திருவலத்து வல்லநாதர்
இறைவனைத்தேடிமனிதன்செல்கிறானா, இல்லைமனிதனைத்தேடிஇறைவன்வருகிறானாஎன்றுஒருகேள்வி. உண்மைதான். நம்நாட்டில்தோன்றியஅடியார்கள்பலரும்இறைவனைத்தேடிஓடிஇருக்கிறார்கள். அவன்பாதங்களைக்கட்டிப்பிடித்து, ‘சிக்கெனப்பிடித்தேன்: எங்கெழுந்தருளுவதினியே‘ – என்றுகதறியிருக்கிறார்கள்.
இதைப்போலவேஇறைவனும்தன்னிடமிருந்துவிலகி, பொன்னையும், பொருளையும், மண்ணையும், பெண்ணையும், மக்களையும்மனையையும்நினைத்துஓடிக்கொண்டிருக்கும்மனிதனை, சரிஅவன்அப்படியேபோகட்டும்என்றுவிட்டுவிடுகிறானா? இல்லை. அப்படிவிலகிவிலகிஓடும்மனிதனையும்தொடர்ந்தேஓடிவந்துஅவனுக்கும்அருள்புரிபவனாகஇருக்கிறான்இறைவன். அப்படித்தானேபாடினான்பிரான்ஸிஸ், தாம்ஸன்என்றஅறிஞன், ‘அருள்வேட்டை‘ என்றபாடலிலே. இறைவன்தன்னைவிட்டுவிலகிஓடும்மனிதனைவேட்டைநாயுருவில்துரத்திவந்துபிடித்துஅருள்புரிகிறான்என்பதுதானேஅவனதுகற்பனை. இதேகற்பனையைஇந்ததாம்ஸனுக்குஆயிரத்துமுந்நூறுவருஷங்களுக்குமுன்னேதமிழ்நாட்டில்தோன்றியஅப்பர்பெருமான்,
சொல்லாதனஎல்லாம்சொல்லி
அடியேனைஆளாக்கொண்டு
பொல்லாஎன்நோய்தீர்த்தபுனிதன்
என்றுதானேபூந்துருத்திபுஷ்பவனநாதரைப்பாராட்டிப்பாடியிருக்கிறார். இந்தச்செய்தி, வரலாறுஎல்லாம்எனக்குவடஆர்க்காட்டில்உள்ளதிருவலம்என்னும்தலத்திற்குச்சென்றிருந்தபோதுஞாபகத்துக்குவந்தது. அத்தலத்தைப்பற்றியவரலாறுஇதுதான்:
அன்றொருநாள்நாரதர்ஒருகனியைக்கொண்டுவந்துசிவபிரானிடம்கொடுக்கிறார். அந்தச்சமயத்தில்உமையுடன்புதல்வர்இருவருமேவருகிறார்கள். இருப்பதுஒருகனி. அதையாருக்குக்கொடுப்பதுஎன்பதுபிரச்சனைஇப்போது.
இப்பிரச்சனைக்குமுடிவுகாணசிவபெருமான்மக்களுக்குள்ளேஒருபோட்டியைஏற்படுத்துகிறார். இந்தஅகண்டஅண்டம்முழுவதையும்யார்முதலில்சுற்றிவருகிறார்களோ, அவர்களேகனியைப்பெறுவார்கள்என்றுதெரிவிக்கிறார். சரிஎன்றுபோட்டியில்முனைகிறார்கள்இருவரும். முருகன்நினைக்கிறான், வெற்றிநமக்குத்தான்என்று. தன்மயில்மீதுஏறிக்கொண்டுககனவீதியில்புறப்பட்டுவிடுகிறான்.
ஆனால்மூத்தபிள்ளைபிள்ளையாரோதன்வாகனமானமூஞ்சூறுவைக்கூடத்தேடவில்லை. விறுவிறுஎன்றுதன்அன்னையையும்அத்தனையுமேஒருசுற்றுச்சுற்றிவருகிறார். கனிக்குகையைநீட்டுகிறார். ‘என்னடா? அண்டங்களைஎல்லாம்சுற்றியாகிவிட்டதா?’ என்றுதந்தைகேட்கிறார். இதற்குச்சளைக்கவில்லைஅந்தப்பிள்ளையார். ‘அண்டங்கள்எல்லாம்தோன்றிநின்றுஒடுங்குவதுஉங்களிடம்தானே! உங்களைச்சுற்றிவந்தால்இந்தஅண்டங்களையேசுற்றியதாகாதோ?’ என்றுஎதிர்வாதம்செய்கிறார்.
