தமிழ்நாடு – 77

சிராப்பள்ளிக் குன்றுடையான்

பாண்டியமன்னன்ஒருவன்தன்பட்டமகிஷியுடன்அரண்மனையின்உப்பரிகையிலேஇருக்கிறான், மாலைநேரம்அது. அப்போதுமந்தமாருதம்மெல்லெனத்தவழ்ந்துவருகின்றது. அந்தத்தென்றலூடேஇனியமணம்ஒன்றுமேமிதக்கிறது. அந்தநறுமணம்எங்கிருந்துவந்தது? இனிமையும்குளிர்ச்சியும்தவிர, தென்றலுக்குஎன்றுஒருநறுமணம்கிடையாதேஎன்றுஎண்ணுகிறான். ஒருவேளைதன்மனைவிஅவளதுகூந்தலில்நறுமலர்ஏதாவதுசூடியிருப்பாளோஎன்றுஅவள்தன்கூந்தலைப்பார்க்கிறான். அவள்அன்றுகூந்தலில்மலர்ஒன்றும்அணிந்திருக்கவில்லை.

அப்படியானால்மணம்எங்கிருந்துவந்ததுஎன்றுமீண்டும்பிறக்கிறதுகேள்வி. இரவுமுழுதும்இதேசிந்தனையில்இருந்தமன்னன்விடிந்ததும், தன்ஆஸ்தானமண்டபத்தில்பொற்கிழிஒன்றைக்கட்டித்தொங்கவிட்டு, தன்உள்ளத்தில்எழுந்தஎண்ணத்தையும்அதற்குரியவிடையையும்கூறுவார்க்குஅந்தபொற்கிழிஉரியதுஎன்றுசங்கப்புலவர்களிடம்தெரிவிக்கிறான். பலநாட்கள்கிழிஅறுபடாமலேயேதொங்கிக்கொண்டிருக்கிறது. ஒருநாள்தருமிஎன்றுஒருகோவில்அர்ச்சகன்வருகிறான். ஓர்ஓலையைநீட்டுகிறான். அந்தஓலையில்,

கொங்குதேர்வாழ்க்கைஅம்சிறைத்தும்பி! காமம்செப்பாதுகண்டதுமொழிமோ?

பயிலியதுகெழீஇயநட்பின்மயிலியல்

செறிஎயிற்றுஅரியைகூந்தலின்

நறியவும்உளவோநீஅறியும்பூவே?

என்றபாட்டுஎழுதியிருக்கிறது. தும்பியைநோக்கி, பெண்ணின்கூந்தல்மணத்தைவிடச்சிறப்பானமணம்உடையபூவேறுஉண்டோஎன்றுகேள்விகேட்பதுபோல், மன்னன்சந்தேகத்துக்கேஅல்லவாவிடைஇருக்கிறதுபாட்டில். ஆதலால்பரிசைதருமிக்குவழங்கவிரைகிறான்மன்னன். ஆனால்இடைபுகுந்துதடுக்கிறான்சங்கப்புலவன்நக்கீரன். அவனதுஆட்சேபணை, ‘பெண்கள்கூந்தலுக்குஇயற்கைமணம்கிடையாது. அதனால்அப்பாடலில்பொருள்குற்றம்உண்டுஎன்பதுதான். தருமிக்கோபதில்சொல்லத்தெரியவில்லை, பாட்டுஅவன்எழுதியதுஅல்லவே? அதைஎழுதியதுஆலவாய்மேவும்அவிர்சடைக்கடவுளஅல்லவா; அதனால்அவரிடமேசென்றுமுறையிடுகிறான். அவரேகிளம்பிவந்துசங்கப்புலவராம்நக்கீரனைச்சந்திக்கிறார்.

