தென்னரங்கத்து இன்னமுதன்
இலங்கைஓர்அழகானதீவு. இந்தியத்தாயின்கழுத்தில்அணியும்நித்திலப்பதக்கம்போல்அமைந்ததீவு. ஆகவேஅதனைநித்திலத்தீவுஎன்றனர்கவிஞர்கள். நாற்புறமும்கடல்சூழ்ந்துநடுவேமலைச்சிகரம்உயர்ந்துஎங்கும்பசுமைகொழித்துக்கொண்டிருக்கும்நாடுஅது. காடெல்லாம்பசுமை, மலைஎல்லாம்பசுமை, காணும்வயலெல்லாம்பசுமைஎன்னும்படிதென்னை, கமுகு, வாழைநிறைந்திருப்பதுடன்மலைச்சிகரங்களையெல்லாம்தேயிலைச்செடிகள்வேறேமூடிக்கொண்டிருக்கும், அந்தநாட்டில்கருமையேஇல்லை. வானுலாவும்கார்மேகங்களையும், தெருக்களிலேபறந்துசெல்லும்மோட்டார்கார்களையும்தவிரவேறுகருமையைஅங்குகாண்பதேஅரிது. இப்படிவளம்கொழிக்கும்இலங்கையில், சைவம்என்றும்நிலைபெற்றுநின்றிருக்கிறது. பௌத்தம்வந்துசேர்ந்திருக்கிறது.
ஆனால்இந்தவைணவம்மட்டும்அங்குசென்றுசேரவில்லை. அந்தமகாவிஷ்ணுவேஅங்குசெல்லமறுத்திருக்கிறார். ‘பாஸ்போர்ட்‘, ‘விசா‘ எல்லாம்கிடைக்கவில்லையோஎன்னவோ? விஷ்ணுஅங்குசெல்லமறுத்தகாரணம்தெரியநாம்பழையஇதிகாசகாலத்துக்கேசெல்லவேண்டும். இலங்கையில்மலைமேல்கோட்டைகட்டிக்கொண்டுவாழ்ந்திருக்கிறான்இராவணன். அவன்அயோத்திராமனின்மனைவிசீதையைஎடுத்துச்சென்றுஅசோகவனத்தில்சிறைவைத்திருக்கிறான். சிறையிலிருந்துசெல்வியைமீட்கராமன்படைதிரட்டிக்கொண்டுஇலங்கைக்கேசென்றிருக்கிறான்.
ராவணன்தம்பிவிபீஷணன்ராமனுடன்சேர்ந்துஅவன்வெற்றிபெறஉதவியிருக்கிறான். ராவணன்வதம்முடித்துத்திரும்பும்போது, இலங்கையையேவிபீஷணனுக்குத்தந்துஅவனுக்குஅங்கேமுடிசூட்டியிருக்கிறான். பின்தம்துணைவியாம்சீதையுடன்அயோத்திதிரும்பித்தானும்பட்டாபிஷேகம்செய்துகொண்டிருக்கிறான்ராமன், இந்தப்பட்டாபிஷேகவிழாவுக்குவந்தவிபீஷணனுக்குப்பரிசாகத்தான்ஆராதித்துவந்தஅரங்கநாதனையேகொடுத்திருக்கிறான். அரங்கனோடுகூடியவிமானத்தையேஎடுத்துச்சென்றவிபீஷணன்காவிரிக்கரைசேர்ந்ததும்அங்குநீராடஎண்ணிவிமானத்தைஅங்கேஇறக்கியிருக்கிறான். அவ்வளவுதான்; நீராடிவிட்டுவிபீஷணன்விமானத்தைஎடுத்தால்அவனால்எடுக்கமுடியவில்லை. அரங்கனும்இந்தஇடத்தைவிட்டுக்கிளம்பமறுத்துவிடுகிறான். விபீஷணன்ஏமாற்றத்தோடு, வெறுங்கையனாகவேஇலங்கைக்குத்திரும்பியிருக்கிறான். என்றாலும்விபீஷணன்வேண்டிக்கொண்டபடிஇலங்கையைநோக்கியவண்ணமாகவேகாவிரிக்கரையில்சயனித்துவிடுகிறான்அரங்கன்.
