தமிழ்நாடு – 108

கிருஷ்ணாபுரத்து வேங்கடநாதன்

சோழநாட்டில்ஒருராஜகுமாரி, அடுத்துள்ளபாண்டிநாட்டிலேஒருவீரன். ஊழ்வினைவசத்தால்எடுப்பாரும்கொடுப்பாரும்இன்றிஒருவரையொருவர்பார்க்கின்றனர். காதல்கொள்கிறேனர், ஆனால்இரண்டுநாட்டுக்குமோதீராப்பகை, அதனால்சோழநாட்டுராஜகுமாரியைப்பாண்டியநாட்டுவீரன்மணம்முடிப்பதுஎன்பதுஇயலாதகாரியமாகஇருந்தது. இருந்தாலும், இவர்களதுகாதல்தாபம்தணியவில்லை . கடைசியில்ராஜகுமாரியைஅவளதுகட்டுக்காவலிலிருந்துவீரன்அழைத்துச்சென்றுவிடுவதுஎன்றுஏற்பாடுசெய்துகொள்கிறான். அதற்கிசைகிறாள்இராஜகுமாரியும். குறிப்பிட்டநாளிலேவீரன்ராஜகுமாரியைஉடன்அழைத்துச்சென்றுவிடுகிறான். செய்திதெரிந்துவிடுகிறதுசோழநாட்டுவீரர்களுக்கு. பாண்டியநாட்டுவீரனைமடக்கிமங்கையைமீட்டுச்செல்லமுனைந்துபுறட்படுகிறார்கள்சோழவீரர்கள். அதற்கெனக்குதிரைகளிலேஏறிப்பாண்டியநாட்டுவீரனைப்பிடிக்கவருகிறார்கள். வீரனோராஜகுமாரியையும்இழுத்துக்கொண்டேசெல்லவேண்டியிருக்கிறது. அவளாலோவிரைந்துநடக்கமுடியவில்லை. ஆதலால்அவளைஅப்படியேதன்தோளின்மீதுஏற்றிக்கொள்கிறான். அவனைச்சுமந்துகொண்டேஓடுகிறான். சோழநாட்டின்எல்லையைக்கடந்துபாண்டியநாட்டிற்குள்நுழைந்துவிட்டால்சோழநாட்டுவீரர்களால்ஒன்றும்செய்யமுடியாதல்லவா? எல்லைநெருங்குகிறது. அதற்குள்நெருங்கிவிடுகிறார்கள்சோழநாட்டுவீரர்கள், குதிரையிலிருந்தேநீண்டஈட்டியைஓடும்வீரளின்விலாவில்பாய்ச்சுகிறார்கள், ஈட்டிபாய்ந்தஇடத்தில்ரத்தம்பெருகுகிறது. பாண்டியநாட்டுவீரனோபகைஅரசரின்வீரர்களோடுபோரிட்டுஅவர்களையெல்லாம்வெல்லக்கூடியவன்தான். என்றாலும்தன்னுடன்வந்திருக்கும்ராஜகுமாரியைச்சோழநாட்டுமண்ணிலேஇறக்சிலிடவிரும்பவில்லை. ஆதலால்விரைந்தேஓடிப்போய்பாண்டியநாட்டின்எல்லையைஅடைந்துவிடுகிறான். வெற்றிஅவனுக்கே. இந்தநிலையில்லீரனின்தோள்களில்ஆரோகணித்துஇருந்தராஜகுமாரிக்கோஒரே

நெல்வேலிவடிவன்னை

மகிழ்ச்சி. காதலனுடன்சென்றுஅவனுடன்இன்பவாழ்வுநடத்தப்போகிறோம்என்றஉள்ளத்தில்எழும்பூரிப்புஅவள்முகத்திலேபிரதிபலிக்கிறது

இப்படிஒருகதை. ஆனால்இவ்வளவும்உண்மையாய்நடக்கவில்லை. தமிழ்நாட்டுச்சிற்பிஒருவன்ஒருநாள்மாலைஊருக்குவெளியேஉலாவப்புறப்படுகிறான். அங்கேஒருபாறையைப்பார்க்கிறான். அப்பாறையில்இயற்கையாகச்செந்நிறரேகைகள்ஓடுவதைக்காண்கிறான். அந்தப்பாறையையும்அதில்ஓடியசெந்நிறரேகைகளையும்சுற்றிசுற்றிஅவன்எண்ணம்ஓடியிருக்கிறது. பண்டைத்தமிழர்இன்பியல்வாழ்க்கையில்உடன்போக்கு` எல்லாம்உண்டுஎன்பதைஅறிந்தவன்ஆயிற்றே. அதனால்அவனதுஎண்ணத்தில்ஒருசுற்பனை. ஆம்! முன்கூறியகற்பனைக்கனவுஉருவாகியிருக்கிறது. அந்தப்பாறையைவெட்டிக்செதுக்கிஅதில்தன்சிற்றுளிவேலையைக்காட்டமுனைகிறான். அவ்வளவுதான், கல்லில்உருவாகிவிட்டார்கள்கன்னி, காதலன், சோழநாட்டுவீரர்கள், அவர்களதுகுதிரைகள், அவர்கள்ஏந்தியஈட்டிகள்எல்லாம். பாறையில்கண்டசிவப்புரேகைகள்வீரனின்விலாவில்வடியும்ரத்தப்பெருக்காகஅமைந்துவிடுகின்றன. கல்உயிர்பெற்றுவிடுகிறது. இந்தச்சிலைவடிவைஒருதூனாகநிறுத்திவிடுகிறான்சிற்பி, கிருஷ்ணாபுரத்துத்திருவேங்கடநாதன்சந்நிதியில். அந்தக்கிருஷ்ணாபுரத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

