குருவாயூர் அப்பன்
சித்திரைவிஷுஎன்னும்சித்திரைமாதப்பிறப்புதமிழ்வருஷப்பிறப்பாகக்கருதப்படுகிறது. என்றாலும்தமிழ்மக்கள்பொங்கலைக்கொண்டாடுகிறஅளவுக்குஇந்தத்தமிழ்வருஷப்பிறப்பைக்கொண்டாடுகிறதில்லை. ஆனால்மலையாளிகளுக்கேசிறப்பானவிழாஇந்தவிஷுதான். வருஷப்பிறப்பைஅவர்கள்எவ்வாறுகொண்டாடுகிறார்கள்தெரியுமா! அதற்குமுந்தியநாள்இரவேவீட்டையெல்லாம்நன்றாகக்கழுவிசுத்தம்செய்துவீட்டின்நடுக்கூடத்தில்அரிசிகாய்கறிகளைஎல்லாம்சேமித்துவைத்துஅத்துடன்பட்டுப்புடவைகள், தங்கநகைகளையும்வைத்து, குத்துவிளக்குகளும்ஏற்றிவிடிந்துஎழுந்ததும்கண்ணைமூடிக்கொண்டேஇந்நடுக்கூடத்திற்குவந்துமுதல்முதல்இந்தநல்லசாமான்களையேபார்ப்பர்.
வீட்டில்உள்ளகுழந்தைகளைஎல்லாம்வீட்டில்உள்ளபெரியஅம்மாகண்களைகைகளால்பொத்திஅழைத்துவந்துசாமான்கள்வைத்திருக்கும்நடுக்கூடத்திற்குவந்தபின்னே, கண்களைத்திறப்பர். வழியில்கண்களைத்திறந்துமற்றசாமான்களைப்பார்த்துவிடக்கூடாதல்லவா? இந்தச்சாமான்களோடுஅவரவர்வீட்டில்பூஜையில்இருக்கும்படங்களையும்சேகரித்துவைத்திருப்பர்.
இவற்றையெல்லாம்விட, தமிழ்வருஷப்பிறப்பன்றுமுதல்முதல்குருவாயூரப்பன்முகத்தில்விழிப்பதுஅந்தவருஷம்முழுவதும்நல்லபலனைத்தரும்என்றநம்பிக்கைகாரணமாக, அதற்குமுந்தியேமக்கள்ஆண்களும்பெண்களும்ஆயிரக்கணக்காககுருவாயூர்கோவிலில்சென்றுஅதன்பிராகாரங்களில்படுத்துக்கிடப்பர். காலைஇரண்டுஅல்லதுமூன்றுமணிக்குகோயில்கதவம்திறந்ததும்கண்ணைமூடியபடியேவிழுந்தடித்துஓடிவந்துகுருவாயூரப்பனைதரிசித்துவிட்டேமற்றவர்களைப்பார்ப்பார்கள். இப்படிப்பார்க்கிறவர்கள்ஏதோசாதாரணபொதுமக்கள்என்றுமாத்திரம்எண்ணவேண்டாம். பெரியபெரியஉத்தியோகஸ்தர்கள், பெரியவீட்டுப்பெண்கள்கூடவிஷுஅன்றுகுருவாயூரப்பன்தரிசனத்திற்குக்காத்துக்கிடப்பர். அவரவர்அணிந்திருக்கும்துண்டுகளையோ, சேலைமுந்தானையையோவிரித்துத்தான், அதில்படுத்துநித்திரைசெய்வர்.