குடதிசைமுடியைவைத்து,
குணதிசைபாதம்நீட்டி,
வடதிசைபின்புகாட்டி,
தென்திசைஇலங்கைநோக்கி
அரவணையில்துயில்பவனாகத்தானேஇன்னும்காட்சிகொடுக்கிறான்அரங்கநாதன். அந்தஅரங்கநாதனைக்காணவேஸ்ரீரங்கம்செல்கிறோம்நாம்இன்று.
அரங்கன்கோயிலுக்குச்செல்லவழிஒன்றும்சொல்லவேண்டாம். ‘பணியரங்கப்பெரும்பாயல்பரஞ்சுடரையாம்காண, அணியரங்கம்தந்தானைஅறியாதார்‘ என்றுஆயிரம்வருஷஅறியாதார்க்குமுன்பேபாடிவைத்திருக்கிறான்கவிச்சக்கரவர்த்திகம்பன். அவனைத்தென்தமிழ்நாட்டினர்மாத்திரம்அல்லமற்றவடநாட்டினருமேநன்குஅறிவார்கள். திருச்சியைஅடுத்தஸ்ரீரங்கம்ஸ்டேஷனில்இறங்கிமேற்குநோக்கிநான்குபர்லாங்குநடந்தால்கோயில்வாயில்வந்துசேரலாம். இதுதவறு. கோயிலின்பிரதானவாயிலுக்குவருமுன்கோயிலைச்சுற்றிக்கட்டியுள்ளமதில்களையெல்லாம்கடக்கவேணுமே. மதில்முக்கால்மைல்சதுரவிஸ்தீரணத்தைநிறைத்துக்கொண்டிருக்கிறது. ஏழாவதுமதில்சுவரின்நீளம் 3072 அடி; அகலம் 2521 அடிஎன்றால்கோயில்எவ்வளவுபெரியதுஎன்றுதெரியுமல்லவா? சப்தலோகங்களுமேஇக்கோயிலின்சப்தபிரகாரங்களாகஅமைந்திருக்கின்றனஎன்பர்.
இங்குஇந்தமதில்கள்எழுந்தவரலாறேசுவையானது. அன்றுவிபீஷணன்கொண்டுவந்தரங்கவிமானமும், ரங்கநாதனுமேகாவிரிமணலில்புதைந்துவிடுகிறார்கள். காடுமண்டிவிடுகிறது. தர்மவர்மாஎன்னும்சோழமன்னன்வேட்டைக்குவந்தபோதுஒருகிளிஅவன்காதில்அங்குரங்கவிமானம்புதையுண்டுகிடந்தரகசியத்தைச்சொல்கிறது. காடுவெட்டிநிலந்திருத்திச்சோழமன்னன்ரங்கவிமானத்தைவெளிக்கொணர்கிறான். கோயில்கோபுரம், விமானம், மண்டபம்எல்லாம்கட்டிஅரங்கநாதனைஅங்குகிடத்திவைக்கிறான். கிளிசொன்னதைமறக்காமல்கிளிமண்டபம்ஒன்றையும்கட்டுகிறான். தன்பெயரால்தர்மவர்மாபிரதக்ஷிணம்ஒன்றையும்எழுப்புகிறான். இவன்றன்பின்வந்தமன்னரும்மக்களும்ஒவ்வொருபிரகாரமாகக்கட்டிமுடிக்கிறார்கள். இப்படிஎழுந்தபிரதக்ஷிணங்களும்மதில்களும்ஆறு. அவைதாம்ராஜமகேந்திரன்பிரதக்ஷிணம், குலசேகரன்பிரதக்ஷிணம், ஆலிநாடன்பிரதக்ஷிணம், அகளங்கன்பிரதக்ஷிணம், திருவிக்ரமன்பிரதக்ஷிணம், மாட்டமாளிகைப்பிரதக்ஷிணம்என்பவை, ஏழுமதில்களையும்ஏழுஆடைகளாகவனைந்திருக்கிறான்அரங்கநாதன்என்பர். இதனையேஅடையவிளைஞ்சான்என்றும்கூறுவர்பாமர்மக்கள். இந்தமதில்கள்எல்லாம்யார்யாரால்எப்போதுஎப்போதுகட்டப்பட்டனஎன்றுவிரித்தல்இயலாது. ஒன்றுமட்டும்சொல்லாமல்இருக்கவும்முடியாது. இந்தக்கோயிலுக்குப்பெரியமதிலைக்கட்டியவன்ஆலிநாடனானதிருமங்கைமன்னனே. அவனதுகாதலிகுமுதவல்லியின்விருப்பப்படிபரமபாகவதர்களுக்குத்ததியாராதனகைங்கர்யம்செய்வதைமேற்கொள்கிறான்.