அத்தனும்வேறுவழியில்லாமல்கனியைஅந்தமூத்தபிள்ளையிடமேகொடுத்துவிடுகிறார். ஆனால்ஓடிஆடிஅண்டங்களைஎல்லாம்சுற்றிவந்துமுருகன்ஏமாந்துபோகிறார். அதனாலேயேகோபித்துக்கொண்டுஆண்டிவேடத்தில்போய்விடுகிறார். சரிஇந்தமுருகன்சென்றுநிற்கிறஇடம்பழநிஎன்பதைஅறிவோம். அன்றுவெற்றிபெற்றவிநாயகர்எங்கிருக்கிறார்என்றுகேட்கத்தோன்றுமல்லவா. இதற்குதமிழ்நாட்டில்உள்ளதலவரலாறுகள்எல்லாம்உதவிசெய்யவில்லை.
கொம்பனையவன்னி
கொழுநன்குறுகமே
வம்புனையமாங்கனியை
நாறையூர் – நம்பனையே
தன்னைவலம்செய்துகொளும்
தாழ்தடக்கையான்
என்றுநம்பியாண்டார்நம்பிபாடுவதால்இக்கதைநித்யத்வம்பெற்றுவிடுகிறது. இப்படிஆராய்ச்சியில்ஈடுபட்டிருக்கும்போதுதான்நான்அந்தத்திருவலம்என்னும்தலத்திற்குச்சென்றேன். அங்குவலம்வந்தவிநாயகரைக்கண்டேன். அங்குள்ளமக்கள், அன்றுஇறைவனைவலம்வந்தவிநாயகர்அங்குதங்கியிருப்பதால்தானே, அத்தலத்திற்கேதிருவலம்என்றுபெயர்வந்திருக்கிறதுஎன்றுகூறுவதையும்கேட்டேன்.
இப்படிவிநாயகரேஇறைவனைத்தேடி, அவரைவலம்வந்துஅருள்பெற்றதலம்தான்திருவலம்என்றுஎண்ணிக்கொண்டேமேலும்நடந்தபோதுஅந்தக் – கோயில்வாயிலில்உள்ளநந்திமற்றகோயில்களில்இருப்பதைப்போலஇறைவனைநோக்கிநிற்காமல்அவர்இருக்கும்திசையைவிட்டுத்திரும்பிகிழக்குநோக்கிஓடுங்கோலத்தில்இருப்பதையும்கண்டேன்.
தலவரலாற்றைப்புரட்டினால்ஏதோகஞ்சாசுரனைவிரட்டிக்கொண்டுஓடுகிறது. நந்திஎன்றுகதைசொன்னாலும்எனக்கென்னவோபசுவாகியஉயிரின்பதியாகியஇறைவனைவிட்டுவிலகிஓடும்நிலையைத்தான்இந்தநந்திகுறிப்பிடுகிறதுஎன்றுநினைக்கத்தோன்றுகிறது. ஆம், தாம்ஸன், அப்பர்போன்றவர்கள்எல்லாம்விளக்கியஉண்மைக்கேஉருவம்கொடுத்துநிறுத்தியதுபோல்இருந்தது.
இந்தத்திருவலம்ஒருசிற்றூர். சென்னையிலிருந்துபெங்களூர்செல்லும்பெருவழியில், சென்னையிலிருந்து – எழுபத்திஐந்துமைல்தூரத்தில்இருக்கிறது. ஊரைஅடுத்துபொன்னைஎன்னும்நீவாநதிஓடுகிறது. அந்தஆற்றைக்கடக்கஒருபெரியபாலம்ஒன்றும்கட்டியிருக்கிறார்கள். இந்தப்பாலம்முழுவதும்உருக்குச்சட்டத்தால்கட்டிஈயவெள்ளைவர்ணமும்அடித்திருப்பதால்சினிமாப்படம்பிடிப்பவர்களுக்குவசதியாகஇருக்கிறது.
பலபடங்களில்இப்பாலத்தைப் : பார்த்துக் – களித்திருக்கிறோம். இந்தப்பாலத்தைப்படம்பிடித்தகலைஞர்கள்எல்லாம்பாலத்தோடுநின்றுவிட்டார்களேஒழிய, அதற்குமேலும்நடந்துபாலத்திற்குமேற்கேஒன்றிரண்டுபர்லாங்குதூரத்தில்இருக்கும்கோயிலுக்குச்சென்றதாகத்தெரியவில்லை. 1958 – ல்நான்கோயிலுக்குச்சென்றிருந்தபோது, அங்குபலபாகங்களில்புதர்மண்டிக்கிடந்தது. பலபாகங்கள்இருட்டடித்தும்கிடந்தது. நாலுவருஷம்கழித்துநான்அங்குசென்றிருந்தபோது, கோயில்புத்தம்புதிதாய்கட்டியதுபோல்புதுமையுற்றுத்திகழ்கிறது.
