திருமலைமுருகன்
இன்றுதமிழ்நாட்டில்பலகோயில்திருப்பணிகள்ஏராளமாகநடக்கின்றன. சமீபத்தில்மதுரைமீனாக்ஷிகோயிலில்இருபத்திஐந்துலக்ஷம்ரூபாய்செலவில்திருப்பணிநடந்தது. குடமுழுக்கும்நடந்தது. அதைப்பற்றியும்அப்பணியில்ஈடுபட்டபெருமக்களைப்பற்றியும்விரிவாகப்பலர்பேசுகிறார்கள்.
இந்தத்திருப்பணிக்கேஇத்தனைமகத்துவம்என்றால், ஒருகோயிலையேகட்டியவர்களைகோயிலில்வைத்தேகும்பிடலாம்போல்இருக்கிறது. பல்லவமன்னன்ராஜசிம்மன்காஞ்சியில்கைலாசநாதருக்குஒருகலைக்கோயிலைக்கட்டியிருக்கிறான். தஞ்சையில்ராஜராஜசோழன்பெருஉடையாருக்குஒருபெரியகோயிலையேகட்டியிருக்கிறான். மதுரைமீனாக்ஷிகோயிலின்பெரும்பகுதியைதிருமலைநாயக்கரேகட்டியிருக்கிறார்என்றெல்லாம்சரித்திரஏடுகள்பேசுகின்றன.
ஆனால், ஒருகோயிலுக்குத்திருப்பணிசெய்ததும், அக்கோயில்நிர்வாகங்கள்எல்லாம்சரிவரநடைபெறநூற்றைம்பதுகோட்டைவிரைப்பாடும், தோப்பும், நிலமும்தேடிவைத்ததுஒருசாதாரணப்பெண்பிள்ளைஎன்றுஅறிகிறபோதுநாம்அப்படியேஅசந்துவிடுகிறோம். அப்படிஒருதிருப்பணிசெய்தவர்தான்சிவகாமிஆத்தாள்என்னும்மறவர்குலப்பெண். அத்திருப்பணி. நடந்ததலம்தான்செங்கோட்டையைஅடுத்ததிருமலைமுருகன்கோயில்.
இனிஇக்கோயில்உருவானவரலாற்றையும், அங்குதிருமலைமுருகன்கோயில்கொண்டதிறத்தையும், அக்கோயிலுக்குசிவகாமிஆத்தாள்செய்தசேவையையும்பற்றித்தெரிந்துகொள்ளலாம்தானே.
திருமலைஒருசிறியமலைதான். அந்தமலையிலே. ஒருசுனைஇருக்கிறது. அதனைப்பூஞ்சுனைஎன்கின்றனர். அச்சுனையின்கரையிலேஒருபுளியமரம்இருக்கிறது. அதனைஅடுத்துசப்தகன்னிமார்கோயில், ஒன்றும்இருக்கிறது. அக்கோயில்அர்ச்சகர்ஒருவர்பூசையைமுடித்துவிட்டுப்புளியமரத்தடியில்வந்துஇளைப்பாறுகிறார். அங்குதலையைச்சாய்த்தவர்தூங்கிவிடுகிறார். அவரதுகனவில்முருகன்தோன்றி, இந்தமலைக்குவடபக்கம்ஓடும்அனுமன்நதிக்கரையில்கோட்டைமேடுஎன்றஇடத்தில்நாம்மண்ணுள்புதையுண்டுகிடக்கிறோம். நம்மைஎடுத்துவந்துமலைமீதுபிரதிஷ்டைபண்ணினால், உங்கள்அரசனதுபிணீதீரும்என்கிறார். இச்செய்தியைஅர்ச்சகர்அரசனிடம்தெரிவிக்கிறார். குறிப்பிட்டஇடத்தில்இருந்தமூர்த்தியைஎடுத்துவந்துபிரதிஷ்டைசெய்கிறான்அரசன். ஆதியில்வேலும்மயிலும்கொண்டகற்சிலையாகத்தான்முருகன்இருந்திருக்கிறான், அதனையேஅர்ச்சகர்கனவுகண்டபுளியமரத்தடியில்பிரதிஷ்டைசெய்துவைத்திருக்கிறார்கள். அதனையேஉத்தண்டவேலாயுதம் – ஆதிமூலநிலையம்என்றுஇன்றும்அழைக்கிறார்கள்.