தன்கையில்பொருள்இல்லாதபோதெல்லாம்வழிப்பறிசெய்கிறான். இவனுக்குஅருள்பாலிக்கவேஅரங்கனும்அவன்துணைவிரங்நாயகியும், திருமணத்தம்பதிகளாகவந்துஇந்தமங்கைமன்னனாம்கலியன்கையில்சிக்கிக்கொள்கிறார்கள். கலியனும்அந்தஆடைஅணிகளையெல்லாம்கவர்ந்துகொள்கிறான். கவர்ந்தபொருளையெல்லாம்மூட்டையாகக்கட்டியபோதுஅதைஎடுத்துச்செல்லஇயலாதவனாகநின்றிருக்கிறான். அப்படி. எடுக்கஇயலாதபடி. செய்தமந்திரம்என்னஎன்றுகேட்டபோது, மணவாளக்கோலத்தில்வந்தஅரங்கன்நாராயணனதுஅஷ்டாக்ஷரமகாமந்திரத்தையேஉபதேசித்திருக்கிறான். இவ்வாறுஞானோதயம்பெற்றகலியனேபின்னர்திருப்பதிகள்பலவற்றுக்கும்சென்றுபாடிப்பாடிநாராயணனைப்பரவியிருக்கிறான். தேடிச்சேர்த்தபொருளைஎல்லாம், அரங்கனுக்குமதில்கட்டுவதிலேயேசெலவழித்திருக்கிறான். இவன்கட்டியமதிலேஆலிநாடன்திருமதில்என்றபெயரோடுநின்றுநிலவுகிறதுஇன்றும்.
ஏழுபிரகாரங்களோடுகூடியஇந்தக்கோயிலுக்குஇருபத்தொருகோபுரங்கள். அவைகளில்முக்கியமானவைஇரண்டு; ஒன்றுகீழ்ப்பக்கம்உள்ளவெள்ளைக்கோபுரம்.
விமானம்தென்னரங்கம்
மற்றொன்றுதென்பக்கம்உள்ளநான்முகன்கோபுரம். கோயிலுள்நுழையும்பிரதானவாயில்இந்தநான்முகன்கோபுரவாயிலேதென்திசைநோக்கிஅரவணையில்துயிலும்அரங்கநாதனைத்தரிசிக்கத்தென்வாயில்வழியாகச்செல்வதுதானேமுறை. இந்தவாயில்வரைவண்டியும்காரும்செல்லும். இதற்கும்தெற்கேமண்டபங்கள், முற்றுப்பெறாதகோபுரம்எல்லாம்உண்டு. இனிநாம்நான்முகன்கோயில்வாயிலைக்கடந்துஉள்ளேசெல்லலாம். அப்போதுஉங்கள்முன்நிற்பதுரங்கமண்டபம். அதையும்முந்திக்கொண்டுஒருநாலுகால்மண்டபம். அதில்முறுக்குமீசையும்திருகிக்காட்டியகொண்டையும்உடையஒருபெரியவர்கூப்பியகையராய்நிற்பார்சிலைஉருவில். இவரையேகம்பர்என்பார்கள், அந்தராமகாதைஎழுதியகபைக்கம்பருக்கும்இந்தச்சிலைக்கம்பருக்கும்யாதொருஒற்றுமையும்காணஇயலாது. இவர்அந்தரங்கமண்டபம்கட்டியநாயக்கமன்னர்களில்ஒருவராகஇருக்கலாம்.