இவ்வளவுசிறப்பாகஇத்திருப்பணியைச்செய்தவர்யார்என்றுவிசாரித்தபோது, அங்குள்ளஅன்பர்கள், என்னைகோவில்பக்கத்தில்உள்ளஒருதோட்டத்திற்குஅழைத்துச்சென்றார்கள். அங்குராஜராஜேஸ்வரிக்கும்ஒருசிறுகோயில்கட்டப்பட்டிருக்கிறது. அக்கோயில்பக்கத்தில்ஒருசிறுகுடிலில்ஒருசாமியார்இருந்தார். அவர்கௌபீனம்ஒன்றைமட்டும்கட்டிக்கொண்டுஉட்கார்ந்திருந்தார். அவரதுபக்கத்தில்வில்வஇலைகள்குவித்துவைக்கப்பட்டிருந்தன. இன்னும்ஓர்உடைந்தசட்டியில்திருநீறும்இருந்தது. எண்ணற்றமக்கள்அங்குகுழுமியிருந்தனர்.
எல்லோரும்அங்குள்ளசாமியார்திருவடிகளில்விழுந்துவணங்கிக்கொண்டிருந்தனர். விழுந்தவர்களுக்குஎல்லாம்கொஞ்சம்வில்வதளமும்விபூதியும்எடுத்துக்கொடுத்துக்கொண்டேஇருக்கிறார்அவர்களும்ஒருநயாபைசாமுதல்அவர்களால்எவ்வளவுஇயலுமோஅவ்வளவுவைத்துவணங்கிக்கொண்டிருந்தனர். அப்படிவணங்கிவில்வதளம்பெற்றுச்செல்பவர்களுக்குஎல்லாம்அவர்களைப்பீடித்திருந்தவியாதிநீங்குகிறது. இப்படிதீராதநோய்தீர்த்தருளவல்லானாகஅச்சாமியார்அந்தத்திருவலம்என்னும்தலத்தில்வாழ்கிறார். பைசாபைசாவாகஅவர்சேர்த்ததொகையைவைத்தேஇக்கோயில்திருப்பணிநிறைவேறிஇருக்கிறது. .
இன்றுவரைஐம்பதினாயிரத்திற்கும்மேல்திருப்பணிக்குச்செலவாகியிருக்கிறது, என்றுஅறிந்தபோதுஅப்படியேமெய்சிலிர்த்தது. வல்லநாதர்இப்படிஒருசாமியார்வடிவில்அல்லவாமக்களைத்தொடர்ந்துவந்துஅருள்புரிகிறார்என்றுஎண்ணத்தோன்றுகிறது. சாமியாரோமௌனி. அவரைசிவானந்தமௌனசுவாமிகள்என்றுமக்கள்அழைக்கிறார்கள்.
கோயில்பிராகாரம், கோபுரம், பாண்டங்கள்எல்லாம்நன்றாய்வர்ணம்தீட்டப்பட்டிருக்கின்றன. மின்சாரவிளக்குகள்போடப்பட்டிருக்கின்றன. கோயிலுள்நுழைகிறபோதே, உள்ளத்தில்ஓர்எழுச்சிஉண்டாகிறது.
முன்வாசல்கோபுரம்தெற்குநோக்கியவாசலில்இருக்கிறது. அதைக்கடந்துகொஞ்சம்தாழ்ந்தஇடத்தில்இறங்கியேகோயிலுக்குள்செல்லவேணும். அந்தப்பாதையிலேயேவலப்பக்கம்ஒருசிறுகுளம். இடப்பக்கம்தான்புதிதாகக்கட்டப்பட்டராஜராஜேஸ்வரியின்சந்நிதி, அங்கெல்லாம்வணக்கம்செலுத்திவிட்டே. இடைநிலைக்கோபுரத்தைக்கடந்துகோயிலுக்குள்செல்லவேணும்.
