திருக்குறுங்குடி அழகியநம்பி
மகாவிஷ்ணுஎடுத்தஅவதாரங்களில்வாமானாவதாரம்ஒன்று. வாமனன்என்றால்குறுகியவடிவினன்என்பதுநமக்குத்தெரியும். இந்தவாமனனேபின்னர்திருவிக்கிரமனாகவளர்ந்தான்என்பதையும்அறிவோம், இந்தவாமனாவதாரத்தைக்கவிச்சக்கரவர்த்திகம்பன்அழகாகப்பாடுகிறான். நமக்குத்தெரிந்தகதைதானே. மண்உலகில்மகாபலிஎன்றபெயரோடுமகாசக்திவாய்ந்தஅரசன்ஒருவன்ஆள்கிறான். நல்லகுணசீலன், ஆட்சியையும்திறம்படிநடத்துகிறான். அவனதுசீலம்காரணமாகவேவானுலகம்பூவுலம்எல்லாம்அவன்ஆளுகைக்குள்வந்துவிடுகிறது. இதன்பின்அவன்ஓர்அரியயாகத்தையும்செய்யமுற்படுகிறான். இந்தயாகம்நிறைவேறினால்மகாபலிக்குஇன்னும்எவ்வளவோசக்திவந்துவிடுமேஎன்றுதேவர்கள்அஞ்சுகிறார்கள். திருமாலிடம்சென்றுமுறையிடுகிறார்கள்மகாபலிக்குமுக்தியைஅருளவேண்டும்என்றுஅவருக்குமேஆசை. அதற்காகஅவர்காசிபமுனிவருக்குஅவர்மனைவிஅதிதிவயிற்றில்பிள்ளையாகஅவதரிக்கிறார். பிறக்கும்போதேகுள்ளமானவடிவத்தோடுபிறக்கிறார். அந்தக்குள்ளவடிவத்துக்குள்ளேவரம்பில்லாதபூரணதத்துவங்கள்எல்லாமேஅடங்கிக்கிடக்கின்றன. எதுபோலஎன்றால், கம்பன்கேள்விகேட்டுக்கொண்டு, அதற்குவிடைசொல்கிறான். கோடிகோடிவருஷங்களாகஆலமரத்தில்உள்ளஅற்புதத்தத்துவங்கள்எல்லாம்பரம்பரையைஒட்டி, விடாமல்வந்திருக்கின்றன. இன்னும்எத்தனையோகோடிவருஷங்கள்தலைமுறைதலைமுறையாகநிற்கவும்போகின்றன. அற்புதத்தில்அற்புதம்என்னவென்றால்எவ்வளவோவிரிந்தும், ஆதிஅந்தம்என்றெல்லாம்இல்லாதஇந்தஆலின்தத்துவம்எல்லாம், தெண்ணீர்க்கயத்தச்சிறுமீன்சினையினும்சிறியதானஒருவித்துக்குள்ளேஅடங்கிக்கிடப்பதுதான்குறள்வடிவமும்அப்படித்தானே. பேரண்டத்திலுள்ளதத்துவங்களையெல்லாம்தன்னுள்அடக்கிக்கொண்டிருந்ததுஅந்தவாமனவடிவம். இத்தனையையும்சொல்கிறான்கம்பன்.
காலம்தனித்துஉணர்
காசிபனுக்கும்
வால்அதிதிக்கும்ஓர்
மாமகவாகி
நீலநிறத்து
நெடுந்தகைவந்துஓர்
ஆல்அமர்வித்தின்
அருங்குறள்ஆனான்
என்பதுபாட்டு, இந்தவாமனன்–குறளன்தோன்றியதலம்தான்குறுங்குடி, குறுகியவடிவினனானவாமனன்பிறந்தகுடியேகுறுங்குடிஎன்றாகிறது. வாமனக்ஷேத்திரம்என்றுபெயர்பெறுகிறது. அக்குறுங்குடியிலேஅழகியநம்பிவந்துகோயில்கொள்கிறான், அந்தத்திருக்குறுங்குடிநம்பிகோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
திருக்குறுங்குடிதிருநெல்வேலிமாவட்டத்திலுள்ளஒருசிறியஊர். திருநெல்வேலிஜங்ஷனுக்குத்தெற்கேபத்தொன்பதுமைல்சென்றால்நாங்குநேரியைச்சேருவோம். நாங்குநேரிஊருக்குள்போகாமல்ஊருக்குவடபுறத்திலேமேற்குநோக்கிச்செல்லும்பாதையில்திரும்பினால்கொஞ்சதூரம்சென்றதும்இரண்டுபாதைகள்பிரியும். அவற்றில்தென்மேற்குநோக்கிச்செல்லும்பாதையேகுறுங்குடிக்குச்செல்லும். நாங்குநேரிவரைநல்லரோடுதான். அதன்பின்அவ்வளவுநல்லரோடுஇருக்காது. திருநெல்வேலிஜங்ஷனிலிருந்துபணகுடிசெல்லும்பஸ்ஒன்றைக்குறுங்குடிவழியேதிருப்பியிருக்கிறார்கள். ஆனதால்பஸ்ஸிலேயேசெல்லலாம். வழியில்உள்ளஏர்வாடி, நம்பித்தலைவன், பட்டயம்என்றஊர்களையும், இடைவரும்நம்பியாற்றையும்கடந்தேகுறுங்குடிசென்றுசேரவேணும்.