ரங்கமண்டபம் – கார்த்திகைமண்டபம்எல்லாம்கடந்துதான்பிரதானக்கோயிலுள்நுழையவேணும். அங்குள்ளபெரியதொருமண்டபத்தில்கருடாழ்வார்பெரியவடிவில்
வெள்ளைக்கோபாம்
அரங்கநாதனைச்சேவித்தவண்ணம்நின்றுகொண்டிருப்பார். அவரையும்வணங்கிவிட்டுமேல்நடந்தால்அடுத்தகட்டு. அங்கேபொன்போர்த்தகொடிமரம், பலிபீடம்எல்லாம். அவைஇரவில்மின்விளக்கொளியில்கண்டால்சோதிமயமாகஇருக்கும். இவற்றையெல்லாம்கடந்துதான்கருவறைப்பக்கம்வரவேணும். இங்குள்ளகருப்பக்கிருஹம்பிரணவாகாரத்தில்அமைந்திருக்கிறது. அந்தக்கருவறையின்பேரில்உள்ளவிமானம்தான்ரங்கவிமானம். அந்தவிமானத்துக்கேபொன்தகடுவேய்ந்துஅதில்பரவாசுதேவனையும்உருவாக்கிநிறுத்தியிருக்கிறார்கள். இந்தவிமானமேஆதியில்விபீஷணன்எடுத்துவந்தவிமானம்என்பர். இந்தவிமானத்தோடுகூடியகருவறையிலேயேஅரங்கநாதன்அறிதுயில்கொள்ளுகிறான். ‘கருதுசெம்பொனின்அம்பலத்தில்கடவுள்நின்றுநடிக்கிறான்‘ என்றுபாடியகவிஞன், இந்தக் ‘காவிரித்திருநதியிலேகருணைமாமுகில்துயில்வதையும்‘ பாடமறக்கவில்லை. சுமார்பதினைந்துஅடிநீளமுள்ளகருவறையைமுழுவதும்ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறான்ஆதிசேடன். அவனதுபாயலில்அழகாகக்கண்வளருகிறான்அரங்கநாதன். இரண்டுதிருக்கரங்களேஅவனுக்கு. ஒருகைதலையைத்தாங்கமற்றொருகைமுழங்கால்வரைநீண்டுகிடக்கிறது. ஆதிசேடனும், அரங்கநாதனும்சுதைஉருவில்உருவானவர்களே.
