத்தெரியாது. உண்மையில்ஐயாறுஎன்றால், அழகியஆறாகியகாவிரி, அக்கரையில்உள்ளஅழகியஊர்என்றுதான்பொருள்.
‘செண்டாடுபுனற்கன்னி, செழுமணிகள்வந்தலைக்கும்திருவையாறு‘ என்றுதானேஞானசம்பந்தர்பாடிமகிழ்கிறார். இந்தஐயாறைஐந்துஆறுகளாக்கிஅங்குள்ளஇறைவனையும்பஞ்சந்தஈசுவரர்ஆக்கிஅங்குள்ளதீர்த்தமும்ஐந்துஎன்றுகணக்குக்காட்டி, மகிழ்கிறார்கள்மக்கள். இவர்களோடெல்லாம்நாம்விவாதிக்கவேண்டாம். நேரேகோயில்வாயிலிலேபோய்ச்சேரலாம். கும்பகோணத்திலிருந்துகாரிலோபஸ்ஸிலோவந்தால்கோயில்வாயிலிலேவந்துமுட்டுவோம். இல்லை, தஞ்சைவழிவந்தால்காவிரியைக்கடந்துகிழக்குநோக்கிநடந்துஅதன்பின்வடபக்கம்திரும்பிக்கோயில்வாயில்வந்துசேரவேணும். காவிரிக்கரையில்எத்தனையோகோயில்கள்இருந்தாலும்இந்தக்கோயில்ஒன்றையேகாவிரிக்கோட்டம்என்றுஅழைத்திருக்கின்றனர்நமதுமுன்னோர்.
இங்குஐயாறப்பனுக்கும்அவன்துணைவிஅறம்வளர்த்தாளுக்கும்கோயில்சமீபகாலத்தில்புதுப்பிக்கப்பட்டுச்சிறப்பாகத்திருப்பணிசெய்யப்பட்டிருக்கிறது. சுவாமிகோயில்பழையநிலையிலேயேஇருக்கிறது. இரண்டுகோயில்வாயிலையும்இரண்டுபெரியகோபுரங்கள்அழகுசெய்கின்றன. சுவாமிகோயிலுக்குஐந்துபிரகாரங்கள். கோபுரவாயிலைக்கடந்துஉள்ளேவந்ததும்ஒருபெரியவெளிப்பிரகாரம். அந்தப்பிரகாரத்தின்தென்கிழக்குமூலையிலேதான்சூரியதீர்த்தம். அதற்குமேல்புறம்அப்பர்அவர்கண்டகயிலைக்காட்சியின்ஞாபகமாகஒருகோயில்கட்டிவைத்திருக்கிறார்கள். அதுவேதக்ஷிணகயிலாயம். இதைக்கட்டியவர்ராஜராஜசோழன்மனைவியார்பஞ்சவன்மாதேவி. இதைஅடுத்தேஅப்பர்எழுந்தசமுத்திரதீர்த்தக்குளம்இருக்கிறது. தென்கயிலாயத்தைஉருவாக்கியவர்கள்ஓர்உத்தரகயிலாயத்தையும்கட்டிமுடிக்கமறக்கவில்லை; அக்கோயில்வடக்குப்பிரகாரத்தில்இருக்கிறது. அதனைக்கட்டியவர்ராஜராஜனதுமனைவியார்லோகமாதேவி. அதனால்அதற்குலோகமாதேவீச்சுரம்என்றுபெயர். வெளிப்பிரகாரத்தைச்சுற்றிவிட்டுஉள்ளேபோகுமுன்தெற்குவாயிலில்உள்ளஆட்கொண்டார். சந்நிதிக்குச்செல்லவேண்டும்.
இந்தஆட்கொண்டார்காலசம்ஹாரஅம்சத்தினர். வடநாட்டுஅந்தணச்சிறுவனானசுசரிதன்குறைவானஆயுளைஉடையவன். ஆதலால்அவன்யமபயத்தைப்போக்கிக்கொள்ளத்திருவையாறுவந்துபஞ்சாக்கரஜபம்செய்கிறான். சிவபெருமானேதன்துவாரபாலகர்ஒருவரைஅவனுக்குக்காவல்புரியுமாறுகட்டளையிடுகிறார். யார்காவல்இருந்தால்என்ன? குறித்தகாலத்தில்யமன்சுசரிதன்உயிரைக்கவரவிரைகிறான், சிவபெருமான்எழுந்தருளியமனைமிதித்துமாய்த்துச்சுசரிதனைக்காத்தருள்கிறான், அப்படிஎழுந்தருளியசிவவடிவமேஆட்கொண்டார். அவர்காலடியிலேயமன்கிடக்கிறான். பின்னர்இறைஅருளால்உயிர்பெற்றுஎழுந்தான்அவன்என்பதுபுராணவரலாறு, இந்தஆட்கொண்டார்சந்நிதியில்எப்போதும்குங்கிலியம்புகைந்துகொண்டேஇருக்கும். நாமும்இவரைவணங்கியமபயம்நீங்கியபின், பிரதானக்கோயிலுக்குள்நுழையலாம்.
