கன்னியாகுமரி

கன்னிக்குமரி

தவம்என்பதுஒருவனுடையமனம்முழுவதும்ஒரேநோக்கத்தில்ஈடுபட்டுவேறுஎண்ணங்களுக்குஇடம்கொடுக்காமல்இருப்பதற்காகச்செய்யப்படும்முயற்சி. அந்தமுயற்சியில்இந்திரியஆசைகளைஒடுக்குவதற்கானபலபயிற்சிகள்அடங்கியுள்ளன. அந்தப்பயிற்சிகள்எல்லாவற்றுக்கும், சகிப்புத்தன்மையும்கலங்காதஉள்ளம்உடைமையுமேஅடிப்படை. இந்தச்சகிப்புத்தன்மையில்நிலைத்துநின்றால்தான்ஆன்மசக்திகள்வளர்ந்துதவவலிமையும்ஞானமும்உண்டாகும். அதன்பின்ஒருவன்நாடுகின்றமெய்ப்பொருள்கிட்டும்என்றுதவத்தின்பெருமையைப்பெரியோர்கள்கூறியிருக்கிறார்கள். அன்றுஇமவான்மகளானஉமைகைலையில்உள்ளபரமேச்சுவரனைநோக்கித்தவம்கிடக்கிறாள், அவனையேகாதலனாகஅடைய. அந்தத்தவமகிமையால்அவனையேகணவனாகப்பெறுகிறாள். ஆனால்அவளேஇந்தியநாட்டின்தெற்குக்கோடியில்குமரிமுனையில்நின்றுதவம்செய்கிறாள்.

இந்தத்தவம்மக்களையெல்லாம்உய்விக்கஎன்றுஅறிகிறபோதுநாம்அன்னையின்கருணையைவியக்கிறோம். அன்னைக்கும்அத்தனுக்கும், தலம்தோறும்திருக்கல்யாணம்நடத்தி, அந்தக்கல்யாணக்கோலத்தைஎல்லாம்கண்டுமகிழ்ந்ததமிழன், அன்னையைஒருநல்லதவக்கோலத்திலும்நிறுத்திப்பார்க்கஎண்ணுகிறான். கணவன்மனைவிகுழந்தைகுட்டிகள்என்றுஏற்பட்டுவிட்டால், அன்னைக்குஉலகமக்களைப்பற்றி, அவர்தம்குறைகளைப்பற்றியெல்லாம்கவலைப்படநேரம்ஏது? அவள்கன்னிப்பெண்ணாகஎண்ணியதையெல்லாம்பெறும்தவம்செய்யும்தெய்வமாகஇருந்தால்வேண்டுவனஎல்லாம்கொடுக்கஇயலும்அல்லவா? ஆதலால்தான்அன்னைபகவதிஎன்றும்கன்னியாக, அழகானகுமரியாக, நின்றுதவம்செய்துஅருள்புரிகிறாள். அவள்அப்படிதவம்செய்யும்தலமேகன்னியாகுமரி. அந்தக்குமரிமுனைக்கேசெல்கிறோம்நாம்இன்று.

கன்னியாகுமரிசெல்வதற்கு, திருநெல்வேலிஜங்ஷனில்ரயிலைவிட்டுஇறங்கி, கிட்டதட்டஐம்பத்திரண்டுமைல்காரிலோ, பஸ்ஸிலோபோகவேணும். காரிலேபோனாலும், பஸ்ஸலேபோனாலும், நேரேகுமரிக்குச்செல்லவழியுண்டு. இல்லாவிட்டால்நாகர்கோவில்போய்அங்கிருந்துசெல்லலாம். ஊருக்குவடபுறம்மேடானபிரதேசத்தில்கார்நின்றுவிடும்; அதன்பின்சரிவாகஇறங்கும்பாதைவழியாகத்தான்கன்னிக்குமரியின்கோயிலுக்குச்செல்லவேண்டும்.

நீலத்திரைக்கடல்ஓரத்திலேநின்று

நித்தம்தவம்செய்குமரிஎல்லை

என்றுபாரதிபாடியபாட்டுஅப்போதுஞாபகத்துக்குவரும். தமிழ்நாட்டின், ஏன், இந்தியநாட்டின்தெற்கெல்லையேஇக்குமரிமுனைதானே? ஆதலால்நேரேஅக்குமரிமுனைக்கேசெல்லலாம். அங்குஅரபிக்கடல், வங்காளக்குடாக்கடல், இந்துமகாசமுத்திரம்மூன்றும்சேர்ந்துஅலைவீசிக்கொண்டிருக்கும். சாதாரணநாளானால்அம்முனையில்நின்றேகாலையில்சூரியன்கடலில்இருந்தஎழுகின்றகாட்சியைக்காணலாம். அதுபோலவேமாலையில்சூரியன்கடலில்குளிப்பதைக்கண்டுமகிழலாம்.