ஆதிசேடன்பொன்முலாம்பூசியதகடுகளால்பொதியப்பட்டிருக்கிறான். அரங்கனோநல்லகன்னங்கரியவடிவினனாகத்தைலக்காப்புக்குள்ளேபுதையுண்டுகிடக்கிறான், அகன்றமார்பிலேமுத்தாரம், கௌஸ்துபம், வனமாலைஎல்லாம்புரள்கின்றன. தலையிலேநீண்டுயர்ந்தகிரீடம்அணிசெய்கிறது. இத்தனைகோலத்துடன்இருக்கும்அவன்தனிமையைநாடியிருக்கிறான். என்றும்இணைபிரியாததுணைவியரானஸ்ரீதேவிபூதேவிகளுக்குக்கூடஅங்குஇடம்இல்லை. நாபிக்கமலத்திலிருந்துபிரம்மாவும்எழவில்லை. இதற்கெல்லாம்ஈடுசெய்யவேஅந்தக்கிடந்தகோலத்தின்முன்புநின்றகோலத்தில்செப்புச்சிலைவிடிவில்அழகியமணவாளன்இரண்டுஅணங்குகளோடுதங்கமஞ்சத்தில்நின்றுகொண்டிருக்கிறான். இந்தஉத்சவரேவெளியில்எல்லாம்எழுந்தருளிப்பக்தர்களுக்குஎல்லாம்காட்சிதருகிறார். இருவரையும்கண்குளிரத்தரிசித்தபின்வெளிவந்துபிரகாரங்களையெல்லாம்சுற்றிக்கொண்டுமேலேநடக்கவேணும்.
இந்தஅரங்கநாதன், தன்னைஆராதித்துவந்தராமனைப்போல்ஏகபத்னிவிரதன்அல்ல. எப்போதும்உள்ளஸ்ரீதேவிபூதேவியோடுஇன்னும்ஐந்துபேர்கள்இவனதுமனைவியர். அதனால்தானோஎன்னவோதனிமையைவிரும்பிக்கருவறையில்ஒருவரையுமேநுழையவிடாமல்கதவடைத்துக்கொண்டிருக்கிறான். எத்தனைமனைவியர்இருந்தாலும்இவனதுபட்டமகிஷிஸ்ரீரங்கநாயகிதான். இவள்தனிக்கோயிலில்குடியிருக்கிறாள். ரங்கநாதரைத்தரிசித்தபின்கொஞ்சம்சுற்றிவளைத்துநடந்தேஇவள்கோயிலுக்குச்செல்லவேணும், செல்லும்வழியிலேஒருமண்டபம். அங்குதான்கம்பனதுராமாயணஅரங்கேற்றம்நடக்கும்போதுசித்திரத்தில்தீட்டியநரசிம்மமேதலையசைத்துச்சிரக்கம்பம்செய்துபாராட்டியதுஎன்பதுவரலாறு. அந்தமண்படத்தைஎல்லாம்கடத்தேஸ்ரீரங்கநாயகிசந்நிதிக்குவரவேணும். அவள்படிதாண்டாப்பத்தினி. அவள்உத்சவகாலங்களில்கூடத்தன்கோயிலைவிட்டுவெளியேவருவதில்லை.
ஸ்ரீரங்கநாதர்தான்அவளைத்தேடிக்கொண்டுஅவள்கோயிலுக்குவருகிறார். ரங்கநாயகிக்குஅடுத்தபடியாகரங்கநாதருக்குஉகந்தமனைவிஉறையூர்கமலவல்லிதான், உறையூரிலிருந்துஅரசாண்டநந்தசோழன்மகள்அவள். தாமரைஓடையிலேகமலமலர்களோடுமலராகப்பிறந்தவள்இக்கமலவல்லி. இவள்அரங்நாதனிடம்ஆராதகாதல்கொள்கிறாள். அதிரூபசுந்தரியானஇவளைமணக்கஇந்தரங்கநாதருக்குக்கசக்கவாசெய்யும்? அவளையும்மணந்துகொள்கிறான். அதன்பின்அரங்கத்திலும்உறையூரிலுமாகஇருந்துவாழ்கிறான். இக்கமல்வல்லியைப்போலவேசேரமன்னன்குலசேகரப்பெருமானதுமகள்சேரகுலவல்லியும்ரங்நாதனையேகாதலித்துமணந்துகொள்கிறாள்.