தென்புறமாகக்கோயிலைச்சுற்றிகொண்டுவந்தால்நீண்டுஉயர்ந்தமதில்தெரியும். மதிலைஒட்டிதல்லதென்னைவைத்துவளர்த்திருக்கிறார்கள். மலையைஅடுத்தபிரதேசமானதால்நல்லகுளிர்சோலைகளும்இவ்வூரில்நிரம்பியிருக்கும். காரில்போகிறவர்கள்வடக்குமதிலில்உள்ளஒருபாதைவழியாகநுழைந்துகோபுரவாயிலுக்கேசென்றுவிடலாம். மற்றவர்கள்கீழமாடவீதிவந்துகோயிலுள்நுழையலாம். பிரதானவாசலில்கோபுரம்இல்லை. அந்தவாசல்வழிநுழைந்துமட்டைஅடிமண்டபத்தையும்கடந்துவந்தால்ரதிமண்டபம்வந்துசேர்வோம். அந்தமண்டபமேதிருக்குறுங்குடிஜீயர்மடத்தின்முகப்புமண்டபமாகஇருக்கிறது. அங்குசிற்பவடிவங்கள்உள்ளன. ரதி, அர்ச்சுனன், கர்ணன், தடாதகைமுதலியவடிவங்கள்எல்லாம்நல்லகாத்திரமானவை. இவைகள்எல்லாம்நமக்குக்கிருஷ்ணாபுரத்துச்சிற்பங்களைநினைவுபடுத்தும். இந்தமண்டபத்தைஅடுத்துவீதியையும்கடந்தால்கோயிலின்பிரதானகோபுரவாயிலுக்குவருவோம். கற்சுவர்களில்எல்லாம்எண்ணிறந்தசிற்பவடிவங்கள். ஆதலால்இந்தக்கோபுரத்தையேசிற்பகோபுரம்என்பார்கள். இந்தக்கோபுரவாயிலைக்கடந்தால்துவஜஸ்தம்பமண்டபம்வந்துசேருவோம்.
இந்தமண்டபத்தின்வடபுறத்திலேதான்மணவாளமாமுனிகள்சந்நிதிஇருக்கிறது. அந்தச்சந்நிதிக்குமுன்அழகானமண்டபம்ஒன்றுஉண்டு. அங்குள்ளதூண்களில்எல்லாம்அழகுஅழகானசிற்பவடிவங்கள். நரசிம்மனதுகோலம்இரண்டு. வழக்கமாகநாயக்கர்சிற்பத்தில்காணும்குறவன்குறத்திவேறே. அனுமனதுவடிவம்எல்லாம்இருக்கும். நல்லகாத்திரமானவடிவங்கள். நுணுக்கவேலைப்பாடுகள்நிரம்பியவை. ஆனால்இந்தமண்டபத்தில்வௌவால்களும்துரிஞ்சல்களும்ஆக்கிரமித்துக்கொண்டுஅசுத்தம்செய்துவைத்திருக்கும்என்பதையும்தெரிவித்துவிடுகிறேன்.