இந்தவிஷுதரிசனம், மிக்கசிறப்பாகஆண்டுதோறும்நடக்கிறது. நாளும்கூட்டம்அதிகரித்துக்கொண்டுவருகிறது. குருவாயூரிலிருந்துதொலைதூரத்தில்இருக்கும்நமக்கெல்லாம்விஷுஅன்றுகுருவாயூரப்பனைக்கண்டுதரிசிக்கும்வாய்ப்புகிடைப்பதென்பதுஎளிதானகாரியம்இல்லைதான்என்றாலும்அவகாசம்கிடைக்கும்பொழுதெல்லாம்குருவாயூர்செல்லலாம். குருவாயூரப்பனாம்பரந்தாமனைக்கண்டுதரிசிக்கலாம். பெறற்கரியபேறுகள்எல்லாம்பெறலாம். அத்தகையவாய்ப்பினைஉங்களுக்குஏற்படுத்திக்கொடுக்கவேகுருவாயூரப்பனைப்பற்றிஒருசிலவார்த்தைகள்சொல்லி, அவனிடத்துஆற்றுப்படுத்தவேஇக்கட்டுரை.
குருவாயூர்இன்றையகேரளராஜ்ஜியத்தில்நடுநாயகமானஇடத்தில்இருக்கிறது. வடக்கேவடமங்கலமும்தெற்கேதிருவாங்கூர்கொச்சியும்இருக்க, இரண்டுக்கும்இடையிட்டஇடத்தில்இருக்கிறது. வடக்கேஇருந்துவருவோர்ரயிலில்வந்தாலும்காரில்வந்தாலும்ஷோரனூர்எல்லாம்கடந்துதிருச்சூர்வந்துசேரவேணும். அங்கிருந்துமேற்குநோக்கி, 15, 15 மைல்போய்அதன்பின்தெற்கேதிரும்பி, நான்குமைல்போனால்குருவாயூர்போய்ச்சேரலாம்.
போகிறவழிஎல்லாம்ஒரேதென்னம்சோலைகள்தாம், கண்ணுக்குமிகவும்இனிமையானபசுமைநிறைந்தகாட்சியாகஇருக்கும். கோயிலுக்குஇடப்புறமாகவேசென்று, அங்குதேவஸ்தானத்தார்கட்டிவைத்திருக்கும்தேவஸ்தானச்சத்திரத்திற்குமுதலில்போய்ச்சேரலாம். சேவார்த்திகள்பெருகப்பெருகசத்திரத்துவசதிகளும்பெருகிக்கொண்டேஇருக்கின்றன. அங்குதங்கி, ஸ்நானம்எல்லாம்முடித்துவிட்டு, உடுத்தியவேட்டிதுண்டுடனேதான்கோயிலுக்குபுறப்படவேணும்.
கோயில்சிறியகோயில்தான்என்றாலும், கோயில்வாயிலில்ஒருயானையும், கோயில்பிராகாரத்தில்மூன்றுநான்குயானைகளையும்பார்க்கலாம். வேழம்உடைத்துமலைநாடுஎன்றல்லவாபாடினாள்ஔவை. யானைகளையேஎழுந்திருத்துமுதலானகாரியங்களுக்குஉபயோகப்படுத்துவதால்ஒன்றுக்குநான்காகயானைகள்இருக்கின்றனஇங்கே. கோயில்வாயிலில்எல்லாம்கோபுரம்ஒன்றும்இருக்காது. மரத்தால்தட்டுத்தட்டாகக்கட்டிஓடுபோட்டகூரைவேய்ந்திருக்கும். அந்தக்கூரையையும்முந்திக்கொண்டுபெரியதகரக்கொட்டகைஒன்றுஇருக்கும்.
இந்தக்கொட்டகையைக்கடந்துவாயிலுக்குவந்துஅதனையும்கடந்தேஉள்ளேவரவேணும், பகலானாலும்சரி, இரவானாலும்சரி, கோயிலுள்கூடிஇருக்கும்மக்கள்எல்லாம் ‘நாராயணா, நாராயணா‘ என்றுபகவந்நாம்ஸ்மரணைசெய்துகொண்டேநிற்பர். இந்தநாராயணஸ்மரணையைத்தவிரவேறுஒலியையேகேட்கமுடியாது. அன்றேபாடினானேதிருமங்கைமன்னன்,
குலம்தரும், செல்வம்தந்திடும்
அடியார்படுதுயர்ஆயினஎல்லாம்
நிலந்தரம்செய்யும், நீள்விகம்புஅருளும்
அருளொடுபெருநிலம்அளிக்கும்
வலந்தரும்மற்றும்தந்திடும்
பெற்றதாயினும்ஆயினசெய்யும்
நலம்தரும்சொல்லைநான்கண்டுகொண்டேன்
நாராயணாஎன்னும்நாமம்.