நீங்கள்அதிஷ்டக்காரர்களாகஇருந்து, நீங்கள்செல்லும்தினம்பௌர்ணமியாகஇருந்துவிட்டாலோ, சூரியாஸ்தமனத்தையும்சந்திரஉதயத்தையும்ஒரேநேரத்தில்காணும்பேறுபெறலாம். இந்தக்காட்சிகளைக்காண்பதற்கென்றேகன்னியாகுமரிக்குஒருநடைநடக்கலாம். ஆனால்நாமோநமதுக்ஷேத்திராடனத்தில், குமரிமுனையில்இருந்துதவம்செய்யும்பகவதியம்மையைக்கண்டுதரிசிக்கவந்தவர்கள்ஆயிற்றே! ஆதலால்கோயிலைநோக்கியேநடக்கலாம். கோயிலுள்செல்லுமுன்இந்தஅம்மைஇங்குதவம்செய்வதைப்பற்றிநாட்டில்எழுந்திருக்கும்பலகதைகளையும்தெரிந்துகொள்ளலாம்.

ஒருகதை; பரதகண்டத்தைஆண்டஆதிப்பரதமன்னனதுபுதல்வர்எட்டுப்பேர்; ஆனால்குமரிஎன்றுஒரேபுதல்வி. ஏழுஅண்ணன்மாருக்குஒருதங்கைவள்ளிஎன்றால், எட்டுஅண்ணன்மாருக்குஒருதங்கையாகக்குமரிபிறக்கிறாள்; வளர்கிறாள், எட்டுஆண்மக்களுக்கும்ஒருபெண்மகளுக்கும்நாட்டைப்பங்கிட்டுக்கொடுக்கிறான்பரதன், குமரியிலிருந்துஆண்டஇடமேஇன்றையகுமரிமுனைஎன்கிறதுஒருகதை.

அன்னைசெய்யும்தவத்தைக்குறித்தும்ஒருகதை; வசுதேவரையும்தேவகியையும்கம்ஸன்சிறையில்அடைத்துவிடுகிறான். அவர்களுக்குப்பிறக்கும்குழந்தைகளையெல்லாம்கொன்றுதீர்க்கிறான். அப்படிப்பிறக்கும்குழந்தைஒன்றினால்தான்அவனுக்குமரணம்என்றுசோதிடர்கள்கூறிவிடுவதால், ஏழுகுழந்தைகளைஇப்படிப்பறிகொடுத்ததேவகிக்குக்கண்ணன்பிறக்கிறான்சிறையில். வசுதேவருக்குஇந்தப்பிள்ளையைக்காப்பாற்றவேண்டுமென்றுதோன்றுகிறது. இரவோடுஇரவாகயமுனையைக்கடந்து, கோகுலத்தில்யசோதையிடம்கண்ணனைச்சேர்த்துவிடுகிறார். அங்குபிறந்திருந்தபெண்குழந்தையைஎடுத்துவந்துதேவகியின்பக்கத்தில்கிடத்திவிடுகிறார். கம்ஸன்வந்துஇந்தப்பிள்ளையைஎடுத்துச்சென்றுஅதனைக்கொல்லவிழைகிறான். ஆனால்அந்தத்தெய்வக்குழந்தையோஅவனைஇகழ்ந்துஉதைத்துத்தள்ளிவிட்டு, அந்தரத்திலேமறைகிறது. இப்படிமறைந்தகுழந்தையேதிருமாலின்தங்கையானஎல்லாம்வல்லசக்தி. அந்தசக்தியேபகவதிஎன்னும்திருநாமத்தோடுஇந்தக்கடற்கரையில்கையில்இலுப்பைப்பூமாலைதாங்கிச்சிவபெருமானைநோக்கித்தவம்செய்கிறாள். என்றும்கன்னியாக, குமரியாகநின்றுதவம்செய்யும்பகவதியைத்தான்இன்றுகுமரிஎன்றுவந்தித்துவணங்குகிறோம்நாம்.

