பூவனத்துப்புனிதர்
அழகுஅனுபவத்தைப்பற்றிஎவ்வளவோஆய்ந்திருக்கிறார்கள்அறிஞர்கள்! பொதுவாகநாம்இயற்கைக்காட்சிகள், சித்திரங்கள், சிற்பங்கள்முதலியவற்றைப்பார்க்கும்போதுஅவைஅழகாயிருக்கின்றனஎன்றுஎண்ணுகிறோம். அதனால்மகிழ்ச்சிஅடைகிறோம். இதுதான்அழகுஅனுபவம். இந்தஅனுபவம்வெறும்கண்ணுக்கும்காதுக்கும்விருந்தளிப்பதோடுஅமையாமல்உள்ளம்நிறைந்தததாகவும்இருக்குமானால்அதைவாயால்வர்ணிக்கவும்முடியாது, பாகுபடுத்திப்பார்க்கவும்முடியாது. ஸ்ரீமதிபாலசரஸ்வதியின்பரதநாட்டியம்பலவருஷங்களுக்குமுன்அமரர்ஸிகமணிஅவர்கள்வீட்டில்நடந்தது. நாங்கள்பலர்பார்த்துக்கொண்டிருந்தோம். எவ்வளவோஅனுபவங்களைப்பெற்றோம். ஆனால்பெற்றஅனுபவத்தைச்சொல்லத்தெரியாமல், சொல்லமுடியாமல்தவித்தோம். ஆனால்டி. கே. சி. அவர்கள்வீட்டுவேலைக்காரிநடனம்முடிந்ததும், ‘அ…! பாதகத்திமகள்எப்படிஎல்லாம்ஆடுகிறாள்!’ என்றுசொல்லிக்கொண்டுமூக்கில்விரலைவைத்துநின்றுவிட்டாள். இதைப்பார்த்தடி.கே.சி ‘இதுவேகலைஅனுபவம், அழகுஅனுபவம்‘ என்றார்கள்.
இதேபோல்ஓர்அனுபவம்பொன்னனையாள்என்றகணிகைக்கு, பொன்னனையாள்சிறந்தபண்புகள்நிறைந்தவள்: நல்லசிலபக்தை. வருகிறசிவனடியாரையெல்லாம்உபசரித்துஉணவருத்துவதிலேயேஅவள்செல்வம்எல்லாம்கரைகிறது. அவளுக்குஓர்ஆசை, சிவபெருமானைநல்லபஞ்சலோகத்தில்ஒருமூர்த்தியாகவடித்துப்பார்க்கவேண்டும்என்று. அதற்குஅவளிடம்பணம்இல்லை . அதற்காகவருந்துகிறாள். அவளதுவிருப்பத்தைநிறைவேற்றத்திருவுளம்கொண்டசிவபெருமான், ஒருசித்தர்வடிவிலேவருகிறார். அவள்விருப்பம்என்னஎன்றுகேட்கிறார். அதற்குவேண்டியபொருள்தன்னிடம்இல்லையேஎன்றதும், ‘பரவாயில்லைவீட்டில்கிடக்கிறஇரும்பு, செம்பு, ஈயம், பித்தளைஎல்லாவற்றையும்சேகரித்துக்கொண்டுவா‘ என்கிறார். அத்தனையையும்அன்றிரவேபுடம்போட்டுத்தமதுரஸவாதத்திறமையினால்எல்லாவற்றையும்நல்லஉலோகமாக்கிக்கொடுக்கிறார்; வந்தசித்தர்மறைந்துவிடுகிறார்பின்புகிடைத்தஉலோகத்தால்பொன்னனையாள்தேர்ந்தசிற்பிகளைக்கொண்டுஇறைவனதுதிருவுருவைவடிக்கச்சொல்கிறாள். அப்படிச்சிற்பிவடித்தபடிமமும்மிக்கஅழகுடையதாகஅமைந்துவிடுகிறது. அந்தஅழகைக்கண்டுஆனந்திக்கிறாள். அந்தஅழகியபிரானதுகன்னத்தைத்திருகிமுத்தமிட்டுத்தன்மகிழ்ச்சியைத்தெரிவிக்கிறாள். இப்படிஅழகைஅனுபவித்தபொன்னனையாளைப்பரஞ்சோதியார்,
மழவிடைஉடையான்மேனி
வனப்பினைநோக்கிஅச்சோ!