கிருஷ்ணாபுரம்திருநெல்வேலியிலிருந்துகிழக்கேஎட்டுமைல்தூரத்தில்உள்ளசிற்றூர். திருநெல்வேலிதிருச்செந்தூர்ரோட்டில்சென்றால்நெடுஞ்சாலைப்பொறியர்கள்கிருஷ்ணாபுரம்கலைச்சிற்பங்கள்என்றுஎழுதிஒருபோர்டு. நாட்டிக்கோயிலுக்குச்செல்லும்வழியைக்குறிப்பிட்டிருப்பார்கள். ரயிலிலேசெல்பவர்கள்செய்துங்கநல்லூர் (ஆம், செய்துஉண்கநல்லூர்அல்ல, ஜெயதுங்கள்நல்லூர்தான்) ஸ்டேஷனில்இறங்கிவண்டிவைத்துக்கொண்டுமேற்குநோக்கிஇரண்டுமைல்வரவேணும். அப்படிவந்தரோட்டைவிட்டுஇறங்கிஇரண்டுபர்லாங்குபனந்தோப்புவழியாகநடந்தால்திருவேங்கடநாதன்கோயில்வாயில்வந்துசேரலாம். இந்தத்திருவேங்கடநாதன்புராணப்பிரசித்தி, சரித்திரப்பிரசித்திஎல்லாம்பெற்றவர்அல்ல. ஆனால்இக்கோயில்ஒருபெரியசிற்பக்கலைக்கூடமாகவேஇருக்கிறது.

கோயில்வாயிலில்ஒருநல்லகோபுரம். அந்தக்கோபுரத்தையும்முந்திக்கொண்டுஒருமண்டபம், மண்டபத்தைக்நடந்துகோயில்வாயிலுள்நுழைந்தால்முதல்முதல்நாம்காண்பதுமுகமண்டபம். அந்தமண்டபம்தெற்கேபார்த்திருக்கிறது. அதன்முகப்பில்ஆறுதூண்களில்ஆறுஅழகியசிற்பவடிவங்கள், அதில்ஒன்றுதான்நாம்முன்னர்குறித்தசிற்பவடிவம், வீரனின்தோள்களில்சோழராஜகுமாரிஉட்கார்ந்திருக்கிறநேர்த்தியையும், அவள்வெயிலுக்காகத்தன்முந்தானையைவிரித்துத்தலைக்குமேல்பிடித்திருக்கிறஅழகும்சிறப்பாயிருப்பதைப்பார்ப்போம். வைத்தகண்வைத்தபடியேபார்த்துக்கொண்டிருக்கச்செய்யும்சிலாபடிவம். மற்றையத்தூண்களிலோபாசுபதஅஸ்திரம்பெறத்தவக்கோலம்பூண்டஅர்ச்சுனன், அவனோடுதீராப்பகைமைபூண்டஅந்தஅங்கதேசத்துமன்னன், புகழ்பெற்றகொடையாளிகர்ணன். இன்னும்அரசிளங்குமரனைச்சுமந்துநிற்கும்குறப்பெண்ஒருத்தி, இன்னும்இரண்டுபெண்களின்சிலைவடிவங்கள், பெண்களின்வடிவெல்லாம்கண்டார்கண்ணையும்கருத்தையும்கவர்வன, பாசுபதம்பெறப்பலமாதகாலம்ஊண்உறக்கம்இன்றிப்பசுபதியைநாக்கித்தவம்செய்தவன்அல்லவாஅருச்சுனன். ஆதலால்தாடி, சடைஎல்லாம்நீண்டுவளர்ந்திருக்கின்றன. அவனுக்குமுகத்திலேஓர்அசாதாரணக்களை, பெருந்தவசிகளுக்குஇருக்கவேண்டியசாந்தம், பொறுமைஎல்லாம்கனிகின்றன. தவக்கோலமேஎன்றாலும்வில்தாங்கியவீரன்தான்அவன். அவன்பாசுபதம்பெறுவதேதன்வில்லாற்றலையும்மல்லாற்றலையும்காட்டத்தானே! இத்தனைஅழகோடுவிளங்கும்அர்ச்சுனனுக்குப்பக்கத்திலேயேகர்ணன், அவன்நாகபாசமேந்தியகையனாய்நிற்கிறான். வீரனுக்குஉரியகாம்பீர்யம், வில்வித்தையில்சிறந்தவன்என்பதனால்ஏற்பட்டமிடுக்கு, எல்லாவற்றையுமேபார்க்கிறோம்இந்தச்சிலையில்.