பலவருஷங்கள்கழிகின்றன. நெடுவேலிஎன்றகிராமத்தில்மறவர்குலத்தில்ஒருபெண்பிறக்கிறாள். அவளுக்குச்சிவகாமிஎன்றுபெயர்சூட்டப்படுகிறது. நாளும்வளர்ந்துமங்கைப்பருவம்அடைகிறாள்.
அவளைக்கங்கைமுத்துத்தேவர்என்பவர்மணக்கிறார். அவளுக்கோமுருகனிடத்தில்அபாரபக்தி. ஆதலால், துறவறம்பூண்டுசெவ்வியநெறியிலேவாழ்கிறாள். தன்கணவன்இறந்தபின்தன்சொத்துஅத்தனையையும்திருமலைமுருகனுக்கேசாஸனம்செய்துகொடுத்துவிடுகிறாள். அவள்தான்இக்கோயிலைக்கட்டமுனைந்திருக்கிறாள். மலையடிவாரத்தில்உள்ளவண்டாடும்பொட்டல்என்றஇடத்திலேஒருசத்திரம்அமைத்து, அதில்இருந்துமலைக்குவருபவர்களுக்குஆகாரமும்நீர்மோரும்கொடுத்திருக்கிறாள். மலைமேல்செல்கிறவர்கள்கையில்ஆளுக்குஒருசெங்கல்லும், ஒருஓலைப்பெட்டியில்கொஞ்சம்சுண்ணாம்பும்கொடுத்துமலைமீதுஎடுத்துச்செல்லச்சொல்லியிருக்கிறாள்.
இந்தவிதமாகவேசெங்கல்லும்சுண்ணாம்பும்மலைமீதுவந்துகுவிந்து, கோயில்உருவாகியிருக்கிறது – (இன்றும்மலைமேல்நடக்கும்திருப்பணிக்குச்செங்கல்லைஆண்களும்பெண்களும்சுமந்துசெல்கிறார்கள். நூறுசெங்கற்கள்கொண்டுசெல்லஆறுதடவைமலைஏறவேண்டியிருக்கிறது. அதற்குக்கூலிரூ 1.25 என்கிறார்கள். ஆம். அன்றுமதுரையில்உள்ளசொக்கலிங்கம்பிட்டுக்குமண்சுமந்தார். இன்றோநம்மக்கள்துட்டுக்குமண்சுமக்கிறார்கள்!)
இப்படித்தான்திருமலைக்குமரன்கோயில்சிவகாமிஆத்தாளால்முதலில்உருவாகியிருக்கிறது. அவள்கனவில்முருகன்தோன்றி, தனக்குச்சேரவேண்டியசொத்தும்அதற்குரியசாஸனமும்எங்கேபுதைந்துகிடக்கிறதுஎன்பதையும்சொல்லிஇருக்கிறான். அதைக்கண்டெடுத்து, அந்தசொத்தைவைத்திருந்தவருடன்வழக்காடிகிட்டத்தட்ட 150 கோட்டைநன்செய்நிலங்களையும், தோப்புமுதலியவைகளையும்கோயிலுக்குச்சேர்த்திருக்கிறாள்இந்தஅம்மையார். இப்படிஇந்தஅம்மையார்செய்தகைங்கரியத்தினால்தான்திருமலைமுருகன், இம்மலைமீதுநிலைபெற்றிருக்கிறான்என்றுஅறிகிறபோதுநாம்பூரித்துவிடுகிறோம்.
இத்திருமலைமுருகனைக்காணநாம்நேரேசெங்கோட்டைஸ்டேஷனுக்குஒருடிக்கட்எடுக்கவேணும். அங்கிருந்துஐந்துமைல்வண்டிவைத்துக்கொண்டோநடந்தோசெல்லவேணும். அவகாசம்இருந்தால்காலையிலும்மாலையிலும்செல்லும்பஸ்ஸிற்காகக்காத்துநிற்கவேணும். தென்காசியில்இறங்கினாலும், குற்றாலத்தில்தங்கிஇருந்தாலும்அங்கிருந்துகாலையிலும்மாலையிலும்செல்லும்பஸ்களிலும்செல்லலாம். சொந்தக்கார்உடையவர்கள்என்றால்ஜாம்ஜாம்என்றுகாரிலேயேசென்றுமலையடிவாரத்தில்இறங்கலாம்.