அவனோஇறைவனேவந்தாலும்சாற்றியசெய்யுள்குற்றமேஎன்றுசொல்கிறான். சிவபெருமானோ, ‘நீவணங்கிவரும்உமையின்கூந்தல்கூடவாஇயற்கைமணம்வாய்ந்ததில்லை?’ என்கிறார். ‘அதற்குமேகிடையாதுநறுமணம்இயற்கையில்என்றுசாதித்துவிடுகிறான். அப்படித்தருக்கிக்கூறியதால்நக்கீரன்இறைவன்கோபத்துக்குஉள்ளானதும், தொழுநோயால்துன்பமுற்றதும்சாபவிமேசானம்பெற்றதும்ஒருதனிக்கதை. இந்தக்கதையைப்படித்தபின்இயற்கையிலேயேநறுமணம்உடையகூந்தலுடன்கூடியஅம்பிகையைக்கண்டுதரிசிக்கவிரும்பினேன்நான். பலதலங்களில்கூந்தல்அழகிகளானதேவியர்பலரைக்கண்டுவணங்கியிருக்கிறேன். அவர்கள்எல்லாம்வண்டார்பூங்குழலிஎன்றும், ஏலவார்குழலிஎன்றும், கொந்தார்பூங்குழலிஎன்றும், குரவங்கமழ்குழலிஎன்றேபெயர்பெற்றவர்கள். பெற்றபெயருக்குஏற்பமலர்ச்சேர்க்கையால்ஏற்பட்டமணம்நிறைகூந்தல்உடையவர்களேஅவர்கள். இயற்கையிலேயேநறுமணம்உடையகூந்தல்அழகிஒருத்தியும்இருக்கவேசெய்கிறாள். அவளேசுகந்தகுந்தலாம்பிகை, மட்டுவார்குழலி. அவள்கோயில்கொண்டிருக்கும்இடமேசிராப்பள்ளிகுன்று. அந்தச்சிராப்பள்ளிகுன்றுக்கேசெல்கிறோம்நாம்இன்று.

தேவாரத்தில்சிராப்பள்ளிஎன்றுவழங்கும்தலமேபின்னர்திருச்சினாப்பள்ளிஎன்றுமக்கள்வாயில்பயின்றிருக்கிறது. இன்றுதமிழ்நாட்டின்நடுநாயகமாய்த்திருச்சிராப்பள்ளிஎன்னும்திருச்சிக்குச்செல்லநான்வழிசொல்லித்தான்உங்களுக்குத்தெரியவேண்டுமா? சிராப்பள்ளிமலையும்மலைமேல்உள்ளதாயுமானார், அம்மலைஉச்சியில்உள்ளபிள்ளையார்கோயில்களும்ரயிலில்வந்தாலும்சரி, ரோட்டில்வந்தாலும்சரி, பலமைல்தூரத்திலேயேதெரியும்.

ஜங்ஷனில்இறங்கிஇரண்டுமைல்வடக்கேசென்றால்மலைக்கோட்டைகோயில்வாயில்வந்துசேரலாம். திருச்சிடவுன்ஸ்டேஷனில்இறங்கினால்கூப்பிடுதூரத்திலேயேதெரியும். ஜங்ஷனில்இறங்கிஇரண்டுமைல்வடக்கேசென்றால்மலைக்கோட்டைகோயில்வாயில்வந்துசேரலாம். திருச்சிடவுன்ஸ்டேஷனில்இறங்கினால்கூப்பிடுதூரமே. இந்தமலைக்குத்திரிசிராமலைஎன்றுஏன்பெயர்வந்தது? அதுவா, இராவணனதுஒன்றுவிட்டசகோதரர்கள்கரன், தூஷணன், திரிசிராஎன்பவர்கள். இவர்களில்திரிசிராஇறைவனைப்பிரதிஷ்டைசெய்துவணங்கியதலம்இது