இச்சிலைகளைப்பார்த்தபின்மகாமண்டபத்தில்நுழையலாம். கோயிலுள்நுழையும்போதேகொஞ்சம்பயபக்தியுடன்தான்நுழையவேண்டும். உள்ளேசென்றதும்நம்மைஉறுத்துலிழித்துநோக்குபவன்தான்வீரபத்திரன், கனல்உமிழ்கண்களுடன்தென்வரிசைத்தூண்களில்முதலிலேயேநிற்பான்அவன். சிவபிரானைமதியாதமாமனார்தக்ஷனையும்அவன்செய்தவேள்வியையுமேஅழிக்கப்புறப்பட்டவன்ஆயிற்றே.

பார்த்ததிக்கினில்

கொடிமுடிஆயிரம்பரப்பி

ஆர்த்ததிண்டய

வரைஇரண்டாயிரம்துலக்கி

பேர்த்ததாள்களில்

அண்டமும்அகண்டமும்பொர

வேர்த்தெழுந்தனன்

வீரரில்வீரவீரன்

என்றுதிரிகூடராஜட்பகவிராயர்பாடியிருக்கிறாரேஇவனைப்பற்றி. அந்தவீரருள்வீரனைக்கேடயமும்வாளும்ஏந்தியகையனாய்க்காலைவீசிவளைத்துப்போருக்குச்செல்லும்கோலத்தில்நேருக்குநேர்பார்த்தால்நம்உள்ளத்தில்அச்சம்எழுவதில்வியப்பில்லை . இவனதுதுணைவனானவீரன்ஒருவனும்எதிர்த்தூணில்இருக்கிறான். இந்தவீரபத்திரனைஅடுத்துமன்மதன்,

தேர்இஎம்தென்றலாக

செழுங்குடை. மதியமாக

தூரியம்கடல்களாகச்

சொற்குயில்காளம்ஆக

நாரியர்சேனையாக

நறைவண்டுவிடுதூதாகப்

பாரினில்விஜயம்செய்யும்

படைம்தன்

ஆயிற்றேஅவன். ஆனால்இங்கேகரும்புவில்ஒன்றைமட்டுமேஏந்தியகையனாய், மற்றப்படைக்கலங்களையெல்லாம்துறந்துநிற்கின்றகோலத்தில்காண்கிறோம். ஆஜானுபாகுவாகஇவன்இல்லை. கொஞ்சம்கட்டுக்குட்டென்றேநிற்கிறான். இவனுக்குஎதிர்த்ததூணில்அன்னத்தின்மீதுஆரோகணித்துவரும்ரதிதேவியோபெண்மைக்கேஓர்எடுத்துக்காட்டு. காமனும்கண்டுகாமுறும்இம்மங்கைதன்அழகை, கையில்ஏந்தியகண்ணாடியில்கண்டுமகிழ்கிறான். ‘நிலவுசெய்யும்முகமும், காண்பார்நினைவுஅழிக்கும்விழியும், கலகலவென்றமொழியும், தெய்வக்களிதுலங்குநகையும்உடையஇந்தப்பெண்ணணங்கு, நமதுஉள்ளத்தையெல்லாம்கொள்ளைகொள்கிறாள்.

இப்படித்தேர்ந்தஅழகுக்குஎல்லையாகரதிதேவியைவடித்துக்காட்டியசிற்பி, நல்லஅவலக்ஷணத்துக்கும்ஓர்எல்லைகாட்டுகின்றான். ரதிதேவியின்சிலைக்குப்பக்கத்திலுள்ளதூணில்ஓர்அழகியமங்கையும், ஓர்அவலக்ஷணமானமனிதனும்உருவாகியிருக்கிறார்கள். அழகேவடிவமாகஇருந்தஒருமுனிவர்அந்தப்பெண்ணின்காதலைச்சோதிக்கவேண்டிஇப்படிஉருமாறினார்என்றும், அந்தநிலையிலும்அவரையேமணக்கஇசைந்துநின்றாள்அவள்என்பதும்கதை. இதற்குஎதிர்த்தூணிலேதான்புருஷாமிருகமும்வீமனும், இருவருக்கும். நியாயம்வழங்கும்தர்மபுத்திரரும். எல்லாம்ஏழுஎட்டுஅடிஉயரத்தில்காத்திரமானசிறப்வடிவங்கள். இத்தாலியபேராசிரியர்பாதர்ஹீராஸ்போன்றஅறிஞர்கள்எல்லாம்கண்டுதலைவணங்கிநின்றசிற்பவடிவங்கள்இவை. இக்கலைக்கூடத்தைஉள்ளடக்கிவைத்துக்கொண்டிருப்பவரேதிருவேங்கடநாதன்.