இவர்களைத்தலிர, ஸ்ரீவில்லிப்புத்தூரில்பெரியாழ்வார்திருமகளாகஅவதரித்தஆண்டாளும்இந்தரங்கநாதனிடத்திலேகாதல்கொள்கிறாள். அவளுக்கும்இந்தஅரங்கநாதன்ரங்கமன்னாராகவேசேவைசாதித்துஅவளையும்மணந்துகொள்கிறான். இவர்கள்எல்லாம்போகட்டும்; டில்லிசுல்தானின்மகள்ஒருத்தியின்உள்ளத்திலும்அல்லவாஇவன்காதல்விதைவிதைக்கிறான்! முகமதியர்கள்இந்தநாட்டைப்படையெடுத்துஇங்குள்ளகோயில்கோபுரங்களையெல்லாம்இடித்துத்தரைமட்டமாக்கியதெல்லாம்சரித்திரம்கூறும்உண்மை. இப்படிப்படையெடுத்தபாதுஷாஒருவன், ஸ்ரீரங்கம்வரைவந்துஇங்குள்ளபலவிக்கிரகங்களைஎடுத்துச்சென்றிருக்கிறான். விக்கிரகங்களோடுவிக்கிரமாகஅழகியமணவாளனுமேசென்றிருக்கிறான். ஆனால்பாதுஷாவின்மகள்இந்தஅழகிய. மணவாளனின்அழகில்ஈடுபட்டுஅவனைமட்டும்தன்அந்தப்புரத்துக்குஎடுத்துச்சென்றிருக்கிறாள். அவன்அழகுக்குஅடிமையாகியிருக்கிறாள்.
பின்னர்ஸ்ரீரங்கத்துஸ்தலத்தார்பாதுவாவைஅணுகிஅவன்எடுத்துச்சென்றஅழகியமணவாளைைனத்திரும்பத்தரக்கேட்டிருக்கிறார்கள். பாதுஷாவும்தன்மகள்தூங்கும்சமயம்அறிந்துஅழகியமணவாளனைஅவர்களிடம்கொடுத்துஅனுப்பியிருக்கிறான். விழித்தெழுந்தபாதுஷாவின்மகள்தன்அழகியமணவாளனைக்காணாது, அவனைத்தேடிஸ்ரீரங்கத்துக்குஓடிவந்திருக்கிறாள். இத்தனைபிரேமைகொண்டமங்கையைஇந்தஅரங்கநாதன்பின்னர்மணந்துகொண்டதில்வியப்பில்லை. இந்தப்பாதுஷாமகளேதுலுக்கநாச்சியார்என்றபெயரிலே, ஸ்ரீரங்கம்கோயிலுக்குள்ளேயேதனிக்கோயிலில்இருக்கிறாள். சித்திரஉருவிலேஇக்கோயிலில்உறையும்பெருமாளுக்குநிவேதனம்ரொட்டியும்வெண்ணெயும், அக்காரடிசிலும்அரவணையும்அந்தப்பாதுஷாமகளுக்குஒத்துக்கொள்ளாதே. பின்னர்அவள்கொடுப்பதைத்தானேஇவன்ஏற்றுக்கொள்ளவேணும். இதற்கென்றேமாமனாராகியபாதுஷாகொறநாட்டில்இரண்டுகிராமங்களையேசீதனமாகவேறுகொடுத்திருக்கிறராம்.
இப்படியெல்லாம்மனைவியர்பலரைச்சேர்த்துக்கொண்டிருக்கிறாரே, இதுசரிதானாஎன்றுஒருகேள்வி, கண்ணனாகக்கோகுலத்தில்அவதரித்தபோதும்இவர்எண்ணிறந்தகோபியரதுகாதலனாகவாழ்ந்திருக்கிறாரே. பெருமாளைப்பதியாகஉடையஉயிர்களாகியபக்தர்கள்எல்லோரும்எப்போதுமேதவங்கிடக்கிறார்கள். அருளாளனானபெருமானும்அவர்களையெல்லாம்தன்காதலிகளாகஏற்றுக்கொள்ளத்தயங்குவதில்லை, இந்தத்தத்துவஉண்மையைவிளக்குவதற்கேஇத்தனைதிருவிளையாடல்கள்என்றுமட்டும்நாம்தெரிந்துகொண்டால்உண்மைஎன்னஎன்றுவிளங்கும்அல்லவா?