ஆம், “நலம்தரும்சொல்லைநான்கண்டுகொண்டேன்”நாராயணாஎன்னும்நாமம்என்றுஎக்களிப்போடுதிருமங்கைமன்னனால்எப்படிப்பாடமுடிந்ததுஎன்றுஅறியவிரும்பினால், குருவாயூரப்பன்சந்நிதிக்குச்சென்றால்போதும். கோயிலுள்சென்றதும்தீபஸ்தம்பம்இருக்கும்கீழ்பக்கத்துநடைபாதைக்குவந்துசேருவோம். இப்படிகோயிலைச்சுற்றிஇருக்கும்பிராகாரத்தையேமதிலகம்என்கின்றனர். அதன்தென்கீழமூலையில்தான்கூத்தம்பலம்இருக்கிறது.
அங்குதான்மலையாளநாட்டிற்கேசிறப்பானகூத்துகள்நடக்கின்றன. விசேஷகாலங்களில்மற்றகாலங்கள்பாகவதபாராயணங்களும்நடக்கும். இதைக்கடந்துமேற்கேதிரும்பினால்அங்குஒருசாஸ்தாசந்நிதி. அங்குவணக்கம்செய்துவிட்டுபிராகாரத்தைஒருசுற்றுச்சுற்றிக்கொண்டுவந்தால், திரும்பவும்கீழ்நடைபாதைக்குவந்துகோயிலுள்நுழையலாம். இந்தப்பாதைகுறுகலாகவேஇருக்கும். இதற்குஇரண்டுபக்கங்களிலும்உள்ளமண்டபங்களேவாயில்மண்டபங்கள். இவைகளைக்கடந்தேஉள்கோயில்செல்லவேணும்.
இதுதான்உள்பிராகாரம். இந்தப்பிரகாரத்தின்கன்னிமூலையில்விநாயகருக்குஒருசந்நிதியிருக்கிறது. இங்குள்ளஆரத்துக்கெட்டிபடிஎன்றஇடத்தில்இருந்துதான்மேல்பத்தூர்பட்டாத்திரிஎன்பவர்அவருடையபிரபலமான ‘நாராயணீயம்‘ என்றபிரார்த்தனைநூலைஎழுதினர்என்பர்.
இவற்றைஎல்லாம்கடந்தபின்திரும்பவும்கீழ்வாயில்வந்துகருவறையில்உள்ளகுருவாயூரப்பனைத்தரிசிக்கவேணும். குருவாயூரப்பன்சுமார்இரண்டடிஉயரமேஉள்ளசிறியவடிவினன்தான். புஷ்பாலங்காரம்பண்ணிவைத்திருப்பார்கள்.
இரவுவேளைகளில்சென்றால்விளக்கொளியில்பிரமாதஅழகுடன்காட்சிதருவான். ஆனால்அவனை, அவன்மேனியை, அலங்காரமில்லாதமேனியைக்காணவிரும்பினால், அதிகாலைமூன்றுமணிக்கேகோயில்செல்லவேணும். நடைதிறந்ததும், இரவுஇருந்தபுஷ்பஅங்கிசேவையிலும்காணலாம். பின்னர்மலர்களைக்களைந்துதைலக்காப்பிடும்போதுமேனியின்முழுஅழகையுமேகாணலாம். சங்காபிஷேகம், மலர்நைவேத்தியம்எல்லாம்நடந்தபின்வாயில்கதவைஅடைத்துவிடுவார்கள்.