இவற்றையெல்லாம்தூக்கியடிக்கும்வேறொருகதையும்உண்டு. பகன், மூகன்என்றுஇரண்டுஅசுரர்கள்தேவர்களுக்குஇடுக்கண்செய்கிறார்கள். தேவர்கள்முறையிடஇறைவன்தன்னுடையசக்தியைஇருகூறாக்கிஇரண்டுபெண்தெய்வங்களாகஉருவாக்குகிறார். இந்தச்சக்தியில்ஒன்றேவடகோடியில்கங்கைக்

கன்னிக்குமரி

கரையில்காளியாகவும், மற்றொன்றுதென்கோடியில்கடற்கரையில்குமரியாகவும்நின்றுநம்மைக்காக்கிறார்கள். பகனுடனும்மூகனுடனும்போர்புரிந்துவெல்கிறார்கள். தேவர்கள்இடுக்கண்தீர்கிறார்கள். புரட்டாசிமாதம்சிவராத்திரிஉற்சவத்தில்அம்மை, உச்சைசிரவஸ்என்னும்அமராபதியின்அசுவத்தில்அமர்ந்துபோர்க்களம்செல்வதைஅம்புசாத்தல்என்றபெயரோடுவிழாநடத்துகிறார்கள்.

இக்கதைகள்எல்லாம்எப்படியும்இருக்கட்டும். அன்னைபகவதிகுமரிமுனையில்நின்றுதவம்செய்துஅதனால்தவவலிமைபெறுவதுமக்களைஉய்விக்கவேஎன்றஎண்ணத்தோடேயேகோயிலுள்நுழையலாம். கோயில்மிகவும்பெரியகோயிலும்அல்ல; சிறியகோயிலும்அல்ல. கடல்ஓரமாகஉள்ளபெருவெளியில்நான்குபுறமும்மதில்அமைத்துக்கோயில்கட்டியிருக்கிறார்கள். கோயிலின்பிரதானவாயில்வடபக்கம்இருக்கிறது. முதலில்ஒருபெரியபிராகாரம்உண்டு. அதைஅடுத்தேதுவஜஸ்தம்பம், பலிபீடம்முதலியனஇருக்கின்றன. பகவதிஅம்மைதினமும்இப்பிராகாரத்தைச்சுற்றிவருவாள். இந்தப்பிராகாரத்தைஒட்டியேஊஞ்சல்மண்டபம்இருக்கிறது. இதற்குள்ளேஉள்ளஅடுத்தபிராகாரம்தான்உள்பிராகாரம்; அங்கேமணிமண்டபமும், சபாமண்டபமும்இருக்கின்றன. மணிமண்டபத்தைஆறுவட்டத்தூண்கள்தாங்கிநிற்கின்றன. மண்டபத்துச்சுவரின்மேல்வரிசையில்புராணச்சிற்பங்கள்நிறைந்திருக்கின்றன. மண்டபத்தின்மேற்புறத்தில்ஓவியங்கள்காணப்படுகின்றன. இதற்கும்மேலேஉள்ளஉள்மண்டபத்தில்தான்கன்னிக்குமரிதவக்கோலத்தில்நிற்கிறாள், கிழக்குநோக்கிநின்றகோலத்தில். இவள்கிரீடத்தில்பிறைச்சந்திரன்ஒளிதருகிறான். இவள்அணிந்திருக்கும்அணிகளில்வைரமூக்குத்திமிகமிகப்பிரகாசமானது. கடலில்பிரயாணம்செய்பவர்க்குக்கலங்கரைவிளக்குப்போல்ஒளிதரும்என்றுஉபசாரமாகக்கூறுவதும்உண்டு. வலக்கையில்மாலைதாங்கி, இடக்கையைத்தொடையில்பொருத்திநிற்கிறஎழில்சொல்லும்திறத்ததுஅன்று. அம்மையைக்கண்குளிரத்தரிசித்துவிட்டுதிரும்பும்போதுநம்முடையஉள்ளம்நிறைவுபெறும்; உடல்புளகிக்கும்.