என்பர்ஒருசாரார். இல்லை, இங்கு, உச்சிப்பிள்ளையார், இறைவன், இறைவிமூவரும்ஆளுக்குஒருசிகரத்தின்மேல்இருக்கிறார்கள். அதனால்திரிசிகரம், திரிசிராஆயிற்றுஎன்றும்கூறுவர். இதோடுபழையகதையையுமேகேட்போம்அங்குபோனால். வாயுவுக்கும்ஆதிசேஷனுக்கும்பலப்பரீட்சைநடக்கிறது; ஆதிசேஷன்கயிலைமலையைக்கட்டிப்பிடித்துக்கொள்ள, வாயுவேகமாகஅடிக்க, கடைசியில்ஆதிசேஷன்அசந்தசமயத்தில்கயிலைமலையிலிருந்துபெயர்ந்தமூன்றுதுண்டுகள்காளத்தியிலும், இங்கும், இலங்கைதிரிகோணமலையிலும்விழுந்தனஎனஒருபுராணவரலாறு. அப்படிவிழுந்ததுண்டேஇங்குகுன்றாகநிற்கிறதுஎன்றும்கூறுவர், பள்ளிஎன்பதால்ஜைனமுனிவர்கள்தங்கியிருந்திருக்கலாம். இத்தனையும்தெரிந்தபின்நாம்மலைஏறலாமே? இங்குள்ளகோயில், மலைமேல்இருக்கிறது. மலைகாவிரிக்குத்தெற்கேஒருமைல்தூரத்தில்ஊருக்குநடுவேஇருக்கிறது. கோயிலுக்குச்செல்லஇரண்டுவழிகள். பெரியகடைவீதிவழியாகப்படிஏறிவந்தயானைகட்டும்மண்டபம்சேருவதுஒன்று. மற்றொன்றுகீழைவீதியில்இருந்துபிரியும்வழியாகவந்துசேருவது. இங்கிருந்துமேலேயுள்ளதாயுமானார்கோயில்வரைமண்டபம்போல்மேலேமூடியபடிக்கட்டுவரிசைஉண்டு.

இந்தப்படிக்கட்டுமூலம்ஏறினால்முதலில்வாகனமண்டபத்தையும், அதன்பின்தருமபுரத்தாரதுமௌனமடத்தையும்கடந்தேநூற்றுக்கால்மண்டபம்வந்துசேரவேணும். அங்குதான்உத்சவாதிகள்நிகழ்கின்றன. சமயச்சொற்பொழிவுகளும்சங்கீதக்கச்சேரிகளும்ஏற்பாடுசெய்யப்படுகின்றன. இதனைஎட்டிநின்றுபார்த்துவிட்டே.. படிக்கட்டுகள்ஏறலாம்; இதன்பின்சித்திரமண்டபம். இங்குள்ளசிற்பங்களோ, சித்திரங்களோகலைஅழகுநிரம்பியவைஅல்ல. இதையும்கடந்தபின்தாயுமானார்கோயிலின்பிரதானவாயில்.

அந்தவாயிலில்மேற்குநோக்கிநடந்தால்பலபடிக்கட்டுகள்ஏறி, பலமண்டபங்கள்கடந்துஇறைவனாம்தாயுமானாரையும்இறைவியாம்மட்டுவார்குழலியையும்தரிசிக்கலாம். கீழ்ப்பக்கத்துவாயில்வழியாகநடந்தால்அந்தவழிஉச்சிப்பிள்ளையாரிடம்கொண்டுசேர்க்கும். இந்தச்சிராப்பள்ளிமலையின்அடிவாரத்தில்ஒருபிள்ளையார், உச்சியில்ஒருபிள்ளையார். இந்தஉச்சிப்பிள்ளையாரைமுதலில்வணங்கிவிட்டே, அதன்பின்அவரதுஅன்னையையும்அத்தனையும்கண்டுதொழலாம். உச்சிப்பிள்ளையார்கோயில்மலைஅடிவாரத்திலிருந்து 273 அடிஉயரம்என்றுகணக்கிட்டிருக்கின்றனர். அடித்தளத்திலிருந்து 417 படிகள்ஏறியேஅங்குவந்துசேரவேணும். இங்கிருந்துதிருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, பொன்மலை, உறையூர்எல்லாவற்றையுமேஒருசர்வேபண்ணலாம். இந்தப்பிள்ளையார்ஏன்இவ்வளவுஉயரத்தில்வந்துஉட்கார்ந்துகொண்டிருக்கிறார்? அதற்கும்ஒருகதைஉண்டு.