அரங்கனையும்அவனதுதுணைவியரையும்தரிசித்துவிட்டுத்திரும்பிவெளியேவரும்போதுகலைஅன்பர்கள்கண்டுகளிக்கவேண்டியசிறியகோயில்ஒன்றுஇங்குஉண்டு. அதுதான்ரங்கமண்டபத்தைஅடுத்தவேணுகோபாலன்சந்நிதி. அங்கேஉள்ளவேணுகோபாலனைவிடஅவனைச்சுற்றிநிற்கும்கோபியர்கள்அழகுஅழகானசிற்பவடிவத்தினர். அரங்கத்துஅரவணையான்கோயில்சரித்திரத்தைப்பற்றிஎளிதாகச்சொல்லிவிடமுடியும்என்றுதோன்றவில்லை. ராமானுஜர், கோயில்நிர்வாகத்தைச்சீர்செய்திருக்கிறார். மணவாளமாமுனிகள்கைங்கர்யங்கள்பலசெய்திருக்கிறார். விஜயநகரசாம்ராஜ்யநாயக்கமன்னர்களேகோயிலைவிரிவாகக்கட்டிப்பலநிபந்தங்கள்ஏற்படுத்திச்சிறந்தபணியைச்செய்திருக்கிறார்கள்.
இந்தஅரங்கத்துஅரவணையானைஆழ்வார்கள்எல்லோரும்பாடியிருக்கிறார்கள். பதின்மர்பாடியபாண்பெருமாள்என்றபுகழ்இவர்ஒருவருக்குத்தானே.
பச்சைமாமலைபோல்மேனி
பவளவாய்கமலச்செங்கண்
அச்சுதாஅமரர்ஏறே!
ஆயர்தம்கொழுந்தேஎன்னும்
இச்சுவைதவிரயான்போய்
இந்திரலோகம்ஆளும்
அச்சுவைபெறினும்வேண்டேன்
அரங்கமாநகருளானே
என்றதொண்டர்அடிப்பொடிஆழ்வாரதுபாடலைஎத்தனைதரம்வேண்டுமானாலும்பாடிப்பாடிப்பரவலாமே. ‘திருவரங்கப்பெருநகருள், தெண்நீர்ப்பொன்னிதிரைக்கையால்அடிவருடப்பள்ளிகொள்ளும்கருமணியைக்கோமளத்தைக்கண்டுகளிக்கும்‘ குவசேகரதுபக்திஎவரதுபக்திக்குக்குறைந்தது? அரங்கத்துஇன்னமுதரதுகுழல்அழகிலும், வாய்அழசிலும்தன்னைஇழந்துநின்றவள்ஆண்டாள், பெரியாழ்வாரோ,
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நான்உன்னை
நினைக்கமாட்டேன்
அப்போதைக்குஇப்போதேசொல்லி
வைத்தேன், அரங்கத்துஅரவணைப்
பள்ளியானே!
என்றுமுன்கூட்டியேஎச்சரிக்கைசெய்துவைத்துமுக்திபெறவழிசொல்லுகிறார். அரங்கனும்இவர்களுக்கெல்லாம்அருள்செய்ததுபோல், நமக்கெல்லாம்அருள்செய்யத்தவறமாட்டார்என்றுஉறுதியோடுஒருபக்தர்கூறுகிறார் !
நாவுண்டு, நீஉண்டு, நாமம்தரித்தோதப்பாவுண்டுநெஞ்சேபயமுண்டோ – பூவுண்டு
வண்டுறங்குசோலைமதில்அரங்கத்தேஉலகை
உண்டுஉறங்குவான்ஒருவன்உண்டு.