நாமும்வேங்கடவனைஅந்தத்திருவேங்கடத்திலும்இன்னும்பலதலங்களிலும்கண்டுகளித்திருக்கிறோம்.

வேங்கடமேவிண்ணோர்

தொழுவதுவும், மெய்ம்மையால்

வேங்கடமேமெய்வினைநோய்

தீர்ப்பதுவும்வேங்கடமே

தானவரைவீழத்தன் ..

ஆழிப்படைதொட்டு

வானவரைக்காப்பான்மலை

என்றுவேங்கடமலையைப்பற்றியெல்லாம்தெரிந்தவர்கள்தாம்நாம்என்றாலும், இத்தனைகலைப்பிரசித்திஉடையசந்நிதியிலேகொலுவீற்றிருக்கும்வேங்கடவனைஇங்குதான்காண்கிறோம். கோயில்கருவறையில்நிற்கும்வேங்கடவர்நல்லசிலாவடிவினர். செப்புச்சிலையாகவும், பூதேவிசீதேவிசமேதராகநின்றுகொண்டிருக்கிறார்.

இந்தக்கோயிலையும்இங்குள்ளசிலாவடிவங்களையும்நிர்மாணித்தவர், நாயக்கமன்னர்களில்புகழ்வாய்ந்தவராகஇருந்தகிருஷ்ணப்பநாயக்கரே. இத்தலம்முதலில்வேங்கடராயபுரம்என்றேஅழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர்தான்கோயிலைநிர்மாணித்தகிருஷ்ணப்பநாயக்கர்பெயராலேகிருஷ்ணாபுரம்என்றுநிலைத்திருக்கிறது. இல்லை, விஜயநகரமன்னனானகிருஷ்ணதேவராயருடையபெயரையேஇதற்குஇட்டிருக்கிறார்கள்என்றும்வரலாறுஉண்டு. இங்குள்ளகல்வெட்டுக்களும், செப்புப்பட்டயமும், கோவில்கட்டியமன்னனைக்கிருஷ்ணபூபதிஎன்றேகுறிக்கின்றன. ஆதியில்கோயிலைச்சுற்றிப்பெரியமதில்; உயரில்குடிமக்கள்பலரும்இருந்திருக்கின்றனர். கோயிலைச்சுற்றியமதில்சிதைந்துகிடக்கிறது. ஊரில்இன்றுகுடியிருப்பவர்கள்வெகுசிலரே. ஊர்முழுதும்குட்டிச்சுவர்களேஅதிசும். இங்குதெய்வச்சிலையார்என்றுஒருபெரியவர்இருந்தார்என்றும், அவர்மீதுதெய்வச்சிலையார்விறலிவிடுதூதுஎன்றுஒருநூல்பாடப்பட்டிருந்ததுஎன்பதும்வரலாறு. எனக்குஅந்தநூல்கிடைக்கவில்லை.

எனக்குஇந்தக்கோயிலில்அதிகம்ஈடுபாடுஉண்டு. கலைஅழகைக்கண்டுஅனுபவிக்கநான்பயிற்சிபெற்றபள்ளியேஇக்கோயில்தான். முதல்முதல்சுலைகளைப்பற்றிஎழுதமுனைந்ததும்இக்கோயிலில்உள்ளசிலைகளைப்பற்றித்தான். ஆதலால்தான்ஏதோவரப்பிரசித்தியோ, புராணப்பிரசித்தியோஇல்லாததலம்என்றாலும், உங்களையெல்லாம்இக்கலைப்பிரசித்திஉடையகோயிலுக்குஅழைத்துச்சென்றிருக்கிறேன், சிரமத்தோடுசென்றாலும்சிலைஅழகைக்கண்டுதிரும்பும்போதுநிறைந்தமனத்தோடேயேதிரும்புவீர்கள்என்பதுதிண்ணம்.பின்குறிப்புகிருஷ்ணாபுரம்கோயில்அண்மையில்அரசால்புனருத்தாரணம்செய்யப்பட்டுநல்லநிலயில்காட்சியளிக்கிறதுஎன்பதுமகிழ்ச்சிக்குரியசெய்தி.