‘கோயிலில்உள்ளமண்டபங்களையெல்லாம்கடந்துகருவறைசென்றுஐயாறப்பனைமுதலில்தரிசிக்கலாம். இங்குள்ளலிங்கத்திருஉருசுயம்புமூர்த்தி. ‘திருவையாறுஅகலாதசெம்பொற்சோதி‘ என்றேதிருமுறைகளில்குறிக்கப்படுகிறார். புராணங்கள்இவரைக்கைலாசநாதர்பிரணதார்த்திஹரர்என்றுபோற்றுகின்றன. இத்தலத்துக்குச்சம்பந்தர், அப்பர், சுந்தரர்மூவரும்வந்திருக்கிறார்கள்,
ஓதியாரும்அறிவார்இல்லை, ஓதிஉலகெல்லாம்
சோதியாய்நிறைந்தான்கடர்சோதியுள்சோதியான்!
வேதியாகி, விண்ணாகிமண்ணோடுஎரிகாற்றுமாய்
ஆதியாகிநின்றாளும்ஐயாறுடைஐயனே!
என்பதுசம்பந்தர்தேவாரம். சுந்தரர்தம்தோழர்சேரமான்பெருமாள்நாயனாரோடேஇத்தலத்துக்குவந்திருக்கிறார். காவிரியில்அப்போதுபெருவெள்ளம். காவிரியின்தென்கரையில்நின்று,
கங்கைசடைமேல்கரந்தானே!
கலைமான்மறியும்கனல்மழுவும்
தங்கும்திரைக்காவிரிக்கோட்டத்து
ஐயாறுடையஅடிகளோ?
என்றுகூவிஅழைத்திருக்கிறார். இந்தஓலத்துக்குஎதிர்ஓலம்கொடுத்திருக்கிறார், இந்தக்கோயிலில்உள்ளவிநாயகர். இவரே, ஓலமிட்டவிநாயகர்என்றுஇன்றும்அழைக்கப்படுகிறார். காவிரியும்வழிவிட்டிருக்கிறது. அதன்பின்சுந்தரரும்சேரமானும்வந்துவணங்கித்திரும்பியிருக்கிறார்கள். நாமோஇன்றுகாவிரிப்பாலத்தைக்கடந்துஓலமொன்றும்இடாமலேயேவந்துஐயாறுஅடிகளைக்கண்டுதிரும்பும்வாய்ப்புப்பெறுகிறோம்.
இந்தஐயாறப்பன்நல்லசைவன், இவனையேமணிவாசகர், ‘ஐயாறதனில்சைவனாயினன்‘ என்கிறார். சிவபெருமானேசைவனாவதுவேடிக்கைதான். இதன்வரலாறுதெரியவேண்டாமா? இந்தக்கோயிலில்பூசை
அப்பர்கண்டகயிலைக்காட்சி
செய்துவந்தஇருபத்துநான்குஆதிசைவரில்ஒருவர்காசியாத்திரைசெல்கிறார். நீண்டநாட்களாகஅவர்திரும்பாததால்அவருடையஉரிமை, காணிமுதலியவற்றைத்தாயாதிகள்கவர்ந்துகொள்ளுகின்றனர். இந்தநிலையில்இறைவனேஅந்தஆதிசைவர்வடிவில்வந்துதன்உரிமைகளைநிலைநாட்டுகிறான், இந்தச்சமயத்தில்காசிசென்றஆதிசைவரும்திரும்புகிறார். இந்தஇருவரில்எவர்உண்மையானசைவர்என்றுஅறியமுடியவில்லை. வழக்குநடக்கிறது. உண்மையானஅந்தணரேவெற்றிபெறுகிறார். ஆதிசைவராகவந்தஇறைவன்தம்உண்மைவடிவைக்காட்டிமறைகிறார்.
இந்தவரலாற்றைநினைந்தேஐயாறதனில்இறைவன்சைவனாகியபண்பைப்பாடிப்பரவுகிறார்மணிவாசகர், இத்தலத்தில்வழிபட்டு, அகத்தியர்தாம்விரும்பியபடிகுறுகியவடிவைப்பெற்றிருக்கிறார். இந்தஐயாறப்பனைவணங்கிவிட்டுமுதல்திருச்சுற்றுமாளிகையில்நடந்தால்அங்குள்ளதக்ஷிணாமூர்த்தியைக்கண்டுதொழலாம். இவர்கபாலமும்சூலமும்ஏந்தியகையராய்இருப்பார். இவர்திருவடிக்கீழ்ஆமைஒன்றும்இருக்கும். ஒருமையுள்ஆமைபோல்ஐந்துபுலன்களையும்அடக்கியேகுருமூர்த்தமாகஎழுந்தருளவேணும்என்பதைச்சொல்லாமல்சொல்லிவிளக்குகிறார்போலும். இந்தச்சுற்றில்இவரைத்தரிசித்துவிட்டுச்சென்றவழியேதிரும்பிவிடவேண்டும். இவரைக்கடந்துசெல்லலாகாதுஎன்பதுஅங்குள்ளஐதீகம். அடுத்தசுற்றிலேதான்மேலப்பிரகாரத்திலேதனுஷ்சுப்பிரமணியர்கருவறைக்குநேர்மேற்கே, கிழக்குநோக்கிநிற்பார். இதற்குஅடுத்தசுற்றிலேதான்சோமாஸ்கந்தருக்குத்தனிச்சந்நிதி.