தென்னிலங்கைமன்னனானவிபீஷணன், ராமன்தந்தஅரங்கநாதனைஎடுத்துவந்திருக்கிறான். ராமனோஇலங்கைசெல்லும்வரைஓர்இடத்திலும்இந்தமூர்த்தியைக்கீழேவைத்துவிடக்கூடாதுஎன்றுஉத்தரவிட்டிருக்கிறான். காவிரிக்கரைக்குவந்ததும்விபீஷணனுக்குநீராடும்ஆவல்பிறந்திருக்கிறது. அரங்கநாதனைக்கீழேவைக்கமுடியாதுதவித்திருக்கிறான். அச்சமயத்தில்பிள்ளையார்ஓர்அந்தணச்சிறுவன்வடிவில்அங்குவந்திருக்கிறார். அவர்கையில்அரங்கனைக்கொடுத்துக்கீழேவைக்காமல்இருக்கச்சொல்லியிருக்கிறான், பிள்ளையாரோகுறும்புக்காரர். அவர்விபீஷணனிடம், ‘உம்மைமூன்றுமுறைகூப்பிடுவேன். அதற்குள்வந்துவாங்கிக்கொள்ளாவிட்டால்கீழேவைத்துவிடுவேன்என்றுஎச்சரித்திருக்கிறார்.

அப்படியேவிபீஷணன்குளித்துக்கரையேறுவதற்குமுன்மூன்றுமுறைகூப்பிட்டிருக்கிறார். விபீஷணன்காதில்இவரதுகுரல்விழவில்லை. பிள்ளையார்அரங்கனைக்கீழேவைத்திருக்கிறார். விபீஷணன்எழுந்துபார்த்ததும்பிள்ளையார்ஓடியிருக்கிறார். விபீஷணன்துரத்தியிருக்கிறான். இவர்விழுந்தடித்துமலைமேலேயேஏறிநின்றிருக்கிறார். துரத்திவந்தவிபீஷணனும்பிள்ளையார்தலையில்குட்டிஇருத்திஇருக்கிறான். என்னகுட்டுப்பட்டால்என்ன? அரங்கனைஇலங்கைசெல்லவிடாமல்காவிரிக்கரையிலேஇருத்தியபெருமையைஅல்லவாதட்டிக்கொண்டுபோய்விடுகிறார்இவர். அன்றுமலையில்ஏறிஅமர்ந்தவர்தான். பின்னர்இறங்கவேஇல்லை, அர்ச்சகர்தயவிருந்தால்உச்சிப்பிள்ளையார்தலையில்குட்டுப்பட்டவடுவையும்பார்க்கலாம். மாலைநேரமாகப்போனால்சந்நிதிதிறந்திருக்கும். அவரைத்தரிசித்துவிட்டேதிரும்பலாம். திரும்பும்வழியில்உள்ளமணிமண்டபம்பதினாறுகால்மண்டபங்களையும்பார்க்கலாம்.

மணிமண்டபத்தில்உள்ளமணி, நாலுஅடிஎட்டுஅங்குலம்உயரம்உள்ளது. இரண்டரைடன்நிறையுள்ளதுஎன்பர். இதையெல்லாம்கணிக்கத்தவறினாலும்வழியில்உள்ளபல்லவகுடைவரையைக்காணத்தவறக்கூடாது. இக்குடைவரைதாயுமானார்கோயிலிலிருந்துஉச்சிப்பிள்ளையார்கோயில்போகும்வழியில்முதலிலேயேஇருக்கிறது. இதனைலளிதாங்குரபல்லவேசுவரகிருஹம்என்றுபுதைபொருள்இலாகாவினர்போர்டுபோட்டுநமக்குஅறிவிக்கிறார்கள். பல்லவமன்னன்மகேந்திரவர்மன்அமைத்தகுடைவரை; இக்குடைவரையில்சமஸ்கிருதத்திலும்தமிழிலும்சுவர்முழுதும்கல்வெட்டுக்கள்; அதில் 104 செய்யுள்கள்தமிழில்அந்தாதித்தொடையாகவேஇருக்கின்றன.