ஆனால்காலைஏழுமணிசுமாருக்கு, யானைமீதுகுருவாயூரப்பனின்தங்கச்சிலைஒன்றைஏற்றி, மதிலகத்தில்பவனிவருவர். அப்போதுபன்னிரண்டுவிளக்குஏந்திச்செல்வர். இவ்விளக்குஏந்திச்செல்லும்உரிமைசிலஅம்பலவாசிக்குடும்பத்தினர்க்கேஉண்டு. இதுமுடிந்தபின்தான்க்ஷீரஅபிஷேகம்என்னும்பாலபிஷேகம்நடைபெறும். இதுகாலை 8.30 மணிக்குஆரம்பமாகும். இந்தக்ஷரஅபிஷேகம், நவகாபிஷேகம்பந்தாட்டிநைவேத்தியம்பூசைகள்எல்லாம்காலை 9.30 மணிவரைநடக்கும். அடுத்தபூஜைஉச்சிக்காலம்தான். மத்தியானம் 12.30 மணிக்குத்தான். அதன்பின்கோயில்நடையைப்பூட்டிவிடுவார்கள். திரும்பவும்மாலை 5.30 மணிக்குத்தான்திறப்பார்கள்.
அப்போதும்ஒருஸ்ரீபலிஊர்வலம்நடக்கும். இரவு 8 மணிக்குநைவேத்தியம்பூசைஎல்லாம்நடக்கும். கடைசியாகதிருப்புகைகொழுத்திஇரவு 10.30 மணிக்கேநடைசாத்துவார்கள். கோயிலில்பிரசாதமாகசந்தனமும்மலர்களும்தான்கொடுப்பர். பால்பாயசம், அப்பம்முதலியவைகளும்கிடைக்கும். இவைகளைவிலைகொடுத்தேவாங்கவேணும்.
இங்குநடக்கும்பிரார்த்தனைகளில்சிறப்பானதுதுலாபாரமும், குழந்தைகளுக்குஅமுதூட்டுதலும், திருமணம்செய்தலுமே. தண்ணீர்முதல்நவரத்தினம்வரை, ஆளின்எடைக்குஎடைதருவதாகப்பிரார்த்தித்துக்கொள்வர். அப்படியேபிரார்த்தனைசெய்தவரையும்அவர்கொண்டுவரும்பொருளையும்நிறைபோட்டுகோயில்அதிகாரிகள்பெற்றுக்கொள்வர். பிறந்தகுழந்தைக்குஒருவயதானதும், அமுதூட்டவும், குருவாயூரப்பன்கோவிலைநாடிவருபவர்பலர். கோவிலில்கொடுக்கும்தீர்த்தம்நைவேத்யம்முதலியவற்றைமுதலில்குழந்தைக்குக்கொடுத்து, அதன்பின்அன்னம்கொடுப்பர். திருமணங்களையும்குருவாயூரப்பன்சந்நிதியிலேயேநடத்துவர்சிலர். இதற்கெல்லாம்கோவிலுக்குகட்டணங்களும்செலுத்தவேணும்.
எல்லாம்சரிதான். குருவாயூரப்பன்அருளைப்பற்றிசிறப்பாகச்சொல்வார்களே, அதைப்பற்றிஒன்றுமேசொல்லக்காணோமேஎன்றுதானேகேட்கிறீர்கள். ஆதியிலே, இங்குஎழுந்தருளியிருக்கும்மூர்த்தியைபிரம்மாமகாவிஷ்ணுவுக்குக்கொடுத்திருக்கிறார். பின்னர்அதைஅவர்கச்யபருக்குக்கொடுக்கஅவர்அதனைகண்ணனைப்பெற்றெடுத்ததேவகிவாசுதேவருக்குத்கொடுத்தார் – என்பதுபாகவதவரலாறு. பின்னர்உத்தவர்இதனைப்பெற்றிருக்கிறார். அதன்பின்கலியுகத்தில்மக்கள்எல்லாம்உய்யஉத்தவர்குருவிடமும்வாயுவிடமும்கொடுத்திருக்கிறார்.