துவஜஸ்தம்பமண்டபத்தில்ஓர்அதிசயம். அங்குள்ளதுவஜஸ்தம்பம். சந்நிதிக்குஎதிரேஇராது. கொஞ்சம்வடபக்கமாகவிலகிஇருக்கும். இதுஎன்னதிருப்புன்கூரில்நந்திவிலகியமாதிரிஇருக்கிறதேஎன்றுகேட்கத்தோன்றும்நமக்கு. உடனேஅர்ச்சகர்சொல்வார் ‘ஆம், இங்கும்நம்பாடுவான்என்னும்பக்தனுக்காகத்தான்ஸ்தம்பம்விலகியிருக்கிறது‘ என்று. அதுயார்நம்பாடுவான்என்றுதெரிந்தகொண்டேமேலேநடக்கலாம். குறுங்குடியைஅடுத்தமகேந்திரகிரியிலேபாணர்கள்வாழ்கின்றார்கள். இவர்கள்யாழ்வாசிப்பதில்வல்லவர்கள். இவர்களில்ஒருவன்குறுங்குடிநம்பியைக்காணவருகிறான். கார்த்திகைமாதம்சுக்லபக்ஷத்துஏகாதசியன்று. வழியிலேபசியோடிருந்தபிரமராக்ஷஸன்ஒருவன்இவனைப்பிடித்துக்கொள்கிறான். நம்பியைத்தரிசித்துவிட்டுவந்துஅவனுக்குஇரையாவதாகச்சொல்லிவிடைபெற்றுக்கோயில்வாயிலில்நின்றுநம்பியைத்தரிசிக்கமுயல்கிறபோதுகோயிலில்கொடிமரம்மறைக்கிறது. ஆயினும்பக்திசிரத்தையோடுபாடுகிறான். நம்பியும்பாணனுக்குமறைக்காமல்இருக்கக்கொடிமரத்தைநகரச்சொல்கிறார். அதன்படியேஅதுவும்நகர்ந்து, நம்பியைப்பாணன்தரிசிக்கவகைசெய்கிறது. இதனால்மெய்புளகித்தபாணனும்.
எங்ஙனயோஅன்னைமீர்காள்
என்னைமுனிவதுநீர்?
நங்கள்கோலத்திருக்குறுங்குடி
நம்பியைநான்கண்டபின்
தங்கினோடும்நேமியோடும்
தாமரைக்கண்களோடும்
செங்கனிவாயொன்றினோடும்
செல்கின்றதென்நெஞ்சமே.
என்றதிருவாய்மொழிப்பாசுரத்தைகைசிகப்பண்ணில்அமைத்துப்பாடுகிறான். பாட்டைஅவன்பாடப்பாடநம்பியும்மகிழ்ந்துஅவனை ‘நம்பாடுவான்‘ என்றேஅழைக்கிறான். தன்னைப்பாடியநம்பியை ‘நம்மைப்பாடியவன்‘ என்றுநம்பிஅழைத்ததில்வியப்பில்லைதானே! நம்பாடுவான்என்றபாணன்பாட்டைவிரைவாகப்பாடுவதைக்கேட்டநம்பி, காரணம்வினவ, தான்பிரமராக்ஷஸனுக்குக்கொடுத்துவந்தவாக்கைச்சொல்கிறான். நம்பியின்அருளால்பிரமராக்ஷஸனதுபசிநீங்கிவிடுகிறது. அவன்தன்னிடம்வந்தநம்பாடுவானைப்புசிக்கமறுக்கிறான், இடைவந்தநம்பிசமாதானம்செய்து, ஒருபாட்டின்கானபலனைத்தத்தம்செய்யுமாறுநம்பாடுவானிடம்சொல்கிறார். இதனாலேயேஇத்தலத்தில்கைசிகஏகாதசிவிசேஷச்சிறப்பாகநடக்கிறதுஎன்பர். கொடிமரம்நகர்ந்ததற்கும், கைசிகஏகாதசிஏற்பட்டதற்கும்காரணம்தெரிந்துகொண்டுநேரேநம்பியைத்தரிசிக்கச்செல்லலாம். குலசேகரன்மண்டபத்துக்குமுந்தியபத்தியில்ஒருபெரியமணிதொங்குகிறது. அந்தமணியிலேஒருபாடல்பொறித்திருக்கிறது.