அங்குவலப்புறத்திலேதான்வலம்வந்தவிநாயகர்கோயில்கொண்டிருக்கிறார். அவரைவரசித்திவிநாயகர்என்றேஅழைக்கின்றனர். அவரைவணங்கிவிட்டேமேற்புறமாகநகரவேணும். அந்தமேல்பிராகாரத்தில்தான்ஒருசிறுகோயிலும்பக்கத்தில்வில்வமரமும்இருக்கிறது. இந்தவில்வமரத்தழைகள்தான்இன்றுசிவானந்தமௌனசாமியின்பிரசாதமாகமாறிக்கொண்டிருக்கிறது. இங்குள்ளகோயிலிலேதான்ஆதிவில்வவரைநாதர்கோயில்கொண்டிருக்கிறார். இவர்சந்நிதியிலேபவளமல்லிகைஒன்றுபூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கிறது.
இன்னும்இதேசந்நிதியில்பெரியகோயிலைஒட்டிஒருபலq. பலாவில்இரண்டுவகை. ஒன்றுவேரிலேயே! பழங்களைஉதிர்க்கும். மற்றொன்றுகிளைகளில்பழங்களைத்தரும். இந்தப்பலாகிளைகளிலும்வேரிலுமேபழங்களைக்காய்த்துக்கொண்டிருக்கிறது. பழம்என்றால்ஒன்றிரண்டுஅல்ல. ஏதோகொடிமுந்திரிப்பழம்போலகொத்துகொத்தாய், பலாப்பழங்களைஏந்திநிற்கிறது. எண்ணற்றபழங்கள்இருப்பதால்எல்லாம்சிறியஅளவிலேயேஇருக்கின்றன.
இங்குள்ளவில்வநாதர்சந்நிதிக்குமேற்பக்கம்தான்நூற்றுக்கால்மண்டபம், அதற்குவடபுறமேவல்லாம்பிகைகோயில். இங்குள்ளவல்லாம்பிகையேதனுஷ்மத்ஸ்யாம்பாள்என்கின்றனர். அந்தவல்லாம்பிகையையும்வணங்கிவிட்டுபாதாளகோயிலைவலம்வந்துகீழ்புறம்உள்ளவாயில்வழியாகநுழைந்துதான்வல்லநாதரைதரிசிக்கவேணும்! இந்தவாயிலிலேதான்நந்திகிழக்குநோக்கியவண்ணம்படுத்திருக்கிறது. கருவறையிலேவல்லநாதர்லிங்கவடிவிலேகோயில்கொண்டிருக்கிறார். இவரையேநற்றமிழ்வல்லஞானசம்பந்தர்பாடியிருக்கிறார்.
சார்ந்தவர்க்கின்பங்கள்
தழைக்கும்வண்ணம்
சேர்ந்தவன், நேரிழை
யோடும்கூடி
தேர்ந்தவர்தேடுவார்
தேடச்செய்தே
சேர்ந்தவன்உறைவிடம்
திருவல்லமே!
என்பதுசம்பந்தர்தேவாரம். இன்றுசார்ந்தவர்துன்பங்கள்துடைத்துஇன்பங்கள்தழைக்கும்ஆற்றலோடுவிளங்கும்ஒருமுனிவரும்தங்கும்தலமாகஇருக்கிறதுஇத்திருவலம். இக்கோயில்திருப்பணிஇப்போதுமுடிவுபெற்றிருக்கிறது. இத்திருப்பணியைச்செய்தவர்கள்பிரபலபணக்காரர்கள்அல்ல. அந்தவட்டாரத்தில்மிகசெல்வாக்குஉடையவர்களும்அல்ல.
ஓர்ஏழைப்பரதேசி, வல்லநாதர்என்னும்வில்வாரண்யராம்சித்புருஷராகவாழ்கிறார். பலரதுநோயைத்தீர்க்கிறார். அதன்மூலம்பைசாபைசாவாகபணம்திரட்டி, ஒருபெரியதிருப்பணியையேமுடித்திருக்கிறார்என்றால்அதுஎவ்வளவுசிறப்புடையதாகிறது. வல்லநாதருக்குத்தெரியாதாதனக்குவேண்டியதைத்தானேதேடிக்கொள்ள. ஆம், எவ்வளவுதான்அவரைவிட்டுவிலகிஓடினாலும்நம்மைத்தொடர்ந்துவந்துஅருளுகிறவர்ஆயிற்றே!
நினையாதநெஞ்சைநினைப்பித்து, கல்லாததைக்கற்பித்து, காணாததைக்காட்டி, சொல்லாதனஎல்லாம்சொல்லித்தொடர்ந்துவந்துஅடியவர்களைஆட்கொள்ளுபவராகஅல்லவாவிளங்குகிறார்? வசதிஉடையவர்கள்எல்லாம்சென்றுவணங்கிவல்லநாதர்அருள்பெறுமாறுவேண்டிக்கொண்டுநான்நின்றுகொள்கிறேன்.