இன்னும்இங்குதான்பிரசித்திபெற்றகங்காதரரதுசிற்பவடிவம்உப்புசஉருவில்இருக்கிறது. அவர்நிற்கும்

கங்காதரர்

கம்பீரமானதோற்றமும்அவரதுதலையில்கங்கைஅடங்கிஓடுங்கியிருப்பதும், அவரைச்சுற்றிதேவர்கள்எல்லாம்தொழுதுநிற்பதும்கண்கொள்ளாக்காட்சி. பல்லவர்களதுகலைஆர்வத்துக்குச்சிறந்தஎடுத்துக்காட்டுஇந்தச்சிற்பவடிவம். இதனைக்காணும்போதேமலைமீதுள்ளதிருவீதியில்தென்பக்கவாயிலுக்குமேற்கேஉள்ளகுடைவரையும்ஞாபகம்வரும். அதுஅவ்வளவுசிறப்பானதுஅல்லஎன்றாலும்அங்குதிரிமூர்த்திகள்மூவரும்உருவாகியிருக்கிறார்கள். இக்குடைவரையைமலையைவிட்டுஇறங்கிவீடுதிரும்பும்போதுஅவகாசம்இருந்தால்பார்த்துக்கொள்ளலாம். லளிதாங்குரபல்லவேசுரகிருஹத்தைவிட்டுஇறங்கிவந்துமேற்குநோக்கிவிரைந்தால்பிரதானக்கோயிலுக்குள்நுழையலாம். இந்தக்கோயில்மலைமேல்நூற்றுஐம்பதுஅடிஉயரத்துக்குமேல்கற்களாலேயேசுவர்கள்எழுப்பிக்கட்டப்பட்டிருக்கிறது. இதுகி.பி. 10 முதல் 12-ம்நூற்றாண்டுக்குள்கட்டப்பட்டிருக்கவேண்டும்என்பதுசரித்திரஆராய்ச்சியாளரதுஅபிப்பிராயம். நமக்குவியப்பெல்லாம்சரிவானமலையின்மீதுசெங்குத்தானசுவர்களைஎப்படிஎழுப்பிமண்டபங்கள்அமைத்தார்கள்என்பதுதான்.

பத்துவருஷங்களுக்குமுன்இந்துஸ்தான்கம்பெனியார்விமானம்கட்டஇரண்டுஜெர்மன்எஞ்சினீயர்களைஅமர்த்தியிருந்தார்கள். அவர்களைத்திருச்சிமலைக்கோட்டையில்ஏற்றிஅங்குகட்டப்பட்டுள்ளகோயிலைக்காட்டும்வாய்ப்புஎனக்குக்கிடைத்தது. அந்தஎஞ்சினீயர்களில்ஒருவரானஸ்கிமிடிட்என்பவர், இப்படிமலைமேல்செங்குத்தாகச்சுவர்எழுப்பியிருப்பதைக்கண்டுமூக்கில்விரலைவைத்துஅப்படியேஅதிசயித்துநின்றுவிட்டார். இப்படியெல்லாம்கட்டடக்கலையில்வல்லவர்களுக்குவிமானத்தளம்கட்டுவதுதானாபிரமாதமானகாரியம்என்பதேஅவர்வாய்விட்டுச்சொன்னஅபிப்பிராயம். ஆதலால்கோயிலின்கட்டடக்கலையினைப்பார்த்தேமெற்மறக்கலாம், தலைநிமிர்ந்துநடக்கலாம்நாம்.