செய்துங்கநாட்டுச்சிறைவாய்மன்
ஆதித்தன்தென்வஞ்சியான்
லியலொன்றசிலகலையாளன்
கன்னிவிசாகம்வந்தோன்
நயமொன்றுகொல்லம்அறுநூற்று
நாற்பத்துநாலில்அன்பால்
அயனும்பணியமணியளித்தான்
நம்பிக்குஅன்புகொண்டே
என்பதுபாட்டு, இதிலிருந்துதிருவிதாங்கோட்டுமன்னன்ஒருவன்நம்பியின்பக்தனாய்விளங்கி, இம்மணியைக்கோயிலுக்குஅளித்திருக்கிறான்என்பதைத்தெரிந்துகொள்கிறோம். குலசேகரன்மண்டபத்தில்நின்றேமூலவராய்நின்றஅழகியநம்பியைத்தரிசிக்கலாம். நல்லஅழகானவடிவம். அவரதுமேனி, உள்ளேசிலையும்வெளியேசுதையுமாகஇருக்கிறகோலம். அதனால்தைலக்காப்புத்தான்நடக்கிறது. உபயநாச்சியார், மார்க்கண்டேயர், பிருகு, எல்லாம்உடன்எழுந்தருளியிருக்கிறார்கள். கருவறையைஅடுத்தகட்டில்தான்வைஷ்ணவநம்பிஎன்றஉத்சவர்இருக்கிறார். இவர்பக்கலில்உபயநாச்சியார், நீளாதேவி, குறுங்குடிவல்லித்தாயார்எல்லாம்இருக்கிறார்கள். இவரைவைஷ்ணவநம்பிஎன்பானேன்என்றால்அதுதான்உடையவர்இட்டதாஸ்யநாமம்என்பார்கள். ஸ்ரீபாஷ்யகாரராம்ராமனுஜர்இத்தலத்துக்குவந்தபோதுஇந்தநம்பிஒருசிஷ்யன்போல்வந்துஅவரிடம்பஞ்சசம்ஸ்காரம்செய்துகொண்டுஉபதேசம்பெற்றார்என்பதுவரலாறு. அந்த
குறுங்குடிநரசிம்மன்
ராமானுஜர்இட்டபெயரேவைஷ்ணவநம்பிஎன்பதாகும்.
அழகியநம்பியையும்வைஷ்ணவநம்பியையும்தொழுதுவெளிவந்துபிராகாரத்தைஒருசுற்றுச்சுற்றினால்தென்பக்கத்தில்லக்ஷிமிநரசிம்மனும், ஞானப்பிரானானலக்ஷிமிவராகனும்தனித்தனிக்கோயிலில்இருப்பர். குறுங்குடிவல்லித்தாயாருக்கும்ஒருதனிக்கோயில்உண்டு. மேலப்பிராகாரத்தில்தசாவதாரப்பெருமாள், ஸ்ரீனிவாசன், ஆண்டாள்எல்லாம்காட்சிகொடுப்பர். இவர்களையெல்லாம்தரிசித்துக்கொண்டுவடக்குப்பிராகாரத்தில்நடந்துதெற்கேதிரும்பினாால்அங்குஒருகோயில், அக்கோயிலில்சிவபிரான்லிங்கஉருவில்இருப்பார். இவரையேமகேந்திரகிரிநாதர்என்றும்பக்கம்நின்றபிரான்என்றும்அழைக்கின்றனர்.
இக்கோயிலுள்நடராஜர், சிவகாமி, சோமஸ்கந்தர், சுப்பிரமணியர், பிள்ளையார், எல்லாரும்செப்புச்சிலைவடிவில்குடும்பத்தோடுஎழுந்தருளியிருக்கின்றனர். இவருக்குப்பக்கத்திலேயேகாலபைரவருக்கும்தனிச்சந்நிதியிருக்கிறது. இதுவரைநமதுக்ஷேத்திராடனத்தில்பெரியபெரியசிவன்கோயில்களில்விஷ்ணுஇடம்பிடித்திருப்பதைத்தான்கண்டிருக்கிறோம். இத்தலம்ஒன்றிலேயேபெரியதொருபெருமாள்கோயிலில்சிவனும்பக்கம்நிற்கும்பிரானாகஇருக்கிறார். சைவவைஷ்ணவபேதங்கள்எல்லாவற்றையும்அகற்ற, நம்முன்னோர்கள்எப்படியெல்லாம்முயன்றிருக்கிறார்கள்என்பதைநாம்அறியும்போதுமகிழ்ச்சிஏற்படுகிறதல்லவா? இந்தப்பக்கம்நிற்பவர்பக்கத்திலேயேவீற்றிருந்தநம்பியும