அழகியபிரானோஎன்னா
அள்ளிமுத்தங்கொண்டுஅன்பில்
பழகியபரனையானும்
பரிவினால்பதிட்டைசெய்து
விழவுதேர்நடத்திச்சின்னாள்
கழிந்தபின்வீடுபெற்றாள்,
என்றுநமக்குஅறிமுகம்செய்துவைக்கிறார். அப்படிக்கன்னம்கிள்ளிக்கொஞ்சியதால்ஏற்பட்டவடுவுடனேயேஇறைவன்இன்னும்அந்தக்கோலத்தில்இருந்துகொண்டிருக்கிறான். அப்படிப்பொன்னனையாளால்உருப்பெற்று, நகக்குறியும்பெற்றஇறைவன்இருக்கும்தலம்தான்திருப்பூவணம். அந்தத்திருப்பூவணத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.
திருப்பூவணம், மதுரையிலிருந்துமானாமதுரைசெல்லும்பாதையில்மதுரைக்குக்கிழக்கேபன்னிரண்டுமைல்தொலைவில்இருக்கிறது. சிறியஊர்தான், மதுரைமானாமதுரைலயனில்சென்றாலும்திருப்பூவணம்ஸ்டேஷனில்இறங்கிச்செல்லலாம். மெயின்ரோட்டுக்குவடப்புறம்ஒருபர்லாங்குதூரத்தில்கோயில்இருக்கிறது. கோயில்நிரம்பப்பெரியகோயிலும்அல்ல, சிறியகோயிலும்அல்ல. இறைவன்பெயர்பூவணநாதர், இறைவிபெயர்மின்னனையாள். கோயிலுக்குவடபுறம்வைகைநதிஓடுகிறதுபாண்டியமன்னரோடுசோழமன்னரும்சேரரும்வந்துவணங்கபெருமைஉடையவர்பூவணநாதர், இதைஞானசம்பந்தர்பாடுகிறார்
அறையார்புனலும்மாமலரும்
ஆடுஅரவார்சடைமேல்
குறையார்மதியம்சூடி
மாதுஓர்கூறுடையான்இடமாம்
முறையால்முடிசேர்தெள்னர்,
சேரர். சோழர்கள்தாம்வணங்கும்
திறையார்ஒளிசேர்செம்யை
ஓங்கும்தென்திருப்பூவணமே.
என்பதுஅவரதுதேவாரம், தமிழ்மன்னர்மூவர்மாத்திரம்அல்ல, தேவர்மூவரில்ஒருவனானபிரமனும்வந்துபூஜித்துப்பேறுபெற்றிருக்கிறான்என்றுவரலாறுகூறும்.
இத்தலத்தில்மின்னனையாளையும்மிஞ்சியபுகழ்உடையவளைபொன்னனையாள்என்றுகண்டோம். மின்னனையாள்திருமோல்விளங்கஓர்தன்னமர்பாகமதாகியசங்கரன்”என்றுபாடஆரம்பித்தசந்தரரும்,
முன்நிளையார்புரம்மூன்றுஎரியூட்டிய
பொன்னனையான்உறைபூவணம்ஈதோ
என்றுதானேமுடித்திருக்கிறார்? பொன்னனையள்உருவாக்கியபூவணநாதர்பொன்னனையான்என்றபெயரோவிளங்குகிறார். உத்சவமூர்த்திநல்லஅழகானவடிவம், கன்னத்தைகிள்ளிமுத்தமிட்டதழும்பு, வடிவத்தில்இருக்கிறது. வடிவத்தைக்கண்டால்நமக்கும்கூடக்கன்னத்தைக்கிள்ளலாமாஎன்றுதோன்றும்அர்ச்சகர்கள்அனுமதிக்கமாட்டர்களேஎன்பதனால்தான்கைநீட்டாதுவருவோம். பொன்னனையாள்திருவுருவம்செப்புச்சிலையில்கோயிலில்இருக்கிறது. மின்னனையாள்வடிவமும்அழகானதே. சிவபெருமான்பொன்னனையாளுக்காகரஸவாதியாகவந்ததிருவிளையாடலை,
விரிநீர்ச்செம்போதத்திருஉருவாம்
பொன்னனையாட்குஇந்தவாதத்
திருஉருவாய்வந்துதித்தோன்
என்றுதிருப்பூவனநாதர்உலாபோற்றுகிறது. கோயிலுக்குவடபுறம்பொன்னனையாள்மண்டபம்என்றுஒரு, கட்டிடம்இருக்கிறது. அதுஇப்போதுஇடிந்துபாழடைந்துகிடக்கிறது. அங்குள்ளதூண்ஒன்றில்பொன்னனையாளின்சிலாஉருவம்செதுக்கப்பட்டிருக்கிறது.