இந்தக்கோயிலில்மூலவர்மாத்ருபூதேசுவரர், தாயுமானவர், செவ்வந்திநாதர், திருமலைக்கொழுந்தீசர்என்றும்பெயர்பெறுவர். இவர்உயிர்களுக்கெல்லாம்தந்தையாவர்என்பதுநமக்குத்தெரியும். தாயும்எப்படிஆனார்என்றுதெரியவேண்டாமா? காவிரிப்பூம்பட்டினத்திலேரத்தினகுப்தன்என்றஒருசெட்டியார்; நல்லசிவபக்தர். அவருக்குரத்னாவதிஎன்றுஓர்அருமைமகள்; அவளைத்திரிச்சிராப்பள்ளியில்உள்ளதனகுப்தன்என்பவனுக்குமணம்முடித்துக்கொடுக்கிறார்; பின்னர்இறந்துபோகிறார். ரத்தினாவதிகருப்பவதிஆகிறாள். பேறுகாலத்துக்குத்தன்தாயின்வரவைஎதிர்பார்க்கிறாள்; தாயும்வருகிறாள். வரும்வழியில்காவிரியாற்றிலோபெருவெள்ளம். கடக்கமுடியவில்லை. அக்கரையிலேநிற்கிறாள். இதற்குள்பிரசவநேரம்நெருங்குகிறது. சிராமலைஇறைவனே, ரத்தினாவதியின்தாய்வடிவில்வந்துஅவளுக்குவேண்டியதைஎல்லாம்செய்கிறார். அவளும்சுகமாகஓர்ஆண்மகவைப்பெற்றெடுக்கிறாள். ஆற்றில்வெள்ளம்குறைந்ததும்உண்மைத்தாயார்வருகிறாள்.

தாயின்வடிவில்வந்தஇறைவன்தன்னுருக்காட்டிமறைகிறார். இப்படிஉலகுயிர்அனைத்துக்கும்தந்தையாகஇருப்பவர், செட்டிப்பெண்ணுக்குத்தாயாகவும்வந்துஅவள்பிரசவகாலத்தில்உதவிபுரிந்ததனால்தான்தாயுமானார்என்றுபெயர்பெறுகிறார். இந்தஇறைவனதுலிங்கத்திருஉருநல்லகாத்திரமானவடிவம். இத்தலத்தில்கோயில்வாயில்எல்லாம்கிழக்குநோக்கிஇருந்தாலும்இறைவனும்இறைவியும்மேற்குநோக்கியேநிற்கிறார்கள். மேற்குநோக்கியமூலலிங்கத்தின்மீதுஒவ்வொருவருஷமும்பங்குனிமாதம் 23, 24, 25-ம்தேதிகளில்மாலைச்சூரியனதுகிரணம்விழுவதுண்டு . அப்படிவிழும்வகையில்கோயில்மதிலைக்கட்டியிருக்கிறார்கள், கயிலையில்உள்ளஉமைஇத்தலத்தில்தாமரைமலர்ஒன்றில்பிறந்துகாத்தியாயானமுனிவரின்மகளாய்வளர்ந்து, மட்டுவார்குழலிஎன்றபெயரோடுஇறைவனை, ஆம்! தாயுமானவரைத்தான், திருமணம்செய்துகொள்கிறாள். அன்னையின்வடிவம்அழகியது. இவ்விருவரையும்தவிரமற்றக்கற்சிலைகளும்செப்புச்சிலைகளும்ஏராளமாகஇருக்கின்றன, வேதாரண்யத்தில்பிறந்துஇந்தக்கோயிலில்வந்துதங்கியஅந்தத்தவயோகிதாயுமானாருக்கும்ஒருசிலைஅமைத்துவைத்திருக்கிறார்கள்.

இத்தலத்துக்குச்சம்பந்தர்வந்திருக்கிறார். அப்பர்வந்திருக்கிறார். இருவரும்பாடியிருக்கிறார்கள் :-

நன்றுடையானைத்

தீயதில்லானை, நரைவெள்ளேறு

ஒன்றுடையானை

உமையொருபாகம்உடையானை

சென்றடையாததிருஉடை

யானைச்சிராப்பள்ளி

குன்றுடையானைக்

கூறஎன்உள்ளம்குளிருமே

என்பதுசம்பந்தர்தேவாரம். இப்பாடலைவைத்தேநன்றுடையான், தீயதில்லான்என்றுஇரண்டுதீர்த்தங்கள்வேறேஅந்தவட்டாரத்தில்அமைத்திருக்கிறார்கள். தூரவரும்போதேசிறுபிள்ளையானசம்பந்தருக்கு, சிராப்பள்ளிமலையானைபோலத்தோன்றியிருக்கவேண்டும். அந்தத்தோற்றத்தில்பிறக்கிறதுபாட்டு. சிராப்பள்ளிக்குன்றைச்சம்பந்தர்பாடினால், சிராப்பள்ளிச்செல்வரைப்பாடுகிறார்அப்பர்.