இவர்களேஇந்தநாராயணனைமான்மியூர்என்றுஅன்றுவழங்கியஇந்தப்பிரதேசத்தில்கொண்டுவந்துபிரதிஷ்டைசெய்திருக்கின்றனர். இப்படிகுருவும்வாயுவும்சேர்ந்துகொண்டுவந்தகாரணத்தாலேயேஇவன்குருவாயூர்அப்பன்என்றபெயரில்இங்குஎழுந்தருளியிருக்கிறான். சந்திரவம்சத்துஅரசனானபரீக்ஷித்துபாம்புகளைப்பழிவாங்க, அந்தபரீஷித்துவின்மகனானஜனமேஜயன்நாகங்களுக்குஅஞ்சிவாழ்கிறான். நாகயக்ஞமேசெய்கிறான். கடைசியில்அவனை, குட்டம்என்னும்நோய்பிடித்துக்கொள்கிறது. என்னபண்ணியும்நீங்காதகுட்டம்குருவாயூரப்பனைவழிபட்டதாலேதீர்ந்ததுஎன்பதுவரலாறு.
இந்தகுருவாயூரப்பனுக்குமதில்களோடுகூடியகோயில்எடுப்பித்ததுஒருபாண்டியமன்னனே. அவனும்பாம்பொன்றால்தீண்டப்படுவான்என்றுபுரோகிதர்கள்சொல்ல, அவன்குருவாயூரப்பனைவணங்கிஅந்தசாபவிமோசனம்பெற்றிருக்கிறான். இன்னும்குருவாயூரப்பனின்அற்புதலீலைகள்அனந்தம்.
திப்புசுல்தான்இப்பக்கம்படையெடுத்துவந்தபோது, அவனைத்தடுத்துநிறுத்தும்ஆற்றல்பெற்றிருந்தவர். குருவாயூரப்பன் – என்பார்கள். அவன்இக்கோயிலுக்குஏற்படுத்தியிருக்கும்நிபந்தங்கள்அனந்தம். அக்காலத்தில்ஹரிஜனங்களைகோயிலுள்அனுமதிப்புதில்லை. ஏகாதசிஅன்றுமட்டும்இந்தவிதிவிலக்குஉண்டு. ஒருஏகாதசிஅன்றுஹரிஜனங்கள்பந்திபந்தியாககோயிலுள்நுழையும்போதுஒருவயோதிகபிராம்மணர்வருந்தினாராம். அச்சமயம்கோயிலுள்இருந்தவில்வமங்களசாமியார்அந்தஅந்தணரைத்தொடஹரிஜனங்கள்ஒவ்வொருவருமேஒவ்வொருகுருவாயூர்அப்பனாகக்காட்சிகொடுத்தார்களாம்.
இன்னும்பூந்தானம்நம்பூத்ரிஎன்பவர்ஒருபிரார்த்தனைநூலைஎழுதி, அதைநாராயணீயம்பாடியமேல்பத்தூர்பட்டாத்திரியிடம்எடுத்துப்போனபோதுஅதைஅவர்அலக்ஷியப்படுத்திவிட்டாராம். ஆனால், பட்டாத்திரியின்கனவில்குருவாயூரப்பன்தோன்றி, உன்னுடையவியக்தியைவிடநான்பூந்தானத்தின்பக்தியையேமதிக்கிறேன்என்றாராம். இன்னும்ஒருவயோதிகர்தனிவழிபோனபோது, அவரைக்கள்ளர்கள்மறித்துஅவர்உடைமைகளைப்பிடுங்க, அதையெல்லாம்குருவாயூரப்பனேமீட்டுக்கொடுத்தான்என்பர். இன்னும்இதுபோன்றுஎண்ணரியஅற்புதங்களைநிகழ்த்தியவர்தான்குருவாயூரப்பன். மலையாளமக்கள்இந்தஅப்பனை, இக்கலியுகத்தில்கண்கண்டதெய்வமாகவழிபடுவதில்வியப்பில்லை. மலையாளமக்களுக்குமாத்திரம்என்ன, யாதும்ஊரேயாவரும்கேளிர்என்றதமிழனுக்குமேஅவன்கண்கண்டதெய்வம்தான் – அவனைவழிபட்டுப்பேறும்புகழும்அடையஎல்லோருமேவிரையலாம்தானே!