், பள்ளிகொண்டநம்பியும்தனித்தனிக்கோயிலில்இருக்கிறார்கள். இவர்கள்பக்கத்தில்பூமியில்அழுத்தப்பெற்றமகாபலியும்இருக்கிறான், தலையைக்கொஞ்சம்பூமிக்குவெளியில்நீட்டிக்கொண்டு. கோயிலுள்நின்றநம்பிஎன்னும்அழகியநம்பி, வைஷ்ணவநம்பி, வீற்றிருந்தநம்பி, பள்ளிகொண்டநம்பியைஎல்லாம்பார்த்துவிட்டோம். இன்னும்கம்பீரமானநம்பிஒருவன்உண்டு, அவன்மலைமீதுஏறிநிற்கிறான். அவனைமலைமேல்நம்பிஎன்பர். அவன்கோயில்கொண்டுள்ளஇடம்இக்கோயிலில்இருந்துஐந்துமைல்தொலைவில்இருக்கிறது. இரண்டுமூன்றுமைல்வரைதான்வண்டிகள்செல்லக்கூடும். அதன்பின்இரண்டுமைல்நடந்தேசெல்லவேணும். அங்கேஏழுஎட்டடிஉயரத்தில்மலைமேல்நம்பிசிலைஉருவில். கம்பீரமானகோலத்தோடுநிற்பான். வசதியும்காலில்சக்தியும்உள்ளவர்கள்இவனையும்தரிசித்துத்திரும்பலாம்.
இவ்வளவுசொல்லிவிட்டீரே, அந்தவாமனனாய்குறுங்குடிக்கேபெயரளித்தகுறுகியவடிவினனதுவடிவைப்பற்றிஒன்றுமேசொல்லவில்லையேஎன்றுநீங்கள்கேட்பதுஎன்காதில்லிழுகிறது. அந்தவாமனர். கோயிலுக்குத்தெற்கேநாலுபர்லாங்குதொலைவில்உள்ளசத்திரத்திலுள்ளசந்நிதியில்இருக்கிறார். ஏன்அவருக்குப்பிரதானகோயிலில்இடம்கொடுக்காமல்ஒதுக்கிவைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நாம்அவரையும்ஒதுக்காமல்அங்கும்சென்றுவணங்கியேவீடுதிரும்பலாம்.
குறுங்குடிநம்பியைப்பெரியாழ்வார், திருமழிசைஆழ்வார், திருமங்கைஆழ்வார், நம்மாழ்வார்நால்வரும்மங்களாசாஸனம்செய்திருக்கிறார்கள். இந்நம்பியின்அனுக்கிரகத்தாலேயேநம்மாழ்வார்திருஅவதாரம்செய்தார்என்பதுவரலாறு. திருவாலித்திருநகரியில்பிறந்துதலங்கள்சென்றுபரந்தாமனைப்பாடிப்பரவியதிருமங்கைமன்னன்இங்குவந்துதான்திருநாட்டுக்குஎழுந்தருளியிருக்கிறார். அவரதுகோயில்வடகிழக்கேஅரைமைல்தூரத்தில்இருக்கிறது.கோயில்அமைப்பு, மண்டபம், சிற்பங்களைஎல்லாம்பார்த்தால்விஜயநகரநாயக்கமன்னர்கள்காலத்தில்இக்கோயில்விரிவடைந்திருக்கவேணும்என்றுதெரிகிறது. திருக்குறுங்குடிஅழகியநம்பிஉலாவில்இருந்துஉதயமார்த்தாண்டர்என்றஅரசர்தம்பெயரால்சமர்ப்பித்தபந்தலின்கீழாக, ராமதேவர்என்பவர்தம்பெயரால்அமைத்ததனிப்பீடத்திலேநம்பிஎழுந்தருளியிருக்கிறார்என்றுஅறிகிறோம். உதயமார்த்தாண்டர்சேரமன்னனாகஇருத்தல்வேண்டும். ஒருதாமிரசாஸனம்மூலம்விஜயநகரத்துஅரசர்களுள்வேங்கடதேவமகாராஜர்என்பவரும்இக்கோயிலில்அரியதிருப்பணிகள்செய்திருக்கிறார்என்றுதெரிகிறது. இவற்றையெல்லாம்ஆராய்ச்சிகளுக்குவிட்டுவிடுவோம். நாம், நம்பாடுவான்பாடியநம்பியைத்தரிசித்துஅதனால்அடையும்இன்பப்பேறுகளைப்பெற்றதிருப்தியோடேயேதிரும்பிவிடுவோம்