பூவணத்துமின்னனையாள்
அக்கோயில்வாயிலில்உள்ளநந்திசிறிதுசாய்ந்திருக்கிறது. ஞானசம்பந்தர்இத்தலத்துக்குவந்தபோதுஇங்குள்ளமணலெல்லாம்சிவலிங்கமாகக்காட்சிஅளித்திருக்கிறது. ஆதலால்அவர்அக்கரையிலேநின்றுபாடியிருக்கிறார். அவரைப்பார்க்கஇறைவன்விரும்பினாரோ, இல்லைஅவர்தம்மைப்பார்க்கவசதிசெய்துகொடுக்கவேண்டுமென்றுதான்விரும்பினாரோ? இறைவன்நந்தியைக்கொஞ்சம்சாய்ந்துகொள்ளச்சொல்லியிருக்கிறார். இன்னும்சம்பந்தரிடம்வாதில்தோற்றசமணர்களெல்லாம்கழுஏறியஇடம்இப்பூவணம்தான்என்பர். அதைக்குறிக்கக்கழுவர்படைவீடுஎன்றுஓர்இடம்உண்டுஎன்றும்கூறுவார்.
இத்தலத்துக்குச்சம்பந்தர், சுந்தரர்மாத்திரம்வந்தார்என்றில்லை. அப்பருமேவந்திருக்கிறார். அற்புதமாக; திருத்தாண்டகம்பாடியிருக்கிறார்.
மயலாகும்தன்னடியார்களுக்கு
அருளும்தோன்றும், மாசிலாப்
புன்சடைமேல்மதியம்தோன்றும்,
இயல்பாகஇடுபிச்சைஏற்றல்
தோன்றும், இருங்கடல்நஞ்சுண்டு
இருண்டகண்டம்தோன்றும்,
கயல்பாயகடுங்கல்உழிக்,
கங்கைநங்கைஆயிரமாம்
முகத்தினோடுவானில்தோன்றும்,
புயல்பாயசடைவிரித்த
பொற்புத்தோன்றும்பொழில்
திகழும்பூவணத்தெம்புனிதனார்க்கே
என்றபாடல்மிக்கசுவையுடையபாடல்மட்டும்அல்லஇறைவனதுதிருக்கோலங்களையெல்லாம்விளக்கும்பாடலும்ஆயிற்றே.
இக்கோயிலில்பாண்டியமன்னர்களில்கோநேரின்மைகொண்டான். பராக்கிரமபாண்டியதேவர்முதலியவர்களின்காலத்தில்செதுக்கப்பட்டகல்வெட்டுகள்இருக்கின்றன். இக்கல்வெட்டுக்களில்இறைவன்திருப்பூவணமுடையநாயனார்என்றுகுறிக்கப்பெற்றிருக்கிறார்.