மட்டுவார்குழலாளொடுமால்விடை

இட்டமாகஉகந்துஏறும்இறைவனார்

கட்டுநீத்தவர்க்குஇன்னருளேசெயும்

சிட்டர்போலும்சிராப்பள்ளிசெல்வரே!

என்பதுஅப்பர்பாடல். இவ்விருவரையும்தவிரஐயடிகள்காடவர்கோன், பொய்யாமொழிப்புலவர், தாயுமானவர்இன்னும்பலர்இத்தலத்துஇறைவனைப்பாடியிருக்கிறார்கள். மாணிக்கவாசகரேதாயானஈசர்க்கேசென்றுஊதாய், என்றுகோத்தும்பியைவேண்டியிருக்கிறார். தாயுமானவரும்.

தெய்வமறைவடிவான

பிரணவசொரூபியே

சித்தாந்தவித்திமுதலே

சிரகிரிவிளங்கவரு

தக்ஷிணாமூர்த்தியே

சின்மயானந்தகுருவே.

என்றுஇங்குள்ளதக்ஷ்ணாமூர்த்தியையேபாடிமகிழ்ந்திருக்கிறார். இன்னும்இத்தலத்துக்கு, கோவை, உலா, யமகஅந்நாதிஎன்றெல்லாம்புலவர்கள்பாடியிருக்கிறார்கள்.

புராணப்பிரசித்தியைவிடஇச்சிராப்பள்ளிமலைமிக்கசரித்திரப்பிரசித்தியுடையது. இக்கோயிலில்பலகல்வெட்டுக்கள்உண்டு. குடைவரைக்கோயிலில்உள்ளகல்வெட்டுக்கள்பல்லவமன்னனுடையபிரதாபங்களைக்கூறுகின்றன. காவிரியைப்பல்லவமன்னன்தன்காதலிஎன்றேஅழைக்கிறான். உறையூர்க்கூற்றத்துச்சிற்றம்பர்கொடுத்தநிலதானத்தைப்பற்றியகல்வெட்டுஇங்கேஇருக்கிறது. பாண்டியமன்னன்மாறன்சடையன், வரகுணன்முதலியோர்களுடையதும், விஜயநகரவம்சத்தைச்சேர்ந்தவேங்கடதேவமகாராயரதுசாசனங்களும்இருக்கின்றன. இவைகளில்சிலசிதைந்தும்போயிருக்கின்றன.

இத்துடன்ஆங்கிலேயரும்பிரஞ்சுக்காரர்களும்தங்கள்ஆதிக்கத்தைஇந்தியாவில்நிலைநாட்டமுயன்றபோதுநடந்தசண்டையின்நிலைக்களன்இம்மலைக்கோட்டை. சந்தாசாகிபு, முகமதலிகதையெல்லாம்நாம்தாம்படித்திருக்கிறோமே. இவ்வரலாற்றையெல்லாம்ஆராய்பவர்கள்ஆராயட்டும். அதற்கெல்லாம்நமக்குஅவகாசம்ஏது? நாமேநானூறுக்குமேற்பட்டபடிகள்ஏறிஇறங்கிஅலுத்துவந்திருக்கிறோம், என்றாலும்அதற்கெல்லாம்தக்கபலனாக, உச்சிப்பிள்ளையார், தாயுமானார், மட்டுவார்குழலிமூவரையும்தரிசித்துவிட்டுவந்திருக்கிறோமே, அதுபோதாதா?