அதன்பின்மலைஏறவேணும். மலையடிவாரத்தில்ஒருபெரியமண்டபம். அதில்ஒருகோயில். அங்குஇருப்பவர்தான்வல்லபைகணபதி. எல்லாம்வல்லசக்தியையேதன்தொடைமீதுதூக்கிவைத்துக்கொண்டிருப்பார்அவர். அவரைக்கண்டதும்நமக்குவடநாட்டுஞாபகம்தான்வரும். வடநாட்டில்கார்த்திகேயன்கட்டைபிரமச்சாரி, கணபதிதான்சித்திபுத்திஎன்னும்இருவரைமணந்தவர். அதேபோலத்தான்திருமலையிலும்கணபதிதான்வல்லபையுடன்இருக்கிறார். அவர்தம்பிதிருமலைமுருகனோதனித்தேநிற்கிறான். வல்லபைகணபதியைவணங்கிவிட்டுமலைமேல்ஏறவேணும்.
முன்னர்அமைத்திருந்தபாதையில் 544 படிகளேஇருந்தன. சிலபகுதிகள்செங்குத்தாகஏறவேண்டியிருக்கும். ஆனால்இன்றோநன்றாகவளைத்துஏறுவதற்குவசதியாகபடிக்கட்டுகள்கட்டிவைத்திருக்கிறார்கள். இப்பொழுதுமொத்தம் 615 படிகள்இருக்கின்றன. பழனிமலைஏறும்தூரத்தில்பாதிதான். திருத்தணிமலைஏறுவதுபோல்இரண்டுபங்குஏறவேணும்.
ஆனால்கொஞ்சம்சிரமப்பட்டுபழையபடிக்கட்டுக்களில்ஏறினால், மலைமேல்உள்ளஉச்சிப்பிள்ளையாரையும்வணங்கிவிட்டு, திருமலைமுருகனைவணங்கக்கோயிலுள்செல்லலாம். புதியபாதையில்சென்றால்நேரேகோயில்வாயிலுக்கேவந்துசேர்ந்துவிடலாம். கோயிலுள்நுழையுமுன்கோயிலைஒருசுற்றுசுற்றலாம். அப்படிச்சுற்றினால்கோயிலின்கன்னிமூலையில்தான்ஆதிப்புளியமரமும்அதன்அடியில்உத்தண்டவேலாயுதமும்,’ ஆதிமூலநிலையமும்இருக்கும்.
அங்குநம்வணக்கத்தைச்செலுத்திவிட்டு, அதற்குமேற்புறத்திலுள்ளபூஞ்சுனையையும்பார்த்துவிட்டுகோயிலைச்சுற்றிக்கொண்டுதிரும்பவும்கோயில்வாயிலுக்கேவந்துசேரலாம். பிராகாரம்முழுவதும்நல்லசிமெண்ட்தளம்போட்டுவைத்திருக்கிறார்கள். இனிகோயிலுள்நுழையலாம். இங்குள்ளகோயில்அமைப்புதிருச்செந்தூர்செந்திலாண்டவன்சந்நிதியைப்போலத்தான். திருமலைமுருகன்கிழக்குநோக்கியும்சண்முகன்தெற்குநோக்கியும்நிற்கிறார்கள்.
ஆதலால்முதலில்நாம்கோயிலுள்சண்முகவிலாசத்தின்வழியாகவேநுழைவோம். அங்குதான்வசந்தமண்டபம், பெரியஅளவில்இருக்கிறது. அங்குஒருதூணின்உச்சியில்குழந்தைமுருகனைஅன்னைபார்வதிதன்மடியில்வைத்துக்கொண்டிருக்கும்ஒருசிலைஇருக்கும்.
அதற்குஎதிர்ப்பக்கத்தில்உயரமானஇடத்திலேசிவகாமிஆத்தாளின்சிலையும்வைத்திருக்கிறார்கள். அவளுக்குஅருள்புரியவேகுழந்தைமுருகன்அவசரமாகஅன்னைமடியிலிருந்துஇறங்கமுயல்கிறானோஎன்னவோ. இருவரையும்வணங்கிவிட்டேஉள்ளேசென்றால்உள்பிராகாரத்திற்குவருவோம். அதையும்கடந்துஉள்ளேசென்றால்ஒரேசமயத்தில்திருமலைமுருகனையும், வள்ளிதெய்வயானைசகிதம்மஞ்சத்தில்எழுந்தருளியிருக்கும்சண்முகனையும்தரிசிக்கலாம்.