இவளதுஅழகைஅறிந்தஅந்தச்சுசீந்திரத்தில்உள்ளதாணுமாலயன், இவளைமணம்செய்துகொள்ளவிரும்புகிறார். அதற்காகதேவர்களைக்கூட்டிதம்விருப்பத்தைவெளியிடுகிறார். தேவர்கள்எல்லாம்வந்துகூடியஇடமேசுசீந்திரத்தில்கன்னியம்பலம்என்றுவழங்குகிறது. தாணுமாலயன்விருப்பம்அறிந்ததேவர்கள்மனம்கலங்குகிறார்கள். கன்னிக்குமரிதிருமணம்செய்துகொண்டால்அவள்தவம்பழுதாகிவிடுமே, பின்னர்அசுரர்களைஅழிக்கமுடியாதேஎன்றுவருந்துகின்றனர். இந்தச்சமயத்தில்நாரதர்வந்து, தேவர்களையெல்லாம்சமாதானம்செய்து. தாமேதிருமணத்தைமுன்னின்றுசெய்துவைப்பதாகச்சொல்கிறார். அவர்தாணுமாலயனிடம், கல்யாணத்துக்குஇரண்டுநிபந்தனைகள்விதிக்கிறார். ஒன்று, கண்ணில்லாத்தேங்காய், காம்பில்லாமாங்காய், நரம்பில்லாவெற்றிலை, கணுஇல்லாக்கரும்பு, இதழ்இல்லாபுஷ்பம்இவற்றைச்சீதனப்பொருள்களாகக்கொண்டுவரவேண்டும்என்பது. இரண்டாவது, திருமணமுகூர்த்தம்சூரியஉதயத்தில்; அதற்குஒருநாழிகைமுன்னமேயேமணமகன்மணவறைக்குவந்துவிடவேண்டும்என்பது. மணமகனானதாணுமாலயன்இதற்கெல்லாம்அஞ்சாமல்கேட்டபொருள்களையெல்லாம்வண்டிவண்டியாஅனுப்பிவைக்கிறார். இடையில்உள்ளஐந்துமைல்தூரத்தைக்கடக்கஅர்த்தராத்திரியேபுறப்பட்டுவிடுகிறார். நாரதர்பார்க்கிறார். உடனேசேவல்உருவெடுத்துசூரியஉதயத்தைஅறிவிக்கும்உதயராகத்தைக்கொக்கரக்கோஎன்றுகூவிஅறிவித்துவிடுகிறார். முகூர்த்தநேரம்தவறிவிட்டது. தாம்வழுக்கிவிட்டோம்என்றஅவமானத்தோடேயேதாணுமாலயன்மேற்செல்லாமல்சுசீந்திரத்துக்குத்திரும்பிவிடுகிறார்; இப்படிஇவர்திரும்பியஇடமேஇன்றும்வழுக்குப்பாறைஎனவழங்குகிறது.

சுசீந்திரத்துக்குக்கிழக்கேஒருமைலில்இந்தவழுக்குப்பாறைஇருக்கிறது. இதில்சேவற்கோழியின்கால்தடமும், தாணுமாலயனதுதிருவடித்தடமும்காணப்படுகின்றனஎன்பர். இப்படிபகவதிதாணுமாலயன்திருமணம்தடைப்பட்டுவிடுகிறது. அன்னைபகவதியின்தவம்தொடர்ந்துநடக்கிறது. அவளுக்குவந்தபரிசுப்பொருள்களானபொன்னும்மணியும், நெல்லும்கரும்புமேஇன்றுகுமரிக்கரையில்பலநிறமணல்களாகவும்பலகுன்றுகளாகவும்பரந்துகிடக்கின்றனஎன்றுகூறுவார்கள்.கன்னிக்குமரியைத்தமிழ்இலக்கியங்கள்எல்லாம்பலபடக்கூறும். நெடியோன்குன்றம்தமிழ்நாட்டின்வடஎல்லைஎன்றால்தொடியோள்பௌவம்தமிழ்நாட்டின்தெற்கெல்லைஎன்றுசிலப்பதிகாரம்கூறுகிறது. பஞ்சநாரிதீர்த்தங்களில்கன்னியாகுமரிகன்னிதீர்த்தம்என்னும்சிறப்புப்பெற்றது; ‘குரங்குசெய்கடல்குமரியம்பெருந்துறை’ என்றுமணிமேகலைகூறுவதால்ராமர்கட்டியசேது. இவ்வளவுதூரம்பரவிஇருந்ததோஎன்றுஎண்ணவேண்டியிருக்கிறது. வடநாட்டிலிருந்துபலர்தென்திசைக்குமரியாடவருவார்என்பதும்இலக்கியங்கள்மூலம்அறிகிறோம். ஆதியில்பாண்டியனிடமேஇக்குமரித்துறைஇருந்திருக்கிறது. குமரித்துறைவன்என்றேஅவன்அழைக்கப்பட்டிருக்கிறான். அதன்பின்னரேசோழர்சேரர்ஆதிக்கம்இங்குபரவியிருக்கிறது. குமரிக்குத்தெற்கேஒருபெரியநிலப்பரப்புஇருந்ததென்றும்அதுவேகுமரிக்கண்டம்என்றும்சரித்திரஆராய்ச்சியாளர்கருதுகின்றனர். நாம்வந்ததுஆராய்ச்சிசெய்யஅல்ல, அன்னைபகவதியைக்கண்டுதரிசிக்க. தரிசிக்குமுன்பேகுமரித்துறையாடி, நம்பாவச்சுமைகளைக்களைந்துவிட்டஅன்னையின்அருள்பெற்றுவீடுதிரும்புவோம். அதுபோதும்நமக்கு.