இனி, இந்தஐயாறப்பர்கோயிலைவிட்டுவெளிவந்துவடக்குநோக்கிநடந்து, அறம்வளர்த்தாள்கோயிலுக்குச்செல்லலாம். இவளையேதர்மசம்வர்த்தனிஎன்றுநீட்டிமுழக்கிஅழைக்கிறார்கள். வடமொழிப்பெயரில்மோகம்கொண்டவர்கள். இந்தஅம்பிகைக்குஒருபரீக்ஷைவைத்திருக்கிறார்இறைவன், இறைவன்இரண்டுபடிஅரிசியைஅளந்துகொடுத்துஉலகில்உள்ளமக்கள்பசியைஎல்லாம்போக்கச்சொல்லியிருக்கிறார். அம்மையுைம்அதைப்பெற்றுமுப்பத்திரண்டுதருமங்களைக்குறைவறமுடித்திருக்கிறாள். இதனாலேயேஅறம்வளர்த்தாள்என்றபெயரும்பெற்றிருக்கிறாள். அம்பிகைஅழகொழுகும்வடிவத்தில்நிற்கிறாள். அவளையுமேகண்டுதரிசித்துவிட்டுத்திரும்பலாம்.
இத்தலத்தில்சிறப்பானதிருவிழா–சப்தஸ்தானமே. சித்திராபௌர்ணமிஅன்றுஇந்தத்திருவிழாநடக்கும். ஐயாறப்பர், அறம்வளர்த்தாளுடனும், நந்தியம்பெருமான்சுயம்பிரகாசஅம்மையுடனும்எழுந்தருளிய, பழனம், சோற்றுத்துறை, வேதிக்கூடி, கண்டியூர், பூந்துருத்தி, நெய்த்தானம்என்னும்ஆறுதலங்களிலும்உபசாரங்கள்பெற்று, மறுநாள்காலைதிருவையாற்றுக்குத்திரும்புவர். இந்தஏழூர்விழாவிலேமக்கள்கலந்துகொண்டுமூர்த்திகளின்பின்னாலேயேநடந்துசெல்வர். வழியெல்லாம்தண்ணீர்ப்பந்தலாகஇருக்கும். உண்பதற்குஉணவும், குடிப்பதற்குஇளநீரும்எல்லாஇடங்களிலும்ஏராளமாகக்கிடைக்கும். இந்தசப்தஸ்தானக்ஷேத்திரங்கள்எல்லாமேபாடல்பெற்றவை. இவற்றில்கண்டியூர்அட்டவீரட்டத்தலங்களில்ஒன்று. பூந்துருத்தியில், அப்பர்மடம்கட்டிச்சிலகாலம்இருந்துவாழ்ந்திருக்கிறார்.
பூந்துருத்தி, பூந்துருத்திஎன்பீராகில்
பொல்லாதபுலால்துருத்திப்போக்கலாமே.
என்றுநமக்குச்சொல்லிவிட்டும்சென்றிருக்கிறார். இந்தஏழூர்விழாவிலேகலந்துகொள்வதேஒருபுதியஅனுபவம். ஐயாறப்பர்கோயில்ஆதியில்சூரியவம்சத்துஅரசன்பிரியவரதனால்கட்டப்பட்டது. பின்னர்கரிகால்பெருவளத்தான், வேங்கிநாட்டுவிமலாதித்தன், விக்கிரமசோழன், இவர்களுக்குப்பின்வந்தநாயக்கமன்னர், மராத்தியமன்னன்சரபோஜிஎல்லாம்திருப்பணிசெய்திருக்கிறார்கள். இன்றுஇந்தக்கோயில்தருமபுரஆதீனத்தார்ஆளுகையின்கீழ்இருக்கிறது. திருவாரூரிலேபிறந்தகர்நாடகசங்கீதபாஸ்கரர்தியாகையர், அவரதுகடைசிக்காலத்தில்இத்தலத்தில்வந்துதங்கிஇங்கேயேசமாதிகொண்டிருக்கிறார். அவரதுசந்நிதியிலேதைமாதம்பகுளபஞ்சமியிலேதியாகராஜஉத்சவம்நடப்பதுஉலகம்அறிந்ததாயிற்றே. ஆதலால்அவரதுகோயிலுக்கும்சென்றுவணக்கம்செலுத்திவிட்டேதிரும்புங்கள்என்றுநான்சொல்லவேண்டுமா, என்ன?