திருமலைமுருகன்கம்பீரமானவடிவினன். சுமார்நான்குஅடிஉயரத்தில்நல்லசிலாவிக்கிரகமாகநிற்கிறான். அவன்தனதுவலதுதோளில்ஒருசெப்புவேலையும்ஏந்தியிருக்கிறான். கருணைததும்பும்திருமுகம்.
அதனால்தான்அவன்சிறந்தவரப்பிரசாதியுமாகஇருக்கிறான். சண்முகன்மிகச்சிறியவடிவினனே. அவனுக்கும்அவன்துணைவியாருக்கும்ஆடைகள்உடுத்து, அவர்கள்உருவம்முழுவதையுமேமறைத்துவைத்திருப்பார்கள்அர்ச்சகர்கள். அவன்மஞ்சம்மிகச்சோபையோடுவிளங்கும். முருகன்சந்நிதியில்விழுந்து . வணங்கிஎழுந்தால்அர்ச்சகர்விபூதிப்பிரசாதத்தைஇலையில்வைத்தேகொடுப்பார்.
இப்படிஇலைவிபூதிகொடுப்பதற்கென்றேசொக்கம்பட்டிஜமீன்தாராயிருந்தஒருவர் 12 கோட்டைநன்செய்நிலங்களைமானியமாகவிட்டிருந்தாராம். முருகனுக்குத்தினசரிஎட்டுக்காலபூஜைநடக்கிறது. ஒவ்வொருபூஜைக்கும்தனித்தனிநைவேத்தியங்கள். உண்டு. பணம்கொடுத்துநைவேத்தியங்களைஅருந்திநம்வயிற்றுப்பசியையும்தீர்த்துக்கொள்ளலாம். ஆத்மப்பசிதான்முருகனைவணங்கிஎழுந்ததுமேதீர்ந்திருக்குமே!
முருகனையும் – சண்முகனையும்வணங்கிவிட்டுஉட்பிராகாரத்தைச்சுற்றினால், ஈசான்யமூலையில்ஒருகம்பீரமானவடிவம்நிற்கும். எட்டஇருந்துபார்த்தால்அதுவும்முருகனோஎன்றேநினைக்கத்தோன்றும். ஆனால்அதுசிவனதுபைரவமூர்த்தம்என்பார்கள். அதற்குரியசுணங்கள்அங்கிருக்கமாட்டான். இந்தபைரவன்மிக்கவரசித்திஉடையவராம். அதனால்அவருக்குவடைமாலைசாத்திவழிபடுகிறார்கள்பக்தர்கள்.
மேலும்அவரேஅக்கோயிலின்பிரதானநிர்வாகி, சந்நிதிவாயில்களைஎல்லாம்பூட்டி, சாவியைஅவர்முன்புகொண்டுபோய்வைத்துவிடுவார்கள். அதன்பின்கோயிலையும்அங்குள்ளசொத்துகளையும்கண்காணிப்பதுஅவருடையபொறுப்பு. கோயிலைவிட்டுவெளியேவரும்போதுஒருசிறுமஞ்சத்தில்எழுந்தருளியிருக்கும்திருமலைக்குமரனின்செப்புப்படிமத்தையும்பார்த்துவிடவேண்டும். ஒன்றரைஅடிஉயரமேஉள்ளவடிவம்தான்என்றாலும்மிக்கஅழகானவடிவம் – இங்குகோயிலுக்குராஜகோபுரம்கிடையாது. முருகனும்பால்யவயதேஉடையவன்ஆனதால்வள்ளிதெய்வயானைசந்நிதிகளும்கிடையாது.
திருமலைமுருகன்நல்லஇலக்கியரஸிகன்என்றுதெரிகிறது. அவனைத்தனதுதிருப்புகழ்பாக்களில்அருணகிரியார்பாடிஇருக்கிறார்.