இந்தவட்டாரத்தில்இக்கோயிலைத்தவிரவேறுகுறிப்பிடத்தக்ககோயில்கள்இல்லை. அறுபத்துநாலுதிருவிளையாடலில்ஒன்றானரஸவாதம்நடத்தியஇடத்தையும்பார்த்தோம். 63 நாயன்மாரில்ஒருவரானஇளையான்குடி. மாறனையும்பார்க்கவேண்டாமா? அவர்சரித்திரம்பிரபலமானதாயிற்றே. தமிழரின்விருந்தோம்பல்பண்பாட்டுக்குச்சிறந்தஇலக்கியமாகவிலங்குகிறவர்ஆயிற்றே, அவர்பிறந்துவளர்ந்தபதிதிருப்பூவணத்துக்குத்தென்கிழக்கேமுப்பதுமைல்தூரத்தில்இருக்கிறது.
திருப்பூவணத்திலிருந்துமானாமதுரைவந்துஅங்கிருந்துதெற்குநோக்கிப்பார்த்திபனூர்வழியாய், பரமக்குடிசெல்லவேண்டும். பரமக்குடிக்குநேர்வடக்கேஐந்துஆறுமைல்தொலைவில்இளையான்குடியிருக்கிறது. காரிலேயேசெல்லலாம்ஊர்வரை. ஊர்சின்னஞ்சிறியஊர். இங்குஒருசிறுகோயில்இருக்கிறது.
பூவணத்துப்பொன்னனையான்
அத்தலத்தில்உள்ளமஞ்சப்புத்தூர்செட்டிமார்கள்என்னும்ஆயிரவைசியர்இளையான்குடிமாறரைத்தங்கள்இனத்தவர்என்றுஉறவுகொண்டாடுகிறார்கள். இளையான்குடிமாறர், அவர்மனைவிஆகியஇருவரதுசெப்புப்படிமங்களையும்செய்துவைத்திருக்கிறார்கள். இளையான்குடிமாறர்சரித்திரம்தெரிந்ததுதானே. வருகின்றசிவனடியாரையெல்லாம்அழைத்துவிருந்தருந்தவைக்கும்இயல்புடையவர், அவர்வறுமையால்வாடுகிறார்.
இந்தநிலையில்ஒருநாள்இரவில்அகாலத்தில்இறைவனேஅடியவர்வேடத்தில்வருகிறார். வீட்டிலோபிடிஅரிசிஇல்லைஅதற்காகமாறர்சோர்ந்துவிடவில்லை. அன்றுவிதைத்தநெல்லைவயலிலிருந்துசேகரித்துவந்துகொடுக்கிறார். அதனைவறுத்து, உலர்த்தி, அரிசியாக்கிக்சமைக்கிறாள்அவர்மனைவியார், விறகுஇல்லையென்பதால்கூரையையேபிய்த்துஎடுத்துத்தீமூட்டுகிறார். தம்பதியர்இருவரதுஇந்தவிருந்தோம்பல்பணியை! உலகுக்குஅறிவித்துஅவர்களைஆட்கொள்கிறார்இறைவன், தமிழ்மக்கள்எல்லாம்பின்பற்றிநடக்கவேண்டியவாழ்க்கைவரலாறாயிற்றேஇவரதுவாழ்க்கை. அந்தமாறரையும்மனைவியையும்கண்டுதரிசிக்காமல்இருக்கலாமாஎன்றுதான்இத்தனைதூரம்உங்களைக்கொஞ்சம்இழுத்துஅடித்துவிட்டேன்.
இப்படிவந்தஇடத்திலேஒருபழயபெருமாள்கோயிலையும்பார்த்துவிடலாம். அங்கேவேணுகோபாலர்கோயில்கொண்டிருக்கிறார். இந்தப்பெருமான்பெயர்மிகமிகநீளம். ருக்மனிசத்யபாமாசமேதராகநின்றுகுழலூதும்வின்னசாத்துஎம்பெருமான்என்பர். திருக்கைஅமர்த்தும்திருநாராயணன், நெடியகரியமாணிக்கமரகதமதனவேணுகோபாலப்பெருமாள்என்றுசொல்லிவிட்டாலேபெருமாளின்திருவடிவம்முழுதும்நம்கண்முன்வருமே. இளையான்குடிமாறரைக்காணவந்தஇடத்தில்பெருமாள்தரிசனமும்கிடைக்கிறதென்றால்அதைவிட்டுவைப்பானேன்