எனதுஉயிர்க்குஉயிர்ஒத்தநவநீதா
சிவாகப்பரமற்குஇளையோனே
தினைவனத்தெரிவைக்குஉரியோனே
திருமலைக்குமரப்பெருமானே
என்பதுபாடல். எனக்குஅருணகிரியார்பேரில்பொல்லாத்கோபம்வருகிறது. அவன்வள்ளியைக்கண்ணெடுத்தும்பாராதஇளவயதினன்என்றாலும்அவனுக்குஅவளேஉரியவள்என்றுகோடிகாட்டுகிறார். சரி, இதுஇருக்கட்டும். மங்கைப்பருவத்தின்அழகெல்லாம்திரண்டிருக்கும்வள்ளியை, தெரிவைஎன்றுகிழவியாக்கிவிடுகிறாரேஅருணகிரியார்என்பதுதான்என்கோபத்திற்குக்காரணம். குறிஞ்சிக்கிழவனுக்குஏற்றகிழவியாகஇருக்கட்டும்வள்ளி, என்றுநினைத்தாரோஎன்னவோ! இன்னும்திருமலைமுருகன்பிள்ளைத்தமிழுக்குஉரியவனாகவும்இருந்திருக்கிறான். குறவஞ்சி, நொண்டிநாடகம், பள்ளு, காதல், பிரபந்தங்களும், இந்தமுருகனைப்பாட்டுடைத்தலைவனாகவைத்தேபாடப்பட்டிருக்கின்றன.
ஐவர்சகாயன், மருகன்
திருமலைஆறுமுகத்
தெய்வசுகாயமுண்டே,
வருமோகொடுந்தீவினையே
என்றுபெரியவன்கவிராயர்பள்ளில்பாடிஇருக்கிறார். அத்தகையஉறுதியானஉள்ளத்தைஅந்தமுருகன்அளிக்கக்கூடியவன்என்பதற்காகவேஒருநடைஅவன்சந்நிதிக்குச்செல்லலாம்.
ஒன்றேஒன்று, சொல்லமறந்துவிட்டேனேஎனதுகுடும்பத்தின்குலகுருவாய்விளங்கியவர்திருப்புகழ்சாமிஎன்னும்வண்ணச்சரபம்முருகதாசசுவாமிகள். அவர்திருமலைமுருகனிடத்துஆராதகாதல்உடையவர். கிட்டத்தட்டநூறுவருஷங்களுக்குமுன்திருமலையில்ஏறிஇருக்கிறார். திருமலைமுருகனைவணங்கிஇருக்கிறார்.
மலைமீதிருந்துகீழேதன்உடலைஉருட்டியிருக்கிறார். குமரனும். அந்தஉடலுக்குயாதொருதீங்கும்நேரிடாவண்ணம்காத்திருக்கிறார்.. இதைஅவரேபாடுகிறார்.
வடதிசையில்தலைவைத்து
மறலிதிசைகால்நீட்டி
உடலைஅந்தத்திருமலையின்உச்சியில்நின்றுஉருட்டிவிட்டேன்.
விடலைஇடும்தேங்காய்போல்
வேறுபட்டுச்சிதறாமல்
மடமடெனக்கொண்டுஆங்கோர்
மண்தரையில்விட்டதுவே
இந்தப்பாடலைப்படித்துக்கொண்டேதிருமலையினின்றும்இறங்கினேன்நான். எனக்குஎன்உடலைஉருட்டத்தைரியம்இல்லை. ஆனால்அங்குஅடித்தகாற்றில், நான்அணிந்திருந்தமூக்குக்கண்ணாடிகழன்றுபடிகளில்உருண்டது. சரி, கண்ணாடிஉடைந்திருக்கும், பிரேமாவதுமிஞ்சட்டும்என்றுஆள்அனுப்பிஉருண்டகண்ணாடியைத்தேடிஎடுத்துவரச்சொன்னேன்.
என்னஅதிசயம்! கண்ணாடிஉடைந்துசிதறாமல்அப்படியேஇருந்தது. அந்தக்கண்ணாடியைஅணிந்துகொள்வதில்மிகுந்தஆனந்தம்அடைகிறேன். என்குருநாதர்ஆசியையும்திருமலைமுருகன்அருளையும்நினைந்துநினைந்துமகிழ்கின்றேன்.